ஸ்குரு ட்ரைவர், கட்டிங் பிளேயர் செய்ய வேண்டிய வேலையை எல்லாம், இத்துனூண்டு நெயில் கட்டரும் செய்யும். அவசரத்துக்கு இந்த குறிப்புகளும் உதவும் தெரிஞ்சு வச்சுக்கோங்க.

nail-cut
- Advertisement -

இந்த நெயில் கட்டரை நகத்தை வெட்டுவதற்கு மட்டும்தான் நாம் பயன்படுத்துவோம். ஆனால் நகம் வெட்டுவதை தவிர்த்து இதில் சில பல வேலைகளை நாம் செய்யலாம். அவசரத்திற்கு நம் வீட்டில் எதுவுமே இல்லை என்றால், இந்த குட்டி நைல் கட்டர் எந்த அளவுக்கு உதவும் என்பதை பற்றிய சின்ன சின்ன வீட்டுக்குறிப்புகளை தெரிந்து கொள்வோமா.

இப்போது குழந்தைகள் விளையாடக்கூடிய பொம்மைகளில் எல்லாம் பின்பக்கம் பேட்டரி போடுவதற்கு ஒரு பாக்ஸ் கொடுப்பாங்க. அதில் சின்ன ஸ்க்ரூ இருக்கும். அந்த ஸ்குருவை கழட்டுவதற்கு சின்ன ஸ்க்ரூ டிரைவரை தான் பயன்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. நெயில் கட்டரில் சிறிய கத்தி போல ஒன்று இருக்கும். அந்த கத்தியை வைத்து சின்ன சின்னதாக பொம்மையில் இருக்கும் ஸ்க்ரூ, ஸ்விட்ச் போர்டில் இருக்கும் ஸ்க்ரூ, டேபிள் ஃபேனில் இருக்கும் ஸ்க்ரூ, இப்படி எல்லா ஸ்குரூவையும் சுலபமாக கழட்டி எடுத்து விடலாம்.

- Advertisement -

அடுத்து கொசுவத்தி ஏற்றுவதற்கு ஊதுபத்தி ஏற்றுவதற்கு எல்லா இடத்திலும், ஊதுவத்தி ஸ்டாண்டை தேட முடியாது. இந்த நைல் கட்டரை ஒரு தட்டின் மேல் வைத்துவிட்டு, அதன் மேல் கொசுவத்தி அல்லது ஊதுவத்தையே பொருத்தி உடனடியாக நிறுத்தி விடலாம்.

திடீரென்று இரண்டு ஒயரையும் கனெக்ஷன் கொடுக்க வேண்டும். ஒயருக்கு மேலே இருக்கக்கூடிய பிளாஸ்டிக்கை கட் பண்ணி எடுக்கணும்னா, கட்டிங் பிளேயரை தான் பயன்படுத்துவோம். ஆனால் நைல் கட்டரை வைத்து அந்த பிளாஸ்டிக்கை மட்டும் லேசாக வெட்டிவிட்டு, உருவி எடுத்தால் பிளாஸ்டிக் வந்துவிடும். ரொம்பவும் அழுத்தம் கொடுத்து ஒயரை, நெயில் கட்டரால் வெட்டினால் உள்ளே இருக்கும் அந்த கம்பியும் கட் ஆகிவிடும். அந்த அளவிற்கு இந்த நெயில் கட்டர் சார்பாக இருக்கும்.

- Advertisement -

அடிக்கடி இப்போதெல்லாம் ஆன்லைனில் இருந்து நமக்கு பார்சல் வருகிறது. அதில் மேலே ஒட்டி இருக்கும் டேப்பை கிழிக்க வேண்டும் என்றால், உடனடியாக கத்தி, கத்திரிக்கோலை தேடுவோம். ஆனால் குழந்தைகள் அந்த பேக்கை பிரிக்கும் போது அந்த கத்தி கத்திரிக்கோல் ரொம்பவும் ஆபத்தை தந்துவிடும். இந்த மாதிரி கிஃப்ட் பேக்கை பிரிக்கும் போது, நெயில் கட்டிருக்கு நடுவே இருக்கக்கூடிய கத்தியை பயன்படுத்துங்கள்.‌ அது அவ்வளவு சார்பாக இருக்காது. ஆனால் அந்த டேப்பை சுலபமாக கழித்து விடும்.

இது மட்டுமல்லாமல் சின்ன சின்ன நூல், மெலிசாக இருக்கும் இரும்பு கம்பி, மெலிசாக இருக்கும் மெட்டல் கம்பி, என்று வலிமைமிக்க பொருட்களை கூட இந்த நெயில் கட்டர் கட் செய்யும். பர்சில் கத்தியை வைத்துக் கொள்வது அவ்வளவு சேஃப்டி கிடையாது. கத்திக்கு பதில் இந்த நெயில் கட்டரை பயன்படுத்தி பாருங்கள். பெண்கள் வெளியே செல்லும்போது ஒரு பூவை இரண்டாக நறுக்குவதற்கு ரொம்பவும் சிரமப்படுவார்கள். கோவிலில் எண்ணெய் தேய்க்கட்டை கட் பண்ணவும் சிரமப்படுவார்கள். அதற்கு கூட இந்த நைல் கட்டரை பயன்படுத்தலாம். எப்பவுமே பாக்கெட்லயும், பர்ஸ்சிலேயும் இந்த சின்ன நைல் கட்டர் வச்சுக்கோங்க. கட்டாயமாக அவசரத்துக்கு இந்த நெயில் கட்டர் உதவி செய்யும்.

- Advertisement -