இந்த ஒரு தீபத்தை ஏற்றுவதன் மூலம் உங்களது தலையெழுத்தே மாறும். ஜாதக கட்டத்தில் பாதகமாக பல வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கும் கிரகங்கள் கூட, உங்களுக்கு சாதகமாக மாறிவிடும்.

sivan

நம்முடைய ஜாதக கட்டத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் தான் நம்முடைய தலையெழுத்தை நிர்ணயிக்கின்றன. இதோடு சேர்ந்து நாம் எந்த நட்சத்திரத்தில் பிறந்தோமோ, அந்த நட்சத்திர பலனும் நம் வாழ்க்கையில் நல்லது கெட்டதை கொடுக்கக்கூடியது தான். ஆக நாம் பிறந்த நட்சத்திரம், நம் ஜாதக கட்டத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்கள் இந்த இரண்டுமே சரியான முறையில் அமைந்திருக்க வேண்டும். கிரகங்கள் என்பது நவகிரகங்களை குறிக்கிறது. நட்சத்திரங்கள் என்றால் அது 27. இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

navagragha-mandhiram

உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்தில் பல தடைகள் ஏற்படுகிறது. உங்களுடைய ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களும் சாதகமாக அமையவில்லை. உங்களுடைய நட்சத்திரமும் உங்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கவில்லை என்றால், உங்கள் வாழ்க்கையில் வரும் தடைகளை தகர்க்க ஆன்மீக ரீதியாக எப்படிப்பட்ட வழிபாட்டினைச் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உங்களுக்கு ஜென்ம நட்சத்திரம் தெரிந்தால், அதாவது நீங்கள் பிறந்த நட்சத்திரம் தெரிந்தால் அந்த நட்சத்திர தினத்தில் இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். தெரியாதவர்கள் மாதத்தில் ஏதாவது ஒரு திங்கட்கிழமை அன்று இந்த பரிகார தீபத்தை ஏற்றலாம். 27 நட்சத்திரங்களையும் நினைத்து, இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். 27 மண் அகல் தீபங்களை எடுத்துக் கொள்ளுங்கள். புதியதாக தான் மண் அகல் தீபங்கள் வாங்க வேண்டும்.

27-natchathram

அந்த மண் அகல் விளக்குகளை தண்ணீரில் ஊற வைத்து, கழுவி உலரவைத்து, எல்லா விலங்குகளுக்கும் மஞ்சள் குங்கும பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அகல் தீபங்களில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு சிவபெருமான் கோவிலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் ஏதேனும் பழமையான சிவன் கோவில்கள் இருந்தால் அந்த கோவிலுக்கு சென்று திங்கட்கிழமை சந்தியா காலத்தில், அதாவது மாலை நேரத்தில் 6 மணி இருந்து 7 மணிக்குள் இந்த 27 தீபத்தை ஏற்றி சிவனை மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

- Advertisement -

நிச்சயமாக உங்களுடைய தலையெழுத்து மாறும். ஜாதக கட்டத்தில் பாதகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கிரகங்களை கூட, உங்களுக்கு சாதகமாக மாற்றக் கூடிய சக்தி அந்த எம்பெருமானுக்கு நிச்சயமாக உண்டு. மாதம் ஒருமுறை என்று, இந்த 27 தீபங்களை எத்தனை முறை ஏற்றலாம்?

neideepam

ஒரு வருடம் தொடர்ந்து இப்படி சிவபெருமானுக்கு முன்பு 27 நட்சத்திரங்களை நினைத்து தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பானது. அப்போது ஒரு வருடத்திற்கு 12 முறை இந்த தீபத்தை நீங்கள் ஏற்ற வேண்டும். உங்களுக்கு வாழ்க்கையில் தீராத துயரங்களுக்கு விடிவு காலம் பிறக்க வில்லை என்றால், தொடர்ந்து மூன்று வருடங்கள் ஏற்றினால் நிச்சயமாக வாழ்நாள் முழுவதும் நல்ல பலனை பெற முடியும்.

Gothumai

இதோடு சேர்த்து வாரந்தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமையன்று உங்களால் முடிந்த அளவு கோதுமையை வாங்கி ஏதாவது ஒரு பிராமணருக்கு தானமாக கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து அடை போல செய்து பசுமாட்டிற்கு சாப்பிடக் கொடுக்க வேண்டும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள், மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்வது நமக்கு நல்ல பலனை கொடுக்கும்.

shivan

வாழ்வில் முன்னேற்றங்களைப் பெற வேண்டுமென்று நினைப்பவர்கள், கொஞ்சம் சிரமப்படாமல் நம்பிக்கையோடு இந்த இரண்டு பரிகாரங்களையும் தொடர்ந்து செய்து வந்தாலே உங்களுக்கு நடக்கும் கெட்ட நேரத்திலும் கூட, பெரிய இழப்புகளை நீங்கள் சந்திக்க வேண்டாம். நல்ல மாற்றங்களை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு தருவதற்கு, இந்த பரிகாரங்கள் துணையாக நிற்கும். நம்பிக்கையோடு செய்தால் நல்ல பலன் உண்டு, என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.