Jothidam : மார்ச் மாதத்தில் உஷாராக இருக்கவேண்டிய நட்சத்திரக்காரர்கள் யார் யார் தெரியுமா ?

nakshatra
- Advertisement -

ஜோதிட சாஸ்திரத்தின் படி மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. இந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும் 4 பாதங்களை கொண்டதாக இருக்கிறது. இதில் ஒரு சில நட்சத்திரங்களில் இருக்கும் பாதங்களில் சில கிரகங்கள் பெயர்ச்சியாகும் போது அது விஷ பாதம் என அழைக்கப்படுகிறது. அப்படி தற்சமயம் எந்தெந்த நட்சத்திரங்களில் விஷ பாத அமைப்பு ஏற்படுகிறது என்றும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

suriyan

இந்தாண்டு 2019 மார்ச் 11ம் தேதியுடன் புதன் கிரகத்தின் விஷ பாதம் முடிவடைந்து விட்டது. தற்போது சூரியன் பூரட்டாதி நட்சத்திரத்தின் 3 ம் பாதமான விஷ பாதத்தில் வருகிற மார்ச் 14ம் தேதி வரை சஞ்சாரம் செய்கிறார். அதற்கு அடுத்த நாளான மார்ச் 15ம் தேதி முதல், புதன் கிரகம் வக்ர கதியில் பூரட்டாதி நட்சத்திரத்தின் 3ம் பாதமான விஷ பாதத்தில் மார்சு 18ம் தேதி வரை சஞ்சாரம் செய்கிறார்.

- Advertisement -

அந்த மார்சு 18ம் தேதியிலிருந்து 21ம் தேதிவரை உத்திரட்டாதி நட்சத்திரத்தின் 1ம் பாதமான விஷ பாதத்தில் சூரியன் பகவான் சஞ்சாரம் செய்கிறார் சஞ்சரிப்பார். அதன் பிறகான காலத்தில் மீன ராசியில் சஞ்சாரம் செய்யும் சூரியனுக்கு விஷ பாதம் கிடையாது என்பது ஜோதிட விதி.

budhan

மேலே கூறப்பட்ட இரண்டு கிரகங்களின் நிலையால் அனைவருமே தேவையற்ற பயம் கொள்ள வேண்டியதில்லை என்பது ஜோதிடர்களின் பதிலாகும். ஜாதகத்தில் சூரியன் மற்றும் புதன் கிரக திசை நடப்பவர்கள் தங்களின் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளிலும் சற்று கூடுதலான கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பது ஜோதிடர்களின் அறிவுரையாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
செவ்வாய் திசை பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Nakshatras warning in Tamil. It is also called as Surya bhagavan in Tamil or Budhan bhagavan in Tamil or Surya budhan in Tamil or Visha patha natchathiram in Tamil.

- Advertisement -