நம்முடைய கர்ம வினைகளை நீக்கி நமக்கு மோட்சத்தை தரக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவர் தான் சிவபெருமான். அதனால் சிவபெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கர்ம வினைகள் தீரும். ஒருவருக்கு கர்ம வினைகள் தீர்ந்துவிட்டாலேயே அவருடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும். ஏனென்றால் கர்ம வினைகளின் அடிப்படையில் தான் நம்மளுடைய வாழ்க்கை அமையும் என்றும் அதனால் தான் நம்முடைய வாழ்க்கையில் நாம் பலவிதமான கஷ்டங்களை அனுபவிக்கிறோம் என்றும் ஆன்மீகத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சிவபெருமானை எந்த பதிகத்தை கூறி வழிபட்டால் நல்ல வேலை கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
நல்ல வேலை கிடைக்க பதிகம்
ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவானால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமாயின் அவருக்கு வேலை தொடர்பான பிரச்சனைகள் என்பது உண்டாகும். நல்ல வேலையில் கை நிறைய சம்பளத்தை வாங்கிக் கொண்டு இருப்பவர்களுக்கு திடீரென்று வேலை பறிபோகும் வாய்ப்புகள் உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுடைய குடும்பத்தை வழி நடத்துவதற்கு அடுத்த கட்டமாக வேறு ஏதாவது ஒரு வேலையை தேட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பார்கள். அப்படி எவ்வளவு வேலைகளை தேடினாலும் அந்த வேலைகள் அமையாமல் கஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கக்கூடியவர்கள் சிவபெருமானை நினைத்து இந்த ஒரு பதிகத்தை படித்தால் போதும்.
இந்த பதிகமானது திருவெண்காடு வேதாரண்யேஸ்வரரை நினைத்து பாடப்பட்ட பதிகம் ஆகும். இந்த பதிகத்தை முழுமனதோடு வீட்டு பூஜை அறையில் தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் சிவபெருமானுக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து சிவபெருமானை முழுமனதோடு நினைத்து படிக்க வேண்டும். இயன்றவர்கள் திருவெண்காடு சென்று ஈஸ்வரனை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. இவ்வாறு நாம் பதிகத்தை பாராயணம் செய்யும்பொழுது சிவபெருமானுக்கு ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தை வைக்க வேண்டும். எந்தவித நெய்வேத்தியத்தையும் அந்த நேரத்தில் செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரை வைத்தாவது இந்த பதிகத்தை படிக்க வேண்டும்.
இந்த பதிகத்தை படித்து முடித்த பிறகு இந்த தண்ணீரை குடித்து விடவேண்டும். தொடர்ச்சியாக 48 நாட்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் சிவபெருமானை நினைத்து தீபமேற்றி இந்த பதிகத்தை படிப்பவர்களுக்கு அவர்கள் என்ன கோரிக்கை வைத்து படிக்கிறார்களோ அந்த கோரிக்கை விரைவிலேயே நிறைவேறும். முக்கியமாக புதன் பகவானால் ஏற்பட்ட எப்பேற்பட்ட பாதிப்பாக இருந்தாலும் அந்த பாதிப்புகள் விலகும் என்று கூறப்படுகிறது.
பதிகம்
“கண்காட்டு நுதலானுங்
கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும்
பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும்
பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும்
விடைகாட்டுங் கொடியானே.”
பாடல் விளக்கம்:
வெண்காட்டில் உறையும் பெருமான், நுதலிடைக் கண் கொண்டவன்: கையில் கனல் ஏந்தியவன்: உமையம்மையை ஒரு கூறாகக் கொண்ட திருமேனியன்: பிறையணிந்த சடைமுடியினன்: பண்ணில் இறை வடிவானவன்: பயிரை வளர்க்கும் மேகமானவன்: விடை ஏந்திய கொடியை உடையவன்.
இதையும் படிக்கலாமே: குழந்தைகள் கல்வி அறிவில் சிறந்து விளங்க
முழு மனதோடு சிவபெருமானை நினைத்து இந்த ஒரு பதிகத்தை படிப்பவர்களுக்கு சிவபெருமானின் அருளால் அவர்களுடைய கர்ம வினைகள் நீங்குவதோடு புதன் பகவானால் ஏற்பட்ட பாதிப்புகளும் விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.