நல்ல நாளும், கிழமையுமாக குடும்பத்தில் பிரச்சினை வருகிறதா? அப்படின்னா இத செஞ்சுட்டு பூஜையை ஆரம்பித்து பாருங்க ஒரு பிரச்சனையும் வராது!

fight-vinayagar-coconut
- Advertisement -

கோள்கள் செய்யாதது கூட நாளும், கிழமையும் செய்யும். நவகிரகங்கள் செய்யாத ஒரு விஷயத்தை கூட நல்ல நாளும், நல்ல கிழமையும், நல்ல நேரமும் நமக்கு செய்யும் என்பது இதன் அர்த்தமாகும். பூஜை செய்யக் கூடிய அந்த நல்ல நாள், விசேஷங்களில் கூட குடும்பத்தில் சிலருக்கு சண்டை, சச்சரவுகள் வரத் தொடங்கிவிடும். இப்படியான பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு பரிகாரமாக என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சில இல்லங்களில் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் சரியாக கணவன்-மனைவிக்குள் சண்டை வந்துவிடும். முந்தைய நாள் வரை ஒற்றுமையாக இருந்த தம்பதிகள் திடீரென சண்டை போட்டுக் கொண்டு அந்த நாளே நிம்மதி இல்லாமல் போய்விடும். சரியாக பூஜை செய்ய முடியாமல் இறைவனுக்குரிய பணிவிடைகளை முழு மனதுடன், ஈடுபாட்டுடன் நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.

- Advertisement -

பூஜை, புனஸ்காரங்களை செய்வது என்பது நம் குடும்ப நன்மைக்காக தான். அப்படி இருக்கும் பொழுது அந்த பூஜையை நம்மால் சரிவர நிறைவேற்ற முடியாமல் மனம் சஞ்சலப்படுகிறது என்றால் அங்கு துர்தேவதைகளின் ஆதிக்கம் அதிகரிக்கிறது என்பது அர்த்தமாகிறது. வீட்டில் இருக்கும் இத்தகைய சக்திகள் துர்தேவதைகளை விரட்டி அடிக்க கூடிய வல்லமை விநாயகருக்கு உண்டு.

முழு முதற்கடவுளான விநாயகரை வழிபட்ட பின்னரே மற்ற தெய்வங்களுக்கு பூஜைகளை செய்ய வேண்டும் என்பது ஆன்மிக நம்பிக்கையாகும். எந்த ஒரு பூஜையாக இருந்தாலும் முதலில் விநாயகருக்கு செய்ய வேண்டும். பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று கூறுவார்கள். நாளை பூஜை என்றால் முந்தைய நாளே வீட்டில் இருக்கும் துர்தேவதைகளை விரட்டி அடிக்க ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் மஞ்சள் தடவிக் கொள்ளுங்கள். பின்னர் குங்குமத்தை அடர்த்தியாக தடவி நிலை வாசல்படியில் இரண்டு புறமும் 2 எலுமிச்சை மூடிகளை வைத்து விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலையில் பூஜை செய்யும் போது பிள்ளையாரை பிடித்து வையுங்கள். பிள்ளையார் படங்கள், பிள்ளையார் சிலைகள் என்று உங்களிடம் எத்தனை இருந்தாலும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைப்பது போல வராது. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்தால் மங்களகரமான நிகழ்வுகள் நடைபெறும். இது போல பூஜை, புனஸ்காரங்கள் செய்யும் பொழுது தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க கண்டிப்பாக மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வையுங்கள். பிள்ளையார் பிடித்து வைத்தது மட்டுமல்லாமல் வெற்றி உண்டாக, நினைத்தது அப்படியே நடக்க அதற்கு ஒரு சிதறு தேங்காய் உடைக்க வேண்டும்.

உங்களால் காலையில் எழுந்து கோவிலுக்கு செல்ல முடியும் என்றால் விநாயகர் கோவிலுக்கு சென்று அங்கு ஒரு சிதறு தேங்காய் உடைத்து விட்டு வந்து பின்னர் வீட்டில் பூஜைகளை துவங்கலாம். இப்படி செய்வதன் மூலம் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் இருக்கும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிதறு தேங்காய் உடைக்கலாம். சிதறு தேங்காய் உடைக்கும் பொழுது சரியாக உடைக்க வேண்டும். இல்லை என்றால் அதற்கும் மனம் சஞ்சலப்பட்டு விடும். எனவே உங்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அல்லது ஆண்களிடம் கொடுத்து உடைக்க சொல்லுங்கள். அதன் பின்னர் மற்ற பூஜைகளை எப்போதும் போல நீங்கள் துவங்கி பாருங்கள், நிச்சயம் நல்ல நாள், கிழமையும் ஆக வீட்டில் எந்த விதமான சண்டை, சச்சரவுகளும் இல்லாமல், துர்தேவதைகள் விரட்டி அடிக்கப்பட்டு நிம்மதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

- Advertisement -