- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவரன் தேடுபவர்கள் மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமைய இந்த அம்மனை வழிபட்டால் நம் விதியும்...

வரன் தேடுபவர்கள் மனதிற்கு பிடித்த நல்ல வரன் அமைய இந்த அம்மனை வழிபட்டால் நம் விதியும் மாறுமாம் தெரியுமா?

- Advertisement -

நம் வாழ்வில் மிக முக்கியமான ஒரு காலகட்டம் வரன் தேடும் படலம் ஆகும். 20 வருட இளமை பருவத்திற்கு பின்பு மிச்சம் இருக்கும் எல்லா காலத்தையும் ஒருவரோடு இணைந்து பயணிக்க வேண்டும். இந்த பயணத்தை யாருடன் மேற்கொள்ளப் போகிறோம்? என்பதை தேடுவதற்கான இந்த வரம் தேடும் முயற்சி ரொம்பவும் முக்கியமான ஒரு காலகட்டம் ஆகும். இந்த காலகட்டத்தில் வழிபட வேண்டிய அம்மன் யார்? இவரை வழிபட்டால் மனதிற்கு பிடித்த வரன் அமையுமா? நம் விதியும் மாறுமா? என்பது போன்ற ஆன்மீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒவருடைய விதிப்படிதான் அவருடைய வாழ்க்கை துணை அமைகிறது. நாம் என்னதான் குட்டி கரணம் போட்டாலும், நமக்கு யார் என்று விதிக்கப்பட்டு இருக்கிறதோ, அவர்கள் தான் நம் துணையாக வரக்கூடும். அமைந்த துணையும் நம்முடன் எவ்வளவு காலம் பயணம் செய்வார்? என்பது இந்த காலத்தில் கேள்விக்குறியாக தான் இருக்கிறது. எனவே ஆரம்பத்திலேயே ஒருவரை சரியாக தேர்ந்தெடுக்காவிட்டால் அடுத்த அடுத்த காலங்கள் சுமையாகவே பயணிக்க நேரிடும்.

- Advertisement -

நமக்கான துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது இந்த அம்மனை வழிபட்டால் நம்முடைய விதி பயனுக்கு ஏற்ப விதியையே மாற்றி, நமக்கு ஏற்ற துணையை இவர் தேடிக் கொடுப்பாராம். அத்தகைய சக்தி மிகுந்த ஒரு கடவுள் தான் வராகி அம்மன். வராகியை வழிபடுபவர்களுக்கு கேட்ட வரம் கேட்டபடி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பன்றி முகத்தோடு சப்த கன்னியர்களில் ஒருவராக கருதப்படும் இந்த வராகி அம்மன், சிவ அம்சமாக சில குறிப்புகளிலும், சக்தி அம்சமாக சில குறிப்புகளிலும் உள்ளன. எது எப்படியோ சப்த கன்னியர்கள் ஒருவராக இருக்கும் இந்த வராகி அம்மன் சிவசக்தி அம்சமாகவே பக்தர்களால் கருதப்படுகிறார். துன்பம் நீங்க, பயம் அகல, பகையை வெல்ல வராகி அம்மனை வழிபடுவார்கள்.

- Advertisement -

நீங்கள் வரன் தேடும் முன்பு வராகி அம்மன் சன்னதிக்கு சென்று அவர்களுக்கு அபிஷேகங்கள் செய்து பரிகாரம் தேடலாம். வராகி அம்மனுக்கு அபிஷேகம் செய்து, அர்ச்சித்து, விளக்கு ஏற்றி வைத்து வழிபடுபவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையும் என்பது ஐதீகம். இவரை நீங்கள் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். என் விதி எப்படி இருந்தாலும் அதை சரியானதாக மாற்றி அமைக்க வேண்டும். எனக்கு என்னுடைய குண நலன்களுக்கு ஏற்ப குணவாளன் அல்லது குணவதி அமைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இப்படி நீங்கள் செய்யும் பொழுது வராகி அம்மன் உங்களுடைய விதி பயனுக்கு ஏற்ப சரியான ஜோடியை தேர்ந்தெடுத்து கொடுப்பாராம்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று கூறுவார்கள். அது போல கணவன் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான். கணவன், மனைவி அமைவது நம்முடைய கர்ம பலன்களுக்கு ஏற்ப நடக்கிறது. நாம் செய்யும் புண்ணிய பலன்களுக்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையும் சிறப்பாக பயணிக்கும் எனவே முடிந்தவரை புண்ணியங்களை சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். யார் தண்டனை கொடுப்பார்? என்று நினைத்துக் கொண்டு பாவங்களை அடுக்கிக் கொண்டே சென்றால் உங்களுடைய வாழ்க்கை சொர்க்கம் போல் அல்லாமல் நரகமாக மாறிவிடும். அதற்கு சிறந்த உதாரணமாக இன்று விவாகரத்துக்கள் பெருகுவதை குறிப்பிட்டு கூறலாம்.

சற்று முன்