உடனடியாக நல்ல வேலை கிடைத்து, கை நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உள்ளதா? இந்த குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள் போதும்.

cash2

இன்றைய சூழ்நிலையில் நிறைய பேருக்கு படித்த படிப்பிற்கான வேலை கிடைக்கவில்லை. கைக்கு நிறைவான சம்பளம் இல்லை என்றாலும் பரவாயில்லை, தங்களுடைய தகுதிக்கு ஏற்ற வேலை இல்லை என்றாலும் பரவாயில்லை, கிடைத்த வேலையை செய்து கொண்டு, வரும் வருமானத்தை வைத்துக்கொண்டு, தங்களுடைய வாழ்க்கையை நடத்திச் செல்பவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும் வரை, கிடைத்த வேலையை செய்து சம்பாதிப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் தகுதிக்கு தகுந்த வேலையை தேடிக்கொண்டு, உயர்ந்த சம்பளத்தில் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசை கட்டாயம் எல்லோருக்கும் இருக்கும்.

kadan

நீங்கள் இருக்கின்ற வேலையை விட வேறு ஒரு நல்ல வேலைக்கு முயற்சி செய்தாலும் சரி, வேலையே இல்லாமல், நல்ல வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுக்கு நிச்சயமாக நல்ல வேலை கிடைக்கும் என்பது மட்டும் உறுதி. அப்படிப்பட்ட ஒரு வழிபாட்டு முறையோடு சேர்ந்த பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே அரச மரத்திற்கு, அரச வாழ்வை கொடுக்கும் யோகம் உள்ளது என்று சொல்லுவார்கள். இந்த பரிகாரத்திற்கு கட்டாயமாக ஒரு அரச இலை தேவை. பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு, பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். ஒரு மண் அகல் தீபத்தை நல்லெண்ணை ஊற்றி ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

kolam

உங்கள் வீட்டு பூஜை அறையில் மஞ்சள் பொடியை கொண்டு ஸ்டார் கோலம் வரைந்து கொள்ளுங்கள். அந்த ஸ்டார் கோலத்தின் நடுவே இந்த அரச இலையை வைத்து கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் தாழம்பு குங்குமத்தை தயாராக எடுத்து உங்கள் கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். கையில் இருக்கும் குங்குமத்தை ஒவ்வொரு சிட்டிகையாக எடுத்து, அந்த அரச இலையின் மேல் அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

ஒவ்வொரு முறை அர்ச்சனை செய்யும் போதும் ‘ஓம் ராஜகோபாலாய நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். கிருஷ்ண பரமாத்மாவை மனதார வேலை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். அர்ச்சனை செய்த இந்த குங்குமத்தை தினம்தோறும் நெற்றியில் வைத்துக் கொண்டு வரவேண்டும். இந்த பூஜையை ஆண்களும் செய்யலாம் பெண்களும் செய்யலாம்.

krishna

அந்த காலத்தில் ராஜாக்கள் உயர்ந்த வாழ்க்கை தரத்தை பெற வேண்டும், வாழ்க்கை தரம் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்ல வேண்டும், வெற்றி வாகை சூடி கொள்ள வேண்டும் என்பதற்காக ராஜகோபால யாகத்தை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

arasa-maram1

இந்த காலகட்டத்தில் நம்மால் யாகங்கள் நடத்தும் அளவிற்கு வசதி வாய்ப்பு கிடையாது. யாகம் நடத்திய பலனை தரக்கூடிய சக்தி வாய்ந்த சுலபமான பூஜை இது. இப்படியாக இந்த மந்திரத்தைச் சொல்லி தொடர்ந்து 11 நாட்கள் பூஜை செய்தாலே, உங்களுக்கு வேலை கிடைப்பதில் சில முன்னேற்றங்கள் வருவதை உணர முடியும்.

11 நாட்களில் நல்ல வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் பூஜையை நிறுத்தி விட வேண்டாம். தொடர்ந்து 48 நாட்கள் இந்த பூஜையை செய்தால் நிரந்தரமான வேலையை நல்ல வருமானத்தில் பெற முடியும். முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.