- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநல்ல வேலை கிடைக்க செவ்வாய்க்கிழமை மந்திரம்

நல்ல வேலை கிடைக்க செவ்வாய்க்கிழமை மந்திரம்

- Advertisement -

நல்ல வேலை கிடைக்க வேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் ஒரு சில பேருக்கு மட்டுமே மனதிற்கு பிடித்த வேலை, மனதிற்கு பிடித்த சம்பளத்தோடு அமைகிறது. நீங்களும் நல்ல வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா. நிறைய சம்பளத்தில் வேலை கிடைக்க, பெரிய பதவி கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தால், அதற்கு செவ்வாய்க்கிழமை நீங்கள் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

செவ்வாய்க்கிழமையில் நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விலக,  செவ்வாய் பகவானின் வாகனமான ஆட்டிற்கு நீங்கள் தானம் செய்ய வேண்டிய பொருள் எது. ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா. முதலில் நல்ல வேலை கிடைக்க நாம் சொல்ல வேண்டிய மந்திரத்தை பார்த்து விடுவோம்.

- Advertisement -

வேலை கிடைக்க மந்திரம்.

யாதேவி ஸர்வபூதேஷு சுபர்ணீ ரூபணே ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:

செவ்வாய்க்கிழமை தோறும் இந்த மந்திரத்தை படிக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை நீங்கள் எப்போது 1,00,008 முறை உச்சரித்து முடிக்கிறீர்களோ அப்போது உங்களுடைய வேண்டுதல் நிறைவேறி விடும்.

- Advertisement -

குலதெய்வத்தை வேண்டி அம்பாளை நினைத்து இந்த மந்திரத்தை சொன்னால் நிச்சயமாக நல்லவேளையானது உங்கள் வீடு தேடி வரும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதற்காக வேண்டும் என்றாலும் நீங்கள் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போதே இன்னொரு பரிகாரத்தையும் நீங்கள் செய்ய வேண்டும்.

ஆடுகளுக்கு வேர்கடலை தானம் செய்ய வேண்டும். ஆடு வளர்ப்பார்கள் அல்லவா, அவர்களிடம் வேர்கடலை தானம் கொடுக்கலாம். அவர்கள் அதை தீவனத்தோடு சேர்த்து ஆடுகளுக்கு கொடுத்து விடுவார்கள். அல்லது உங்கள் வீதியில் திரியும் ஆடுகளுக்கு வேர்கடலை வாங்கி உங்கள் கையால் தானம் கொடுத்தால், வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பங்குனி உத்திர வழிபாடு

ஆடுகளுக்கு தானம் செய்யும் போது கிழமை பார்க்க வேண்டாம். எந்த கிழமை வேண்டும் என்றாலும் ஆடுகளுக்கு தானம் கொடுக்கலாம். மேலே சொன்ன பரிகாரங்களை முழு நம்பிக்கையோடு பின்பற்றுபவர்களுக்கு நிச்சயம் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும்.

சற்று முன்