சில பேர் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக ரொம்ப நாள் முயற்சி செய்து கொண்டே வருவார்கள். அது தனியார் வேலையாக இருந்தாலும் சரி, அல்லது அரசு வேலையாக இருந்தாலும் சரி, நல்ல வேலையை பிடிக்க அதற்கான முயற்சியையும் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டே வருவார்கள். பட்டியலில் 10 பெயர்கள் செலக்ட் ஆனால், அதில் இவர்களுடைய பெயரும் இருக்கும்.
ஆனால் கடைசி சமயத்தில் அவர்களுக்கான அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் வராது. கடைசி நேரத்தில் வேலை அவர்கள் கையை விட்டு விலகிவிடும். இது ஒரு பக்கம் இருக்க சில பேருக்கு இன்டர்வியூ போவதற்கான வாய்ப்பு கூட இருக்காது. நல்லா படிச்சி இருப்பாங்க. நல்ல தகுதி இருக்கும். ஆனால் நல்ல வேலை கிடைக்காமல் சும்மாவே சுத்திகிட்டு இருப்பாங்க. பணம் சம்பாதிக்காமல் இருப்பார்கள்.
இவர்களுக்கெல்லாம் உதவாக்கரை என்ற பெயரும் இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையின் நீங்கள் இருந்தால், உங்களுக்கு கைகொடுக்கும் ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் தான் இது. 9 வாரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை நினைத்து, லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று, இந்த வழிபாட்டை செய்தால் உங்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும். லட்சுமி நரசிம்மர் கோவிலில் தான் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு வாய்ப்பே இல்லை எங்கள் வீட்டு பக்கத்தில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் இல்லை என்றால், பெருமாள் கோவிலில் செய்யலாம். ஆனால் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு தான் முதல் முன்னுரிமை. என்ன செய்யணும். திங்கட்கிழமை மாலை 7:00 மணியில் இருந்து 7:30 மணிக்குள் நரசிம்மர் சன்னிதானம் இருக்கும் கோவிலுக்கு செல்லுங்கள்.
ஒரு தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், ஏலக்காய், சுக்கு வெல்லம். இந்த 6 பொருட்களை வைக்க வேண்டும். 2 வாழைப்பழம், 2 வெற்றிலை, 2 கலிப்பாக்கு, ஒரு சின்ன துண்டு சுக்கு, வெல்லம் மட்டும் 1 கிலோ வாங்கிக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் 11ரூபாய் தக்ஷனை வைக்கலாம். இதை குருகளுக்கு தானமாக கொடுத்து விடுங்கள். 2 மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி, திரி போட்டு, தீபம் ஏற்ற வேண்டும். நெய் தீபம் தான் ஏற்ற வேண்டும்.
பிறகு அந்த லட்சுமி நரசிம்மரை 9 முறை வலம் வர வேண்டும். 9 வாரம் திங்கட்கிழமை மேலே குறிப்பிட்ட அந்த நேரத்தில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் வழிபாட்டை செய்யுங்கள். 9 வாரமும் அந்த பொருட்களை தானம் செய்யுங்கள். சாமி கும்பிட்டு இந்த பொருட்களை எல்லாம் தானம் கொடுத்துவிட்டு, சிறிது நேரம் அந்த கோவிலிலேயே அமர்ந்து நல்ல வேலை வேண்டும் என்று அந்த லட்சுமி நரசிம்மரை மனதார தியான நிலையில் அமர்ந்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
9 வாரம் முடிவதற்குள் நிச்சயம் உங்களுக்கு வேலை கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. உங்களுடைய வழிபாடு உண்மையாக இருந்தால். 9 வாரம் முடிந்தும் எங்களுக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை, எங்களுடைய வழிபாட்டில் குறை இருக்கிறதா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. உங்களுடைய தகுதிக்கு அந்த வேலை கிடைக்காமல் இருக்கலாம்.
இதையும் படிக்கலாமே: நல்ல வேலை கிடைக்க விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய மந்திரம்
அல்லது கர்ம வினையின் காரணமாக வேலை தட்டிக் கழிக்கப்படும். கவலைப்படாதீங்க. உங்களுக்கு வேறு ஏதாவது ஒரு நல்ல வழியை அந்த கடவுள் இந்த ஒன்பது வாரத்தில் நிச்சயம் காண்பித்துக் கொடுப்பார். வருமானத்திற்கு உண்டான வழியை நீங்கள் பிறகு தேடவே வேண்டாம். வருமானத்திற்கு உண்டான வாய்ப்பு உங்கள் வீட்டு வாசல் கதவை வந்து தட்டும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டினை செய்து பலன் பெறலாம்.