ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் சிறப்பாக இருந்தால் அவர் ராஜயோக வாழ்க்கையை வாழ்வார் என்றும் எந்தவித குறையும் இல்லாமல் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சுக்கிரன் ஒரு வேளை தோஷமாக வந்திருந்தால் அவர்கள் வாழ்வில் எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படி ஒரு வேளை சுக்கிரதோஷத்தால் பாதிக்கப்பட்டு அனைத்து செல்வங்களையும் இழந்து விட்டவர்கள் இந்த பரிகாரங்களை பின்பற்றினால் மீண்டும் சுக்கிர யோகம் பெற்று சிறப்பான வாழ்க்கையை வாழ்வார்கள். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சுக்ர தோஷத்தை நீக்கும் தானம்
அன்றாடம் நம்முடைய வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான அனைத்து விதமான சுகபோகங்களை தரக்கூடியவராக தான் சுக்கிர பகவான் திகழ்கிறார். நவகிரகங்களில் ஒருவராகவும் இவர் திகழ்கிறார். மேலும் இவர் மகாலட்சுமியின் உடன் பிறந்தவராகவும் திகழக்கூடியவர் என்பதால் இவரின் அருள் கிடைத்துவிட்டால் மகாலட்சுமியின் அருளும் கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் சுக்கிர ஹோரையில் மகாலட்சுமியை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சுக்கிரனால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கவும் சுக்கிரதோஷம் நீங்கவும் செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.
சுக்கிர பகவானின் அருள் கிடைக்க வேண்டும் என்றால் வறுமையால் கஷ்டப்படுபவர்களுக்கு புதிதாக ஆடைகளை வாங்கி தானமாக தர வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் சுக்கிர பகவானுக்குரிய ஆலயமாக ஸ்ரீரங்கம் திகழ்கிறது. ஸ்ரீரங்கத்திற்கு சென்று சக்கரத்தாழ்வாரை முதலில் வழிபாடு செய்ய வேண்டும். பிறகு ராமானுஜரை வழிபாடு செய்ய வேண்டும். அடுத்ததாக கம்பத்தடி ஆஞ்சநேயர் இருப்பார் அவரை வழிபாடு செய்ய வேண்டும். பிறகு மகாலட்சுமியை வழிபாடு செய்து விட்டு ரங்கநாதரை வழிபாடு செய்ய வேண்டும். இந்த முறையில் ஸ்ரீரங்கம் சென்று வழிபாடு செய்தால் சுக்கிரனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சரி இப்பொழுது சுக்ர தோஷம் நீங்க செய்ய வேண்டியதை பார்ப்போம்.
இதற்கு சுக்கிர பகவானுக்குரிய தானியமாக திகழக்கூடிய மொச்சை வேண்டும். வெள்ளை நிற துணியை புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள். அதை நம்முடைய தலைக்கு வைக்கும் அளவிற்கு தலையணை உரை போல் தைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் வெள்ளை மொச்சையை போட்டு நிரப்ப வேண்டும். சிறிய அளவு தலையணையாக இருந்தாலும் பரவாயில்லை. இப்படி தயார் செய்த இந்த தலையணையை தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் இரவு படுக்கும் பொழுது நாம் தலையணையாக பயன்படுத்த வேண்டும்.
பத்தாவது நாள் காலையில் அந்த தலையணைக்குள் இருக்கக்கூடிய மொச்சையை எடுத்து வேகவைத்து அதை காக்கைக்கு தானமாக போட வேண்டும். அந்த வெள்ளை துணியை மரத்தடியில் கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இப்படி நாம் வேகவைத்த மொச்சையை காக்கைக்கு தானமாக தருவதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய சுக்கிரதோஷம் அனைத்தும் நீங்கும். சுக்கிரதோஷத்தால் ஏற்பட்ட செல்வ இழப்புகளை ஈடு செய்யும் அளவிற்கு வருமானமும் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:நிறைவான வாழ்க்கை வாழ ஏற்ற வேண்டிய தீபம்
சுக்கிரனின் அருளை பெறவும் சுக்கிர தோஷம் நீங்கவும் மேற்சொன்ன இந்த பரிகாரங்களையும் வழிபாட்டையும் முழுமனதோடு செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் சுக்கிரனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும், இழந்த செல்வம் அனைத்தையும் திரும்பப் பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.