மகா சிவராத்திரி அன்று கூறவேண்டிய நமசிவாய மந்திரம்

sivan-2
- Advertisement -

மகா சிவராத்திரி என்பது உலகம் முழுக்க உள்ள இந்துக்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு ஆன்மீக விழாவாகும். சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுக்க கண் விழித்து சிவனை வணங்கி அவன் மந்திரத்தை ஜபித்துக்கொண்டிருப்போருக்கு மோட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில் இன்று நீங்கள் ஜபிக்கவேண்டிய முக்கியமான மந்திரம் இதோ.

sivan

மந்திரம் :
ஓம் நமசிவாய.

- Advertisement -

பஞ்சாச்சரமாக விளங்கும் “நமசிவாய” என்னும் மந்திரத்தில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு பொருள் உண்டு.

ந – திரோதாண சக்தியை குறிக்கிறது.
ம – ஆணவமலத்தை குறிக்கிறது.
சி – சிவத்தை குறிக்கிறது.
வா – திருவருள் சக்தியை குறிக்கிறது.
ய – ஆன்மாவை குறிக்கிறது.

- Advertisement -

sivan

“வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே”
என்று நமசிவாய மந்திரத்தின் சிறப்பு குறித்து திருமூலர் கூறியுள்ளார்.

“ஆதி மந்திரம் ஐந்தெழுத்து ஓதுவார் நோக்கும்
மாதிரத்தும் மற்றை மந்திர விதி வருமே”
என்று சேக்கிழார் பெருமான் கூறுகிறார்.

sivan

இதையும் படிக்கலாமே:
ஞாயிற்றுகிழமைகளில் சொல்லவேண்டிய சூரிய தோஷ நிவர்த்தி மந்திரம்

இதன் மூலம் “நமசிவாய” என்னும் மந்திரமே ஆதி மந்திரம் என்பது தெரியவருகிறது. இப்படி பல சிறப்புகள் பெற்ற சக்திவாய்ந்த இம்மந்திரத்தை மகா சிவராத்தி அன்று ஜெபிப்பதன் மூலம் நாம் நிச்சயம் இறைவனின் அருளை பெறமுடியும்.

- Advertisement -