இந்த 3 ராசிக்காரர்கள் மற்றவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுபவர்களாக இருப்பார்களாம்! இவர்கள் ஒருபோதும் நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள்!

ethiri-astro

எல்லா ராசிக்காரர்களும் தனித்துவமான குணாதிசயங்களைக் கொண்டவர்களாக தான் இருக்கிறார்கள். உங்களுடைய ராசியை வைத்தே நீங்கள் எப்படிப்பட்டவர்? என்பதை ஜோதிடம் தீர்மானித்து துல்லியமாக சொல்லி விடும். அந்த வரிசையில் அடுத்தவர்களுடைய நம்பிக்கையை காப்பாற்றுவதில் வல்லவர்களாக இருக்கும் இந்த 3 ராசிக்காரர்கள் யாரெல்லாம்? என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

astrology

முதலில் எல்லா ராசிக்காரர்களும் அடுத்தவர்களுடைய நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்கிற மனோ பக்குவத்தில் தான் இருப்பார்கள். ஆனால் இந்த குறிப்பிட்ட சில இராசிகள் அதில் இன்னும் தீவிரமாக இருப்பார்கள் என்கிறது ஜோதிடம். தன் உயிரைப் பணயம் வைத்தாவது எப்படியாவது கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி விடவேண்டும் என்கிற குறிக்கோளுடன் திகழும் இந்த மூன்று ராசிகளில் நீங்களும் ஒருவரா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மிதுனம்:
mithunam-rasi
மிதுன ராசிக்காரர்கள் சில விஷயங்களில் குறுக்கு வழியிலும் யோசிப்பார்கள். எப்பொழுதும் நேர்மையாக இருக்க வேண்டும் என்கிற நினைப்பெல்லாம் இவர்களுக்கு கிடையாது. எனினும் அடுத்தவர்களுடைய நம்பிக்கையை காப்பாற்றுவதில் இவர்களை இவர்கள் தான் மிஞ்சி கொள்ள முடியும். இவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைத்தாலும் அதை எப்படியாவது சரியாக முடித்துக் கொடுத்து விடுவார்கள். இவர்களால் முடியாவிட்டாலும் அதை மற்றவர்களை உதவிக்கு வைத்தாவது முடித்து கொடுத்து விடுவார்கள். தன்னுடைய பெயருக்கு இழுக்கு வரக்கூடாது என்பதில் தீர்மானமாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு ஒருபொழுதும் நம்பிக்கை துரோகம் என்பதை செய்வதில்லை.

துலாம்:
thulam-rasi
துலாம் ராசிக்காரர்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்வார்கள். எனினும் இவர்களிடம் மற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தவறு செய்பவர்களை இவர்களுக்கு சுத்தமாக பிடிக்காது. இவர்களும் அந்த தவறுகளை செய்யாமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள். தங்களுக்கென ஒரு கொள்கைகளை வகுத்து அந்த கொள்கையின் படி நடந்து கொள்வார்கள். இத்தகையவர்கள் ஒரு பொழுதும் மற்றவர்களுக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள். தங்களுக்கு கொடுத்துள்ள பொறுப்புகளை நியாயமாகவும், சீராகவும், நேர்த்தியாகவும் செய்து முடிப்பார்கள். ஆனால் சில சமயங்களில் காலதாமதம் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எப்படி செய்கிறோம் என்பதைவிட சரியாகச் செய்கிறோமா? என்பதில் தான் இவர்கள் குறியாக இருப்பார்கள். இவர்கள் எளிதில் மற்றவர்களை நம்புவதில்லை. எப்பொழுதும் மற்றவர்களை சந்தேகக் கண்களுடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். எவரையும் வசீகரிக்கும் தோற்றம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஒருவரை பிடித்து விட்டால் இறுதி வரை அவர்களை கைவிடுவதில்லை. பிடிக்கவில்லை என்றால் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்கள் நேர்மையாக நடந்து கொள்ளாதவர்கள் எனினும் மற்றவர்களுக்கு துரோகம் இழைக்க மாட்டார்கள். எல்லோருக்கும் ஒரு கொள்கை என்றால் இவர்களுக்கு தனிப்பட்ட கொள்கைகள் இருக்கும். அந்தக் கொள்கையின் படி இவர்கள் பின்பற்றுவார்கள். காலத்தை விட வேகமாக பயணிக்க வேண்டும் என்று சுறுசுறுப்புடன் தங்களுடைய முயற்சிகளை முழுமூச்சாக கொடுத்து முன்னேற நினைப்பவர்கள். வாழ்க்கையில் பல இடங்களில் அவமானங்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்த இவர்கள் தொடர்ந்து துரோகங்களையும் சந்திப்பார்கள். அதன் வலியை உணர்ந்த இவர்கள் இன்னொருவருக்கு அதே வலியை கொடுக்க விரும்புவதில்லை. எனவே தங்களுக்கு எதிரியாகவே இருந்தாலும் அவர்களுடன் நேருக்கு நேர் மோத வேண்டும் என்று நினைப்பார்களே தவிர முதுகுக்கு பின்னாடி குத்த மாட்டார்கள்.