தன் மீது தனக்ககே நம்பிக்கை இல்லாமல் எப்போதும் குழம்பிக் கொண்டிருக்கும் நான்கு ராசிகள்

rasi
- Advertisement -

சிலர் எப்பொழுதும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள். ஆனால் ஒரு சிலர் எப்பொழுதும் மனக் குழப்பத்துடன், தன் மீது நம்பிக்கை இல்லாமல் மிகவும் பதட்டத்துடன் காணப்படுவார்கள். இவர்கள் எப்பொழுதும் நம்பிக்கை இல்லாமல் தனது திறமையின் மீது சந்தேகம் கொள்பவர்களாக இருப்பார்கள். தன் மீது நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே திறமையானவர்களாகவும், பாதுகாப்பானவர்களாகவும் உணர்வார்கள். ஆனால் தன் திறமை மீது சந்தேகம் கொள்பவர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வதோடு, தெளிந்த சிந்தனை இல்லாமல் இருப்பார்கள். இவ்வாறு தன்னைத்தானே குழப்பிக் கொள்ளும் 4 ராசிக்காரர்களை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

bayam-fear

கடகம்:
மனோகரன் என அழைக்கப்படும் சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசிக்காரர்கள் எந்த விஷயமானாலும் அதனை சிந்தித்து செயல் படுபவர்கள். ஏதேனும் ஒரு தவறு செய்து விட்டால் அல்லது எதையாவது தவற விட்டு விட்டால் உடனே பதற்றம் அடைந்து விடுவார்கள். அதனால் எதை செய்தாலும் ஒருமுறைக்கு இருமுறை சோதித்து பார்ப்பார்கள். எப்பொழுதும் தான் செய்யும் செயலில் ஏதேனும் தவறு இருக்கும் என்ற பயத்திலேயே இருப்பார்கள்.

- Advertisement -

விருச்சகம்:
தங்களைத் தாங்களே அதிகம் விமர்சிக்க கூடியவர்கள் விருச்சககாரர்கள். ஒரு முறை தவறு நடந்து விட்டது என்றால் மீண்டும் அந்த தவறு நடக்க கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார்கள். இது அவர்களின் திறமை மீது அவர்களுக்கே சந்தேகத்தை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் அவர்களின் செயலுக்கு யாரேனும் பாராட்டு தெரிவிக்க வில்லை என்றால் அவர்களை விட மற்றவர்கள் திறமைசாலிகள் என நினைத்துக் கொள்வார்கள். இவ்வாறு தங்களைத் தாங்களே தாழ்த்திக்கொண்டு மன உளைச்சலில் மாட்டிக் கொள்வார்கள்.

dhanusu

தனுசு:
தனுசு ராசியினர் மிகவும் தன்னம்பிக்கை உடையவர்களாக இருக்கலாம். அதேசமயம் சுயமரியாதை குறித்து அதிக கவலைப்படுபவார்களாக இருப்பார்கள் யாரேனும் தங்களைப் பற்றி குறை சொல்லிவிட்டால் தங்கள் திறமை மீது நம்பிக்கை இல்லாதவர்களாக யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள். இதனால் தேவையற்ற சிந்தனைகளை சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். எனவே எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர் மிகவும் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் அந்த விஷயத்தை எப்படியாவது நல்ல விதமாக முடித்துவிட வேண்டும் என்பதில் மிகவும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.

- Advertisement -

மீனம்:
மீனராசியில் பிறந்தவர்கள் பொதுவாகவே மென்மையானவர்கள், பொறுமையானவர்கள். சிறு விசயங்களுக்கும் கூட மனம் உடைந்து விடுவார்கள். எப்பொழுதும் நம்பிக்கை இல்லாமல் இருப்பார்கள். தங்களின் திறமையை தாங்களாகவே தாழ்த்திக் கொள்வார்கள். தங்களிடம் இருக்கும் திறமை, நல்ல குணம் இவற்றை விட்டுவிட்டு, மற்றவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களையும், திறமையையும் நினைத்து கவலைப்படுவார்கள்.

meenam

எந்த ஒரு வேலையையும் தன்னம்பிக்கையுடன் செய்யமாட்டார்கள். எப்பொழுதும் தான் செய்யும் வேலையில் தோல்விதான் ஏற்படும் என்ற எதிர்மறை சிந்தனயுடனே செயல்படுவார்கள். இவ்வாறான தேவையற்ற மனக் குழப்பத்தை விட்டுவிட்டு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வந்தால் மீன ராசிக்காரர்களுக்கு எந்த காரியமாக இருந்தாலும் அது வெற்றியிலேயே முடியும்.

- Advertisement -