பங்குனி அமாவாசையில் ஏற்றப்படும் இந்த 4 தீபங்கள் உங்கள் வாழ்க்கையில் தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் விரைவில் வெற்றி பெறச்செய்யும்

amavasai2
- Advertisement -

ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்வில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. இந்த ஒரு காரியம் தடையில்லாமல் நடந்துவிட்டால் எனது வாழ்க்கையே மாறிவிடும், நமது வாழ்வில் எல்லையற்ற சந்தோஷத்தை நாம் அடையப் போகிறோம் என்று கனவுடன் இருப்பவர்களுக்கும் தான் செய்ய நினைக்கும் காரியத்தில் ஏதேனும் ஒரு சிறு தடங்கல்கள் ஏற்பட்டு அவை தடை பட்டு விட்டால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவோம். இப்படி நாம் செய்யும் அனைத்து காரியங்களும் ஏதேனும் சிறு தடைகளினால் வெற்றி பெறாமல் போகிறதே என்ற வருத்தம் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கும். நாமும் பலமுறை முயற்சி செய்தாலும் இது போன்ற தடைகளை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால் அமாவாசை அன்று இந்த தீபத்தை ஏற்றி பரிகாரம் செய்வதன் மூலம் எந்தவித தடையாக இருந்தாலும் அவை உடனே நிவர்த்தியாகும். இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

அமாவாசை தினம் என்றாலே அன்றைய தினம் நிறைய பரிகாரங்கள் செய்யப்படும் இருந்தாலும் அமாவாசை என்று குறிப்பிடும் பொழுது அனைத்து விதமான திருஷ்டிகளும் அழிந்துவிடும் என்பது அனைவரின் நம்பிக்கையாகும். அதேபோல் அமாவாசை என்று புதியதாக தொடங்கக் கூடிய எந்த விஷயமாக இருந்தாலும் அதை சிறப்புடன் நடந்து முடியும் என்பதும் அனைவரும் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

- Advertisement -

அவ்வாறு இந்த பங்குனி அமாவாசையன்று தொடங்கப்படும் இந்த விளக்கு பூஜையை தொடர்ந்து ஏழு மாத அமாவாசையிலும் செய்துவர நீங்கள் நடக்கவே நடக்காது என்று நினைத்துக் கொண்டிருக்கும் அந்த காரியம் உடனே வெற்றிகரமாக நடந்து முடியும். அதற்கு நமக்கு தேவையான பொருட்கள் நான்கு மண் அகல் விளக்குகள், 4 விளக்குத்திரி, மஞ்சள், குங்குமம் நல்லெண்ணெய், பூஜைக்கு ஏற்ற மலர்கள், 4 ஒரு ரூபாய் நாணயம் மற்றும் நான்கு கைப்பிடி பச்சை அரிசி.

இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு முதலில் அகல் விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைக்க வேண்டும். பின்னர் இந்த நான்கு விளக்கிலும் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பூஜையை வீட்டின் மொட்டைமாடி அல்லது பால்கனி போன்ற இடத்தில் செய்ய வேண்டும். இப்படி இடம் இல்லாதவர்கள் வீட்டின் வாசலிலும் இந்த விளக்கை ஏற்றி வைக்கலாம்.

- Advertisement -

நீங்கள் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி துடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பச்சை அரிசியை கையில் எடுத்துக் கொண்டு, நான்கு திசைகளிலும் ஒவ்வொரு கைப்பிடி பச்சை அரிசியை வைக்க வேண்டும். பின்னர் அந்த அரிசியின் மீது விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும். பிறகு ஒவ்வொரு விளக்கின் முன்பும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து விட வேண்டும்.

பிறகு இவற்றிற்கு நடுவே மலர்களைத் தூவி விட வேண்டும். பின்னர் மனதார உங்கள் பிரச்சனையை நினைத்து வேண்டிக்கொள்ள வேண்டும். இந்த தீபம் எப்பொழுது அனைகிறதோ அதுவரை எரியவிட வேண்டும். குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரமாவது இந்த தீபம் எரியவேண்டும். இந்த விளக்கின் ஒளியில் இருள் மறைந்து எப்படி வெளிச்சம் உண்டாகிறதோ அதுபோல உங்கள் பிரச்சனைக்கும் தீர்வு கிடைத்துவிடும்.

- Advertisement -