தினமும் இந்த ஒரு வார்த்தையை சொன்னால், உங்களுக்குள் ஒரு புது நம்பிக்கையே பிறக்கும். நீங்கள் நினைத்ததெல்லாம் நல்லதாகவே நடக்கும்.

god--meditation
- Advertisement -

சில பேருக்கு தோன்றுவதெல்லாம் எதிர்மறை எண்ணங்களாகவே இருக்கும். வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இருக்காது. ஏதோ வாழ வேண்டும் என்பதற்காக தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எதிலும் ஜெயித்திருக்க மாட்டாங்க. இப்படிப்பட்டவர்களுக்காகவே சொல்லப்பட்டுள்ள ஒரு பதிவு தான் இது. யார் வேண்டுமென்றாலும் இந்த டெக்னிக்கை முயற்சி செய்து பார்க்கலாம். பெரிய அளவில் இது பரிகாரம் எல்லாம் கிடையாது. தினமும் இந்த வார்த்தையை உச்சரிப்பவர்களுக்கு நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். நல்லது நல்லது மட்டுமே நடக்கும். இந்த வாக்கியம் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு எந்த மொழி சுலபமாக வருமோ அந்த மொழியில் மொழிபெயர்த்து கூட இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொள்ளலாம் தவறு கிடையாது.

காலையில் கண்விழித்த உடன் பல் தேய்த்து, முகம் கழுவிய பிறகு ஒரு இடத்தில் அமர்ந்து இந்த வார்த்தையை சொல்லலாம். அப்படி இல்லை என்றால் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு நிமிடம் மனதை அமைதிப்படுத்திக் கொண்டு இந்த வார்த்தையை உச்சரிக்கலாம்.

- Advertisement -

‘நான் மனப்பூர்வமாக விரும்பிய நல்லது அனைத்தும் என்னை வந்து சேர்கிறது’ என்ற இந்த நேர்மறையான வார்த்தையை மன நிறைவோடு சொல்லுங்கள். சொல்லும்போது நீங்கள் நினைத்த நல்லது எல்லாம் உங்களுக்கு நடந்து விட்டதாகவே கற்பனை செய்து கொள்ளுங்கள். உதாரணத்திற்கு நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஏதோ ஒரு வேலையை உங்கள் மனதில் நினைத்து கொண்டிருக்கிறீர்கள். அந்த வேலை உங்களுக்கு கிடைத்து விட்டது. அந்த வேலைக்கு சென்று குறிப்பிட்ட அந்த வேலையை நீங்கள் செய்யத் தொடங்கி விட்டதாகவே கற்பனையில் நினைத்துக் கொள்ள வேண்டும். பாசிடிவ் நினைப்புடன் தான் அந்த வார்த்தையை உச்சரிக்க வேண்டும்.

நம்பிக்கையோடு நீங்கள் உச்சரிக்கக் கூடிய இந்த ஒரு வாக்கியம் உங்களுடைய வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்டு விடும். இந்த வார்த்தை ஒரு மேஜிக் வார்த்தை, நீங்கள் விரும்பியதை கொண்டு வந்து அப்படியே உங்கள் கையில் கொடுத்து விடும்.

- Advertisement -

இந்த வார்த்தையை இத்தனை முறைதான் இத்தனை நிமிடம்தான் உச்சரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. காலை, மாலை இரண்டு சமயமும் இந்த வார்த்தையை உச்சரிக்க வேண்டும். அவ்வளவு தான். இதற்காக எந்த விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இல்லை. குளித்துவிட்டு தான் சொல்ல வேண்டும் குளிக்காமல் சொல்லக்கூடாது என்ற எந்த கட்டுப்பாடுகளும் இதற்கு கிடையாது. ஆண்கள் பெண்கள் இருபாலரும் இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த ஒரு மந்திரத்தை தினமும் ஜெபித்து வந்தால் போதும், உங்கள் ஜென்ம எதிரிகள் கூட உங்களிடம் வந்து தஞ்சம் அடைவார்கள்.

ஆனால் எந்த ஒரு நல்ல விஷயத்தையும் நம் மனதில் பதிய வைக்க வேண்டும் என்றால் அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து நிமிடத்தில் இருந்து அரை மணி நேரம் வரை இதை நீங்கள் ஒரு ஜபம் போல மேற்கொள்ளலாம். எவ்வளவு நம்பிக்கையோடு இந்த டெக்னிக்கை நீங்கள் பயன்படுத்துகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது உங்களுக்கு வாழ்க்கையில் நடந்து கொண்டே இருக்கும். பணம் காசு செலவு செய்யப்போவது கிடையாது. கடின உழைப்பு செய்யப்போவது கிடையாது. இந்த சின்ன மெத்தடை முயற்சி செய்துதான் பாருங்களேன். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -