வீட்டில் தேவை இல்லாத பிரச்சனைகள் வருகிறதா? கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கிறதா? பணக்கஷ்டம் நீடிக்கிறதா? அப்படியென்றால் உங்கள் வீட்டில் இருந்தபடியே நீங்கள் செய்யக்கூடிய பரிகாரம் இதோ.

uppu parikaram

சில நேரங்களில் நம்மை அறியாமலே நான் சில தவறுகளை செய்து பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வோம். வேறு சில நேரங்களில் காரணமே இல்லமால் சின்ன சின்ன சண்டைகள் கூட பெரிய அளவில் போய் முடிந்துவிடும். வேறு சில நேரங்களில் சம்பாதிப்பதெல்லாம் அப்படியே செலவாகும். இதற்கெல்லாம் காரணம் கண் திருஷ்டியோ அல்லது வீட்டில் தெய்வ சக்தியின் ஆதிக்கம் குறைந்து துர் சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்திருக்கலாம். இது போன்ற சமயங்களில் நம்மை அறியாமல் எதிர்மறை எண்ணங்கள் நமக்குள் அதிகரிக்க துவங்கும். அதே சமயம் நமது ஆழ் மனம் நமக்கு ஏதோ தவறாக உள்ளதே என்பதை உணர்த்தும்.

om

தங்களைச் சுற்றி தீய சக்திகள் இருக்கின்றன என உணரும்போது அதனை சாதாரணமாக நினைக்காமல் உடனடியாக அதற்குரிய பரிகார முறைகளை செய்து அத்தீய சக்திகளை விரட்டிவிடுவதே நம் வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான ஒரே வழி. அதில் சில பரிகார முறைகளை இங்கே காணலாம்.

மஹா லட்சுமி வாசம் செய்யும் உப்பு பரிகார முறை:
கடலில் இருந்துதான் மஹா லட்சுமி தோன்றினாள். அந்தக் கடலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் உப்பிலும் மஹா லட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். உப்பை வைத்துக்கொண்டு, ஏராளமான பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. துர்சக்தியை விரட்டும் வல்லமையும், திருஷ்டியைப் போக்குகிற குணமும் உப்புக்கு உண்டு. .

salt

பரிகாரம் 1:
ஒரு சிறு கிண்ணத்தில்  சமையலுக்கு பயன்படுத்தும் உப்பை போட்டு நிரப்பி, உங்கள் வீட்டு குளியலறையில் ஒரு நீர் படாத மூலையில் வைத்து விடவும். இந்த உப்பை நீங்கள் மாற்ற தவறக் கூடாது. உப்பு கரைய, கரைய மீண்டும் சீரான இடைவேளையில் உப்பை நிறைத்து கொண்டு வர வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் இருக்கும் தீய சக்தி வெளியேறி, மகிழ்ச்சி நிலைக்கு உதவும்.

- Advertisement -

பரிகாரம் 2:
நன்றாகக் குளித்துவிட்டு, ஒரு தம்ளரில் நீர் எடுத்துக் கொள்ளுங்கள். அந்தத் தண்ணீரில் ஒரு சிட்டிகை அளவு கல் உப்பைப் போடுங்கள். பூஜை அறையில் வைத்து நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள். பிறகு அந்த உப்புநீரை வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். முக்கியமாக தென்மேற்கு மூலையில் தெளிக்க வேண்டும். உப்பு நீர் நிவாரணம் என்பது, மன அழுத்தம், தெளிவற்ற சிந்தனை அல்லது உடலுறுப்பு கோளாறு போன்ற பிரச்சினைகளை போக்குவதுடன், கண்ணுக்குத் தெரியாத தீய சக்தியை எதிர்த்து அதனை வெளியேற்றும் ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த ஆன்மீக நிவாரணமாகும்.

salt

எட்டி மரம்:
எட்டி மரம் காளிக்கு உரிய மரமாக கருதப்படுகிறது. இந்த மரத்தின் அனைத்து பாகங்களும் வீட்டில் உள்ள தீய்சக்தியை விரட்டும் வல்லமை பெற்றது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் எட்டி மரங்களைக் காண்பதே அரிதாகிவிட்டது. நாட்டு மருந்து கடைகளில் எட்டி மரக்குச்சிகள், பட்டை, வேர் மற்றும் கொட்டைகள் கிடைக்கும். எட்டி மரக் குச்சிகளை உங்கள் வீட்டில் வைப்பதால் தீய சக்திகள் வீட்டை விட்டு அகலும். .

palam

எட்டி மரக் கொட்டைகளை வாங்கி, அதை ஒரு மஞ்சள் நிற துணியில் முடிந்து, உங்கள் வீட்டில் கண்ணுக்கு தெரியாத ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். எட்டி மரக்கொட்டைகள் மிகவும் விஷத் தன்மை வாய்ந்தது எனவே குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைப்பது நல்லதாகும். இப்படி செய்வதால் தீய சக்திகள் உங்கள் வீட்டிற்குள் வருவது தடுக்கப்படுகிறது.

குலதெய்வ வழிபாடு:
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். இத்தெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தி அளவிட முடியாதது. எம தர்மனே நம் குலதெய்வத்தின் அனுமதியைப் பெற்றப்பின் தான் நம் உயிரை எடுக்க இயலும்.

kula dheivam

நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்களையே நாம் குலதெய்வமாக வழிபட்டு வருகிறோம். அந்த புனித ஆத்மாக்களை நாம் தொடர்ச்சியாக வணங்கி வந்தால் நம்மைச் சுற்றியிருக்கும் தீய சக்திகளிடமிருந்தும், துர் தேவதைகளிடமிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ளலாம்.