இன்று இம்மந்திரம் துதிப்பதால் அற்புதமான பலன்களை பெறலாம் தெரியுமா?

shiva
- Advertisement -

அகிலத்தை காக்கும் சிவபெருமானை அனைத்து இடங்களுக்கும் சுமந்து செல்லும் வாகனமாக இருக்கிறார் நந்தி பகவான். நந்தனார் சிவனை வழிபட விரும்பும் போது, சிவனின் கட்டளைப்படி விலகி அமர்ந்து நந்தனார் சிவனை வழிபட உதவினார். இந்த நந்தி பகவான் சிவன் வாகனம் என்ற அளவில் இல்லாமல் அவரின் ஆத்மார்த்த சீடனாகவும் இருக்கிறார். தமிழ் சித்தர்களில் “நந்தீசர்” எனும் சித்தர் சிவனின் சீடரான நந்தி பகவானே என கூறப்படுகிறது. அந்த நந்தி பகவானுக்குரிய நந்தீசர் மூல மந்திரம் துதிப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

nandi

நந்தீசர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச
சித்த ஸ்வாமியே போற்றி

- Advertisement -

சிவனின் தொண்டரும் சித்த புருஷரான நந்தி பகவானின் இந்த மந்திரத்தை தினமும் காலை எழுந்து, குளித்து முடித்து விட்டு 108 முறை 48 தினங்கள் துதித்து வந்தால் நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் ஈடேறும். உங்கள் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்கள், கஷ்டங்கள் அனைத்தும் தீரும். சிவபெருமானின் அருளாசிகள் முழுமையாக கிடைக்க வழிவகை செய்யும். சிறந்த வாக்குவன்மை மற்றும் மனோதிடம் உருவாகும். வாழ்வில் ஏற்படுகின்ற தடைகள், தாமதங்கள் போன்றவை நீங்கி அனைத்திலும் வெற்றி உண்டாகும். பிரதோஷ தினங்களில் இந்த மூல மந்திரத்தை துதித்து நந்தி பகவானை வழிபடுவதால் பலன் விரைவில் கிட்டும்.

நந்தி வழிபாட்டிற்குரிய தினங்கள்

- Advertisement -

அனைத்து சிவன் கோவிலில்களிலும், சிவ பெருமானை வழிபடும் போது, அவரின் வாகனமான நந்தி பகவானையும் பக்தர்கள் வழிபடுகின்றனர். நந்தி பகவான் வழிபாட்டிற்குரிய விசேஷ தினமாக மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை, தேய்பிறை பிரதோஷங்கள் திகழ்கின்றன. பிரதோஷ நேரத்தில் சிவன் கோயிலில்களில் சோமசூக்த பிரதட்சணம் வலம் வந்து சிவபெருமானையும், நந்தி தேவரையும் வழிபட வேண்டும். பிறகு நந்திக்கு விருப்பமான அருகம்புல் மாலை அணிவித்து, பச்சரிசியில் வெல்லம் கலந்து வைத்து காய்ச்சாத பசும்பால், தேன் மற்றும் மஞ்சள் ஆகியவற்றை கொண்டு நந்திதேவருக்கு அபிஷேகம் செய்த பிறகு வாசம் மிக்க மலர்களை சாற்றிய பின்பு, பிரதோஷ நேர பூஜையின் போது நந்தி பகவான் சன்னிதியில் இருந்து சிவனுக்கு தீபாராதனை காட்டும் பொழுது, நந்தி பகவானுக்குரிய மந்திரங்களை சத்தமாகவோ அல்லது வாய்விட்டோ துதித்து வழிபடுவதன் மூலம் நாம் வாழ்வில் அனைத்து நன்மைகளையும் பெறலாம்.

nandhi

நந்தி வழிபாடு பயன்கள்

- Advertisement -

மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை, தேய்பிறை பிரதோஷம், மாத சிவராத்திரி போன்ற சிவபெருமானுக்குரிய விஷேஷ தினங்களில் சிவன் கோவிலில் இருக்கும் நந்தி பகவானை வணங்கும் போது, அவருக்குரிய மந்திரங்களை துதித்து வழிபாடு செய்வதால் நமது குலத்திற்கு ஏற்பட்டுள்ள சாபங்கள் தீரும். நம் மனதில் தீய எண்ணங்கள் எழாது . பிறருடன் பகை ஏற்படாமல் காக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு நல்ல புத்திரப்பேறு உண்டாகிறது. கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் உடல் நலம் பெறுவார்கள். செல்வ சேமிப்பு உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
கட்டிய வீட்டின் வாஸ்து பிரச்சனைகளை தீர்க்கும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Nandi moola mantra in Tamil. It is also called as Nandhi bhagvan mantras in Tamil or Moola mantras in Tamil or Thadaigal neenga manthiram in Tamil or Nandheeswarar thuthi in Tamil.

- Advertisement -