எப்படிப்பட்ட மனவேதனையும் நீங்கும். தீராத துன்பங்களும் தீர, உங்களது வேண்டுதல்களை 108 நாட்கள் இவருடைய காதில், இப்படி சொல்லுங்கள்!

வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு சிலபேருக்கு வேதனைகள் இருக்கும். கஷ்டங்களை மனதில் போட்டு திணித்துக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இனி நம்முடைய வாழ்க்கையே இவ்வளவுதானா, இதோடு முடிந்து விட்டதா? என்ற அளவிற்கு பெரிய அளவில் கஷ்டங்களும் துயரங்களும் இருந்தால்கூட, உங்களுக்கான தீர்வு சொல்லும் சக்தி அந்த ஆண்டவன் இடத்தில் மட்டும் தான் உள்ளது. உங்களுடைய கஷ்டங்களை தொடர்ந்து இவருடைய காதுல போய் இப்படி சொல்லுங்கள். நிச்சயம் உங்களுடைய வேண்டுதல் எம்பெருமானின் காதுகளுக்கு போய் சேர்ந்துவிடும்.

nandhi

எம்பெருமானின் காதுகளுக்கு வேண்டுதலை கொண்டுபோய் சேர்க்க வேண்டுமென்றால்? நீங்களே கண்டு பிடிச்சு இருப்பீங்க. நாம் நம்முடைய கஷ்டங்களை சொல்லப்போவது யாரிடத்தில் என்று! ஆமாங்க, நந்தியம்பெருமான் கிட்ட தான். ஆனால் ஓரிரு நாட்களில் உங்களுடைய துயரமானது சரியாகி முடிவுக்கு வரவேண்டும் வேண்டும் என்று பேராசைப் படக் கூடாது.

108 நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டினை செய்ய வேண்டும். தினந்தோறும் சிவபெருமான் ஆலயத்திற்கு அல்லது சிவபெருமானின் சன்னதி இருக்கும் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். நந்தி பகவானுக்கு இரண்டு நல்லெண்ணெய் தீபங்களை ஏற்ற வேண்டும். அதன் பின்பு நந்தி பகவானையும் ஈசனையும் சேர்த்து மூன்று பிரதக்ஷணம் வரவேண்டும். உங்களுக்கு நேரமில்லை என்றால் ஒரு பிரதட்சணம் மட்டுமே போதுமானது.

nandhi

அடுத்தபடியாக நந்தி பகவானுக்கு வலது பக்கம் வந்து நின்று, நந்தி பகவானின் வலது காதில் உங்களுடைய கோரிக்கைகளை சொல்ல வேண்டும். கோரிக்கை ஒரே ஒரு கோரிக்கையாக இருக்க வேண்டும். நந்தி பகவானை தொட்டு தான் இந்த கோரிக்கையை சொல்ல வேண்டும் என்ற எந்த அவசியம் கிடையாது. நந்தி பகவானுக்கு அருகில் சென்று மனதார உங்களது கோரிக்கைகளை உச்சரித்தாலே அவரது காதில் கேட்டு விடும். எக்காரணத்தைக் கொண்டும் நந்தியை நாம் தொடக்கூடாது.

- Advertisement -

அடுத்தபடியாக, பூக்களைக் கொண்டோ அல்லது வில்வ இலைகளை வைத்தோ, சிவபெருமானுக்கும் நந்திக்கும் அர்ச்சனை செய்து உங்களது வழிபாட்டை முடித்துக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்த உதவிகளை, முடிந்த பணிகளை, சிவன் கோவில்களுக்கு செய்து வாருங்கள்.

Nanthi

இப்படியாக 108 நாட்கள் தொடர்ந்து உங்களது கஷ்டங்களை, உங்களது வேதனைகளை நந்தி பகவானிடம் சொல்லிவிட்டு பிரச்சனைகளை அவரது பாதங்களில் போட்டுவிட்டு, உங்களது விடா முயற்சியை விடாமல் பிடித்துக்கொண்டு, வாழ்க்கையில் பயணம் செய்துகொண்டே இருங்கள். உங்கள் கஷ்டத்திற்க்கான தீர்வு 108வது நாளில் நிச்சயம் உங்கள் கைகளை வந்து சேரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் நிலைவாசலில் இவைகள் மட்டும் இருந்தால் ‘அதிர்ஷ்டம்’ வீடு தேடி உங்களிடம் வருமாம் தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.