உங்கள் நிலைவாசலில் இவைகள் மட்டும் இருந்தால் ‘அதிர்ஷ்டம்’ வீடு தேடி உங்களிடம் வருமாம் தெரியுமா?

mahalakshmi-door

திருஷ்டிக்காகவும், நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கவும் நிலை வாசலில் குறிப்பிட்ட சில தெய்வீக பொருட்களை மாட்டி வைப்பதும், பயன்படுத்துவதும் தொன்று தொட்டு அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை செய்து வருகின்றனர். அவ்வகையில் வீடு தேடி அதிர்ஷ்டம் வர இந்த குறிப்பிட்ட சில பொருட்கள் பயன் தரும் என்று சாஸ்திர குறிப்புகள் கூறுகின்றன. அவ்வாறான பொருட்கள் என்னென்ன? அதை எப்படி வைக்க வேண்டும்? என்பதைத் தான் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

vasal-kathavu

நேர்மறை ஆற்றல் அதிகரிக்க வீட்டின் தலை வாசலில் மஞ்சள், குங்குமம் இடுவது வழக்கம். இதை செய்ய முடியாதவர்கள் அல்லது செய்ய அனுமதி இல்லாதவர்கள் தலை வாசல் கதவின் நடுவில் வட்டமாக சிறிதளவு மஞ்சள் வைத்து அதில் குங்குமம் வைத்துக் கொள்ளலாம். ஆனால் எதுவும் செய்யாமல் மட்டும் அப்படியே விட்டு விடாதீர்கள். சில வீடுகளில் எல்லாம் வாடகை வீட்டில் இருந்தால் கதவில் அடிக்கப்பட்டிருக்கும் பெயிண்ட் நீங்கிவிடும் என இவ்வாறு செய்ய அனுமதிப்பதில்லை. இது போன்றவர்கள் மேற்கூறியபடி செய்யலாம். நிலை வாசலில் குலதெய்வம் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. அவற்றிற்கு மஞ்சள், குங்குமம் இடாமல் வைப்பது அவ்வளவு நல்லதல்ல.

வீட்டு கதவில் மயில் போன்ற சித்திரங்கள் செதுக்கப்பட்டு இருப்பது விசேஷமான பலன்கள் தரும். அவ்வாறு இல்லாதவர்கள் மயில் படங்களை ஒட்டி வைக்கலாம். வீட்டு கதவின் இரண்டு புறங்களிலும் மண்ணாலான யானை பொம்மைகளை வாங்கி வைப்பது அதிர்ஷ்டத்தை வீடு தேடி வர வழைக்கும். இவையெல்லாம் ஜோதிடத்தில் வாஸ்து குறிப்புகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் குறிப்புகளாக இருந்து வருகிறது. வீட்டிற்குள் இருக்கும் மற்ற வாசல்களுக்கு இரு புறங்களும் இடுப்பு உயரத்தில் செயற்கை மலர் தொட்டிகள் வைப்பதும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும்.

nila-vasal

தலை வாசலில் படிகாரம் கட்டி வைப்பது திருஷ்டி தோஷத்தை போக்கும். படிகாரம் போல் நிறைய விஷயங்கள் திருஷ்டிக்காக கட்டப்படுகிறது. சிலர் எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாய்களை கட்டி வைப்பதும், காற்றாழை போன்றவற்றில் மாட்டி தொங்க விடுவதும் இந்த காரணத்தினால் தான்.

- Advertisement -

ஒரு சிகப்பு துணியில் மட்டை தேங்காயை ஒன்றை வைத்து அதில் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு இறுக்கமாக முடிந்து வாசலின் மேலே தொங்க விடுவது வழக்கம். இவ்வாறு செய்வதால் வீட்டிற்கு உள்ளே கெட்ட சக்திகள் நுழையாது என்பது பொருள் படுகிறது.

coconut 2

பைரவர் கோவிலுக்கு செல்வதானால் அங்கு இருக்கும் விபூதி விசேஷமானது ஆகும். அதைக் கொண்டு வந்து வீட்டில் தலை வாசலுக்கு இரண்டு புறமும் போட்டு வைப்பதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, தெய்வீக ஆற்றல் நிறைந்து நல்ல அதிர்வுகளை உண்டாக்கும். இதனால் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கி நல்லதொரு மாற்றம் நிகழும் என்பது நம்பிக்கை. இதை நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள் உங்களுக்கே உண்மை எதுவென விளங்கிவிடும். பைரவர் விபூதிக்கு அத்தகைய சக்திகள் உண்டு. இதைப் பலரும் அனுபவப்பூர்வமாக செய்து வருகிறார்கள். குறிப்பாக கடன் பிரச்சினைகள் இருப்பவர்கள் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் தாராளமாக இதை செய்து பார்க்கலாம்.

kaala bairavar

கடன் பிரச்சனை தீர ஒவ்வொருவரும் வணங்க வேண்டிய தெய்வமாக பைரவர் இருக்கிறார். அவருடைய விபூதி இருக்கும் வீட்டில் கடன் பிரச்சினைகள் இருக்காது என்பது நிதர்சனமான உண்மை. பொதுவாகவே கோவில்களில் கொடுக்கப்படும் விபூதி குங்குமம் போன்றவற்றை அங்கேயே வைத்துவிட்டு வராதீர்கள். ஒரு சிறிய பேப்பரில் மடித்து எடுத்து வந்து வீட்டின் தலை வாசலில் இரண்டு புறங்களிலும் போட்டு வையுங்கள் இவை நல்லதொரு அதிர்வலைகளை வீட்டிற்கு கொண்டு வரும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் இந்த 2 தவறை ஒரு போதும் செய்து விடாதீர்கள்! பணம் வந்த வழியே போய்விடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.