ருசியான நண்டு மசாலா சுலபமாக செய்யும் முறை

nandu
- Advertisement -

நண்டு மசாலா ஒரு அசைவ உணவு. நண்டு பொதுவாக அனைத்து நாட்களிலும் எளிதாக கிடைக்கும் ஒரு அசைவம் ஆகும். பொதுவாக நண்டு ரசம் நண்டு கிரேவி போன்றவற்றை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இந்நிலையில் இப்போது நாம் நண்டு மசாலா எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

nandu_1

நண்டு மசாலா செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

நண்டு – 1/2 கிலோ
வெங்காயம் – 2
பூண்டு – 4 பல்
இஞ்சி – 1 துண்டு
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
கசகசா – 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லியதூள் – 1 டேபிள் ஸ்பூன்
கறி பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 2டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – 2
உப்பு – தேவையான அளவு
தேங்காய்ப்பால் – 1 கப்

நண்டு மசாலா செய்முறை:

நண்டு மசாலா செய்ய முதலில் மிக்சியில் வெங்காயம்,பூண்டு,இஞ்சி மற்றும் மிளகாய்த்தூள் மற்றும் மேற்கூறிய அனைத்து மசாலா பொடிகளையும் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
இப்போது மசாலா தயார். தயாரான மசாலாவை ஒரு கின்னத்தில் வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

nandu_2

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள மசாலாவை கடாயில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும். பிறகு அதில் நண்டு அனைத்தையும் போட்டு வேகவிட வேண்டும்.

nandu_3

நண்டு பாதி வெந்த நிலையில் தேங்காய்ப்பால் ஊற்றவும் பிறகு, முழுவதுமாக நண்டு மசாலா தயாராக 10 நிமிடங்கள் வரை ஆகும். 10 நிமிடம் கழித்து மூடியை திறந்தால் சுவையான நண்டு மசாலா தயார்.

- Advertisement -

nandu_4

சமைக்க ஆகும் நேரம் – 30 நிமிடங்கள்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

இதையும் படிக்கலாமே:
இறால் செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Here we have Nandu masala recipe in Tamil. It is also called as Nandu masala seimurai or Nandu masala seivathu eppadi in Tamil or Nandu masala preparation in Tamil.

- Advertisement -