பலன்கள் பல தரும் நாராயண ஸ்தோத்திரம்

Perumall-compressed

நம் எல்லோருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்தால் அதை நாமே தீர்த்துக்கொள்வோம். ஆனால் எல்லாவற்றிலுமே நமக்கு ஏதோ ஒரு வகை குறைகள் ஏற்பட தொடங்கினால் இறைவனை சரணடைவதை தவிர வேறு வழியில்லை. வாழ்வில் பல வளங்களை பெறவும், சிறந்த சிந்தனை மற்றும் செயல்திறனும் பெற்று, நம் பிரச்சனையை நாமே தீர்த்து கொள்வதற்கு உதவுபவர் “ஸ்ரீமன் நாராயணன்”. அவரை வழிபட உருவாக்கப்பட்ட தமிழ் ஸ்தோத்திர பாடல் இது.

நாராயண ஸ்தோத்திரம்

ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய

பிறவிதோறும் வினைமிகுந்து பெருகுகின்ற இருளினை அகலவைக்கும் அருண தீபம் ஓம் நமோ நாராயணாய
உலகமெல்லாம் முழங்க வேண்டும் ஓம் நமோ நாராயணாய
மனதில் என்றும் இருக்க வேண்டும் ஓம் நமோ நாராயணாய
ஜனன மரண பயதரங்க ஸாகரம் கடத்தியே உடனு வந்து காக்கும் ஓம் நமோ நாராயணாய

Perumal

நம்பினோர்க்கு அனைத்தையும் தருபவர் நாராயணன். புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டின் பூஜையறையிலோ, அல்லது அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று இந்த நாராயண ஸ்தோத்திரத்தை உளமார ஜெபித்து வழிபட உங்களின் செல்வ நிலை உயரும். குடும்பத்தில் அமைதி நிலை உருவாகும். எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் போக்கும் எண்ணங்களும், அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளும் உங்களுக்கு தெரியும் படி செய்வார் நாராயணன். பௌர்ணமி தினங்களில் இம்மந்திரத்தை ஜெபிப்பது பலன்களை பன்மடங்கு பெருக்கும்.

Perumal

- Advertisement -

ஆதிசேஷன் மீது வீற்றிருந்து யோகநித்திரையிலிருந்த படியே உலகை காத்துக்கொண்டிருப்பவர் நாராயணன். தன்னை மிகவும் இகழும் மனிதர்களுக்கும் அருள்புரியும் அளவிற்கு கருணை மிக்கவர். செல்வ மகளான லட்சுமியை பத்தினியாக கொண்டவரும், அந்த லட்சுமியை தனது இதயத்தில் கொண்டிருப்பவர் நாராயணனாகிய திருமால். இந்த நாராயணனை வழிபட்டு தங்கள் வாழ்க்கையில் தேவையானதை பெற்றதோடுமட்டுமில்லாமல், உயரிய ஞானமாகிய மெய்ஞ்ஞானத்தை பெற்று இறுதியில் மோட்ச நிலையை அடைந்தவர்கள் பலர். இந்த ஸ்தோத்திரத்தை கொண்டு நாராயணனை வழிபடுவதால் நன்மைகள் பல ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
பல வித நன்மைகளை தரும் கணபதி மந்திரம்

இது போன்ற மேலும் பல ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Narayana stotram in Tamil. It is also called as Narayana stotram lyrics Tamil. This is the powerful mantra of Lord Narayana in Tamil.