இந்த சுவாமியின் திருவுருவப்படம் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருந்தால், எந்த கெட்ட நேரமும் உங்களை எதுவும் செய்ய முடியாது. வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நல்ல நேரம் தான்.

மனிதராகப் பிறந்தவர்கள் எல்லோரும் அனுபவிக்கக்கூடிய இயல்பான ஒரு விஷயம் இது தான். வாழ்க்கையில் கெட்ட நேரம் வரும்போது அவர்களுக்கு கெட்டது நடக்கும். நல்ல நேரம் வரும் போது அவர்களுக்கு நல்லது நடக்க தொடங்கும். ஆனால் நல்லது நடக்கும் போது இறைவனை மறப்பதும், கெடுதல் நடக்கும் போது இறைவன் மீது பக்தியாக இருப்பதும், தவறான ஒரு விஷயம் தான். நல்லது நடந்தாலும் இறைவனுக்கு சொல்லவேண்டிய நன்றியை சொல்லிவிடுங்கள். கெடுதல் நடந்தாலும் இது நமக்கு வந்த சோதனை என்று அந்த இறைவன் மீது பாரத்தை போட்டுவிட்டு சோதனையில் இருந்து மீள்வதற்கான வழிகளை தேட வேண்டும். வாழ்க்கையின் எதார்த்தமே இதில்தான் அடங்கியுள்ளது.

poojai1

இனி கஷ்ட காலம் வரும்போது இறைவனை திட்டும் பழக்கம் உங்களிடம் இருந்தால் அதை இன்றோடு நிறுத்தி விடுங்கள். இறைவனை வஞ்சிப்பது உங்களுடைய வாழ்க்கைக்கு எந்த நாளிலும் நன்மையை கொடுக்காது. சரி, வாழ்நாள் முழுவதும் நாம் எந்த ஒரு சங்கடமான சூழ்நிலையிலும் சிக்கிக் கொள்ளாமல், சங்கடங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மன தைரியம் நமக்கு ஏற்பட நம்முடைய வீட்டில் எந்த தெய்வத்தின் திரு உருவ படத்தை வைத்து வழிபாடு செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாகவே பெருமாள் வழிபாடு செய்வது என்பது நமக்கு பணக் கஷ்டத்தை குறைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆடை அலங்காரத்துடன் இருக்கும் பெருமாள் பத்மாவதி தாயார் நம் வீட்டில் இருப்பது மிகவும் நல்ல விஷயம். ஆனால் அந்த பெருமாளை பள்ளிகொண்ட பெருமாளாக, ஆதிசேஷனின் மீது படுத்து மகாலட்சுமி தாயார் உடன் இருக்கும் இந்த பெருமாளை நம்முடைய வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் நாம் வாழ்நாள் முழுவதும் பல நன்மைகளை பெறமுடியும்.

narayanan

ஜாதக கட்டத்தில், தோஷத்தால் குடும்பத்தில் பிரச்சனை. வீட்டில் பண கஷ்டம். மனக்கஷ்டம் உறவினர்களிடையே ஒற்றுமை இல்லை. கடன் சுமை அதிகமாக உள்ளது. இப்படி பல வகையான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் வழிபாடு தான் இந்த ஆதிசேஷ நாராயணரின் வழிபாடு. இந்த உலகத்துக்கே படி அளப்பவர் அந்த பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமாள்.

- Advertisement -

அவருடைய படத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வதாக இருந்தால் எப்படி வழிபாடு செய்வது. தினம் தோறும் பெருமாளுக்கு ஒரு தீபம் ஏற்றி வைக்க வேண்டும். துளசி இலைகளை சூட்ட வேண்டும். தினமும் உங்களால் முடிந்த நிவேதனத்தை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து, ஒரு துளி பச்சை கற்பூரத்தை சந்தனத்தோடு கலந்து பெருமாளுடைய நெற்றியிலும் பாதங்களிலும் வைக்க வேண்டும்.

narayanan1

தினம் தோறும் அந்த பெருமாளிடம், இனிமையான இல்லற வாழ்க்கை அமைய வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு பூஜை செய்து வந்தால் நிச்சயமாக கஷ்டத்தில் இருக்கும் குடும்பம் கூட, படிப்படியாக நல்ல முன்னேற்றத்தை அடையும். உங்கள் வீட்டை பிடித்த தரித்திரம் நீங்கும்.

narayanan2

வறுமை என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கையில் இருக்காது. அந்த அளவிற்கு அதி அற்புதம் வாய்ந்த வழிபாட்டு முறைதான் இது. இந்த சுலபமான பெருமாள் வழிபாட்டை செய்து எல்லோரும் பயனடைய வேண்டும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.