நரேந்திர மோடி வாழ்க்கை வரலாறு

Modi
- Advertisement -

இந்தியாவின் 15ஆவது பாரத பிரதமர் என்ற பெருமைக்கு உரியவர் நரேந்திர மோடி. பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவராக இருந்து வருகிறார். இவர் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஆவர் . குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து வெற்றிபெற்று நீண்டகால முதல்வராக இருந்தவரும் இவரே. 2014ஆம் ஆண்டு குஜராத் மாநில முதலமைச்சர் பதவியினை ராஜினாமா செய்து அதே ஆண்டு இந்தியாவின் பிரதமராக உயர்ந்தார்.

modi-1

தொழில் வளர்ச்சிக்கு எப்போதும் உழைக்கும் நரேந்திர மோடியால் அவரது குஜராத் மாநிலம் அனைத்து துறைகளிலும் அவரின் திட்டங்களின் படி முன்னேற்ற பாதையினை அடைந்தது . இப்படி அரசியல் சாணக்கியனாக இருக்கும் நரேந்திர மோடி குறித்து பல தகவல்களை இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

- Advertisement -

மோடி பிறப்பு :

நரேந்திர மோடி இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் “வாட்நகர்” எனுமிடத்தில் தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி மற்றும் ஃகீரபேன்னுக்கும் என்கிற தம்பதிக்கு செப்டம்பர் 15, 1950 ஆம் ஆண்டு மகனாக பிறந்தார். இவருடன் சேர்த்து இவரது பெற்றோர்களுக்கு 6 குழந்தைகள் அதில் மூன்றாவதாக பிறந்தவர் இந்த நரேந்திர மோடி.

பெயர் – நரேந்திர மோடி
பிறந்த தேதி மற்றும் ஆண்டு – செப்டம்பர் 15, 1950
பிறந்த ஊர் – வட்நகர் [குஜராத்]
பெற்றோர் – தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி மற்றும் ஃகீரபேன்

- Advertisement -

நரேந்திர மோடி கல்வி மற்றும் திருமணம் :

தனது ஆரம்ப கல்வியினை குஜராத் மாநிலத்தில் உள்ள வட்நகரில் பயின்ற இவர் விடுமுறை நாட்களில் மற்றும் ஓய்வு நேரங்களில் ரயில் நிலையத்தில் உள்ள அவரது தந்தையின் டீ கடைக்கு சென்று அவருடன் உதவியாக வேலை செய்யும் பழக்கத்தினை வைத்திருந்தார். தனது சிறுவயதிலே ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் என்ற தேசியவாதிகளால் துவங்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். இவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் [Political Science] பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

- Advertisement -

modi-2

இவரின் திருமணத்தினை பற்றிய தகவல்கள் தெளிவாக கிடைக்கவில்லை என்றாலும் கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது இவர் செய்த வேட்புமனு தாக்கலில் அவருடைய மனைவியின் பெயர் “யசோதா பென்” என்று குறிப்பிட்டுள்ளார் . இவர்களுக்கு குழந்தை இருக்கிறதா என்பதும் உறுதிசெய்யப்படவில்லை.

தீவிர அரசியல் :

தனது சிறுவயதிலிருந்தே அரசியலில் ஈடுபட வேண்டும் என்று நினைத்த மோடி அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்’ அமைப்பின் குழு தலைவர் ஆக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு பல போராட்டங்களில் கலந்து கொண்ட அவர் தன்னை முழுவதும் அரசியலில் நுழைத்துக்கொள்ள முடிவெடுத்தார். அதன்படி முழு நேர அரசியல் வாதியாக மாற அவர் பாரதிய ஜனதா கட்சியில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்டார். அவர் தன்னை இணைத்துக்கொண்ட ஒரு ஆண்டிலே அந்த மாநிலத்தின் பொதுச்செயலாளர் ஆனார்.

1988 முதல் 1995 வரை அவர் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற வைக்கும் முயற்சிக்கான வரையறைகளை வகுத்து திட்டமிட்டபடி கட்சியின் நிலையினை வலுப்படுத்தினார் . மேலும் தனது அரசியல் வாழ்விலும் நல்ல முன்னேற்றத்தினை அடைந்து கொண்டு வந்தார் மோடி. இவரின் அரசியல் பயணத்தினை கட்சியின் மேலிடமும் உற்று கவனித்து வந்தது .

மோடியின் வளர்ச்சி ஒரு விதத்தில் அவர்களுக்கு ஆச்சரியத்தினை தந்தாலும்ப அது கட்சியின் பலத்தினை அதிகரிக்கும் என்று அன்றைய பிரதமரான அடல் பிகாரி வாஜிபாய் தேசிய செயலாளர் பதவியினை அளித்தார் . மேலும் 1988 ஆம் ஆண்டு ‘இமாச்சல பிரதேசம்’,’குஜராத்’ ஆகிய மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளராக அத்வானியால் நியமிக்கப்பட்டார். பிறகு இமாச்சலபிரதேசம்,பஞ்சாப்,ஹரியானா,சண்டிகர்,ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றின் பொது செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார்.

குஜராத்தின் முதல்வர் :

படிப்படியாக தனது வளர்ச்சியினை தொடந்த மோடி 2001ஆம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்த ‘கேசுபாய் பட்டேல்’ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நடந்த இடைத்தேர்தலில் ‘பாரதிய ஜனதாக் கட்சியின்’ தனிப்பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் 7, 2001 ஆம் ஆண்டு குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார்.

modi-3

பிறகு பிப்ரவரி 27, 2002 ஆம் ஆண்டு ” கோத்ரா ரயில் எரிப்பு ” சம்பவத்தின் காரணமாக அவர் தனது முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. இருப்பினும் அதே ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் முதல்வர் வேட்பாளராக நின்று போட்டியிட்டு வென்றார். இதன் பின் தனது சிறப்பான திட்டங்களால் குஜராத் மாநில மக்களின் நன்மதிப்பினை அவர் பெற்றார்.

பிறகு அரசியலில் உச்சம் தொட ஆரம்பித்தார் . அவரின் திறமையான செயல்பாடுகள் மக்களிடம் தொடர்ந்து வரவேற்கப்பட்டது. பிறகு 2007, 2012 என அடுத்த அடுத்த தேர்தல்களில் வெற்றி பெற்று தனது தகுதியினை நிரூபித்தார். ஆக தொடர்ந்து நான்கு முறை குஜராத் மாநில முதல்வராக இருந்துள்ளார்.

குஜராத் மாநில வரலாற்றில் ஒரு தலைவர் தொடர்ந்து நீண்ட காலமாக முதல்வர் பதவியில் இருந்தது என்றால் அது நரேந்திர மோடிதான். தொடர்ச்சியான வெற்றி மற்றும் மக்களின் ஆதரவினால் நாடு திரும்பி பார்க்கும் அளவிற்கு ஒரு பெரிய தலைவன் ஆனார்.

முதலமைச்சராக மோடி புரிந்த செயல்கள் :

தொடர்ந்து நான்கு முறை குஜராத் மக்கள் அவரை தேர்வு செய்தமையால் அவர் மக்களுக்கு சிறந்த தொண்டினை ஆற்றவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதே போல் மற்ற மாநிலங்களை விட குஜராத் சிறந்து இருக்கவேண்டும் என்று நினைத்த மோடி “சோலார் மின் உற்பத்தி” என்ற திட்டத்தின் மூலம் மின்சார உற்பத்தி திறனை அதிகரித்து நாட்டிலேயே குஜராத் மாநிலம் தான் மின் மிகை மாநிலம் என்று அடையாளம் காட்டினார்.

மேலும் நாட்டின் எதிர்காலம் இன்றைய இளைஞர்களின் கையில் உள்ளது என்பதனை உணர்ந்த மோடி அந்த மாநில கடைகளில் “குட்கா” போன்ற அனைத்து வகையான பாக்கு வகைகளை முற்றிலும் தடை விதித்தது. மேலும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பினை உண்டாகும் யுக்தியோட பல புதிய திட்டங்களை அந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்தினார்.

மேலும் அடிப்படை வசதிகளான தண்ணீர், சாலை, பள்ளிகள், மருத்துவம் , விவசாயம் மற்றும் பெண்பாதுகாப்பு என அனைத்து பிரிவுகளிலும் அவர் சிறப்பான முறையில் பல திட்டங்கலளை அறிமுகப்படுத்தி செயல்படுத்தியும் காட்டினார். மோடியின் ஆளுமைத்திறன் இந்த திட்டங்களின் மூலம் வெளிப்பட்டதுமில்லாமல் அந்த மாநில முன்னற்றத்திற்கு ஒரு படிக்கல்லாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

15ஆவது இந்திய பிரதமராக பதவியேற்ற மோடி :

2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக தான் வகித்து வந்த குஜராத் முதல்வர் பதவியினை ராஜினாமா செய்த மோடி ‘தேசிய ஜனநாயக கூட்டணி’ மூலம் பிஜேபி மற்றும் இதர கூட்டணி கட்சிகளின் மூலம் பிரதமராகும் பிரகாசமான வாய்ப்பினை பெற்றார். இதற்காக அவர் நாடு முழுவதும் நடந்த மொத்தம் 430 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

modi-4

பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் “தேசிய ஜனநாயக கூட்டணி” வெற்றி பெற்றது. இதன் மூலம் மோடி இந்தியாவின் பிரதமர் ஆனார். இதுவ்ரை இருந்த பிரதமர்கள் அனைவரும் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன் பிறந்தவர்கள். ஆனால், மோடி மட்டும் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பின் பிறந்த பிரதமர் என்ற சிறப்பினையும் பெற்றார்.

மோடியின் ஆடம்பர உடை மற்றும் வெளிநாட்டு பயணங்கள் :

மோடியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்த கருத்துக்கள் அவருக்கு எதிராக விமர்சனங்களை பெற்றுத்தந்தது. இருப்பினும் அவரது வெளிநாட்டு பயணங்களின் மூலம் பல வெளிநாட்டு அரசுடன் இந்திய அரசுக்கு சுமூக உறவு ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் அணியும் விலை உயர்ந்த ஆடைகளையும் அவருக்கு எதிர்மறையான விமர்சனத்தினை பெற்றது.

அரசுமுறைப் பயணமாக இதுவரை 2014 ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் 2015 ஆம் ஆண்டு சூன் மாதம் முடிய ஓராண்டில் மட்டும் 16 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இதற்கான மொத்த செலவு 37 கோடிகள் ஆகும். இதில் ஜப்பான், இலங்கை, பிரான்ஸ் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளுக்கு சென்ற விபரங்கள் கொடுக்கப்படவில்லை. இதில் அதிக செலவாக ஆஸ்திரோலியா சென்றதற்கு 8.91 கோடிகளும், குறைந்த செலவாக பூடான் சென்று வந்ததற்காக 41.33 லட்சங்களும் செலவிடப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு :

மோடியினால் கொண்டு வரப்பட்ட ஒரு சிறப்பான திட்டம் பணமதிப்பிழப்பு திட்டம். நவம்பர் 8 2016 ஆம் தேதி இந்த பணமதிப்பிழப்பு திட்டதிற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி 500ரூபாய் மற்றும் 1000ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் மக்களிடம் உள்ள 500மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் மூலம் கருப்பணத்தினை ஒளித்துவைத்துக்கும் நபர்களிடம் இருந்து அந்த பணத்தினை திரும்பப்பெற முடியும் என்பதனால் யாரும் சற்று யோசித்து பார்க்காத நேரத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டு முழுநாட்டினையும் ஒரு நிமிடம் அசர வைத்தார்.

ஆதார் கார்டு :

ஆதார் கார்டு இந்த திட்டத்தின் படி இந்தியர்கள் அனைவரும் இந்த அடையாள அட்டையினை வைத்து கொள்ளவேண்டும். நாட்டின் எந்த மூலைக்கு நீங்கள் சென்றாலும் இந்தியன் என்ற அடையாளம் இதன் மூலம் புலப்படும் என்பதே . இது ஒரு மிகசிறந்த திட்டமாகவே கருதப்படுகிறது. உங்களின் எந்த தேவைக்காகவும் இந்த ஆதார் அடையாள அட்டையினை நீங்கள் அடையாள அட்டையாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

பசுமை இந்தியா திட்டம் :

மோடி கொணர்ந்த திட்டங்களில் மிக முக்கியமான மற்றும் வலிமையான திட்டம் என்று இதனை கூறலாம். பசுமை இந்தியா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் குபைகைளை அகற்றி சுகாதாரமாகவும் பசுமையாகவும் இருக்கவேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

English Overview:
Here we have Narendra Modi biography in Tamil. Above we have Narendra Modi history in Tamil. We can also say it as Narendra Modi varalaru in Tamil or Narendra Modi essay in Tamil or Narendra Modi Katturai in Tamil.

சத்ரபதி சிவாஜி வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -