சத்ரபதி சிவாஜி வாழ்க்கை வரலாறு

Sivaji
- Advertisement -

மராத்திய சாம்ராஜ்யத்தின் ஒரு பெரிய வீரன் மற்றும் அரசன் என்றால் அது சத்ரபதி சிவாஜி என்று கூறலாம். அவரின் வீரம், ஆளுமை, நிர்வாகத்திறன் மற்றும் படைத்திறன் போன்றவைகளை கொண்டு அவர் மராத்திய பேரரசை அசைக்க முடியாத நிலைக்கு கொண்டு சென்றார். மராத்தியர்கள் ஆட்சியில் என்றும் மறையாத ஒரு காலம் என்றால் சத்ரபதி சிவாஜி ஆட்சி புரிந்த காலம் என்றே கூறலாம்.

sivaji-1

கொரில்லா தாக்குதல் யுக்திகளை போரில் சண்டையிடும் போது இவர் பயன்படுத்துவார். ஏனெனில் சிவாஜியிடம் இருந்தது குறைந்த அளவிலான இராணுவப்படையே அதனால் எதிரிகளை விரைவாக வீழ்த்தவும், அழிக்கவும் இந்த யுக்திகளை சிவாஜி பின்பற்றினார்.மராத்திய பேரரசின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் வித்திட்ட அப்பேற்பட்ட ஒரு அரசனின் வாழ்க்கை வரலாற்றின் தொகுப்பினை இந்த பதிவில் காணலாம் . சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றினை தெரிந்து கொள்ள இந்த பதிவினை தொடர்ந்து படிக்கவும்.

- Advertisement -

சத்ரபதி சிவாஜி பிறப்பு :

சத்ரபதி சிவாஜி அவர்கள் புனே நகரின் அருகில் உள்ள சிவனேரிகோட்டையில், சஹாஜி மற்றும் ஜிஜாபாய் என்ற தம்பதியினருக்கு பிப்ரவரி 19ஆம் தேதி 1627ஆம் ஆண்டு 5வதாக பிறந்தார் .

பெயர் – சிவாஜி மஹாராஜ்
பிறந்த தேதி மற்றும் ஆண்டு – பிப்ரவரி 19, 1627
பெற்றோர் – சஹாஜி மற்றும் ஜிஜாபாய்
பிறந்த இடம் – சிவனேரிகோட்டை

- Advertisement -

சிவாஜி நிர்வாக பயிற்சி :

சிவாஜி மகாராஜ் அவர்களின் தந்தையான சஹாஜி, ஜிஜாபாய் மேற்பார்வையின் கீழ் புனே உடைமைகளை கவனிக்கும் பொறுப்பினை தன் மகனான சிவாஜிக்கு ஒப்படைக்கப்பட்டது. மேலும் அவருக்கு நிர்வாகத்தினை வழிநடத்த உதவியாகவும் அதனை பயிற்றுவிக்க ஒரு சிறிய அமைச்சரவை குழுவினையும் அவர் சிவாஜிக்கு ஏற்படுத்தி குடுத்தார்.

- Advertisement -

மேலும் சஹாஜி சிவனேரி கோட்டைக்கு அருகில் புனேவில் தனது மகனான சிவாஜிக்கும் தன்
மனைவியான ஜிஜாபாய் அவர்களுக்கும் ஒரு மஹாலை கட்டி கொடுத்தார். இவ்வாறு தனது இளவரசர் வாழ்க்கையினை அவர் துவங்கினார். பிறகு சஹாஜியின் இறப்பிற்கு பின் அரசன் ஆனார் சத்ரபதி சிவாஜி.

அன்னையின் அரவணைப்பில் வளர்ந்த சிவாஜி :

சஹாஜி பெரும்பாலும் பெங்களூருவில் இருப்பார். எனவே சிவாஜி தன தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். அவரது தாய் அவருக்கு தாய் மண் மீது வைக்கவேண்டிய பாசம் குறித்தும், மக்களின் மீது வைக்கும் அன்பு பற்றியும் தெளிவாக கூறி அவனை வளர்த்தார். அவரின் தனித்துவமான இராணுவ திறமைகள் மற்றும் சாதனைகள், சமஸ்கிருதம், இந்து பண்பாடு, கலைச்சிறப்புகள், அவரின் யுத்த தந்திரங்கள் மற்றும் அமைதிகால இராஜாங்கம் ஆகியவற்றை கற்று கொண்டார்

தன்னை வளர்க்கும் சொந்த விடயங்கள் மட்டும் கற்றுக்கொள்ளாமல் தனது அறிவினை பெருக்கும் காவியங்களான ராமாயணம் மற்றும் மஹாபாரதம் போன்ற புராண இதிகாசங்களையும் கற்று தன் பண்பினை நெறிப்படுத்திக்கொண்டார்.

முதல் ராணுவ தாக்குதல் மற்றும் சுல்தானியர்களுடன் போர் :

1645ஆம் ஆண்டு தனது 17ஆம் வயதில் டோர்னா கோட்டையை தாக்கி கைப்பற்றினார். பிறகு 1647ஆம் ஆண்டு கொண்டனா மற்றும் ராஜ்கோட் கோட்டைகளை கைப்பற்றினார். பிறகு புனே தொடர்ந்து மேற்கத்திய கோட்டைகளையும் கைப்பற்றி தனது பேரரசை விரிவுபடுத்தினார். பிறகு நிறைய போர்களை அடுத்தடுத்து சந்தித்தார் சத்ரபதி சிவாஜி

sivaji-2

*பிரதாப்கட் போர்
*கோல்ஹாபூர் போர்
*பன்ஹாலா முற்றுகை
*பவன்கிண்ட் யுத்தம்

முகலாயர்களுடன் போர் :

கொங்கன் என்ற பகுதியில் முகலாய படைத்தளபதி கர்தலாப் கானை தோற்கடித்த இவர் சாயிஸ்தாகான் என்பவரது தலைமையில் வந்த படையினரையும் வென்று முகலாய மன்னர்களின் நிலைமையினை சரித்தான்.

மேலும் 1964, 70 ஆம் ஆண்டுகளில் சூரத் நகரை தாக்கி சிவாஜி அவர்கள் சூரத் முழுவதும் கொள்ளை அடித்து தனது ராஜ்யத்தின் செல்வத்தினை பெருக்கிகொண்டார். மேலும் இவரின் வளர்ச்சியினை தடுக்க நினைத்த அப்சல் கான் என்பவன் சிவாஜியை கொல்ல ரகசியமாக ஒரு திட்டம் தீட்டி அவரை ஒரு உணவு விருந்திற்கு அழைத்தான் .

அந்த விருந்தில் தன்னை கொள்ள திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதனை அறிந்த சிவாஜி தனது சிறிய பாதுகாப்பு படையுடன் அவர்களை வீழ்த்தி தப்பினார். பிறகு முகலாயர்களின் ராஜ்யத்தில் தொடர்ந்து பல இடங்களை அவர் தனது திறமையின் மூலம் தன வசப்படுத்தினார்.

சிவாஜி சத்ரபதியாக முடிசூட்டல் :

வரலாற்றில் இவரது பெயரினை இன்றுவரை மறையாமல் காப்பது அவருடைய “சத்ரபதி” என்கின்ற பட்டமே. இந்த பட்டத்தினை இவர் அடைய இவரின் வீரமே முக்கியகாரணமாக அமைந்தது. 1674 ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி ராய்கட் கோட்டையில் இவர் சத்ரபதியாக முடிசூட்டப்பட்டார்.

sivaji-4

சத்ரபதி சிவாஜியின் ஆட்சிமுறை :

சத்ரபதி சிவாஜி தனது இளம் வயதிலேயே அவரது அப்பாவின் மூலம் கொண்டுவரப்பட்ட அமைச்சர்கள் மூலம் நிர்வாகத்தினை வழிநடத்த மற்றும் கையாளவும் கற்றுக்கொண்டார்.
எனவே அந்த பயிற்சி இவருக்கு நல்ல அனுபவத்தினை தந்தது. இவரது ஆட்சிமுறை மற்ற மன்னர்களை ஒப்பிடுகையில் தனிப்பட்டு இருந்தது என்றே கூறவேண்டும்.

இவர் தனது போர்திறன் மூலம் பல கோட்டைகளை பிடித்தாலும் தனது நிர்வாகத்திறன் மூலம் மக்களுக்கு வேண்டிய பணிகளை மிகவும் சிறப்பாகவே செய்தார். தனது ராஜ்யத்தில் இருக்கும் மக்கள் துன்பமில்லாமல் இன்புற்று வாழ வேண்டும் என்று நினைத்த சத்ரபதி சிவாஜி அவர்கள் மக்களுக்கு சிறப்பான திட்டங்களை வகுத்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து மக்கள் போற்றும் ஒரு மன்னனாகவே திகழ்ந்தான்.

ஆட்சி முறையில் மாற்றங்களை கொண்டு வந்த அவர் வரிவசூல் செய்யும் அளவிலும் மக்களின் நன்மை கருதி பல மாற்றங்களை கொண்டுவந்தார். அவரது ராஜ்யத்தினை பர்கானாவாக பிரித்து அனைத்து பர்கானாவிற்கும் தனித்தனியே ஆட்சியாளர்களை நியமித்து அனைத்து நிகழ்வுகளையும் நேரடியாக அவரே கண்காணித்தார். இதனால் அவரது செயல்பாடு அனைவராலும் விரும்பப்பட்டது.

sivaji-3

சத்ரபதி சிவாஜியின் இறப்பு :

சத்ரபதி சிவாஜி அவர்கள் தனது 53ஆம் வயதில் 1680ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி அன்று ரத்தப்பெருக்கு நோயினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். வாழும்வரை சக்ரவர்த்தியாக வாழ்ந்த சத்ரபதி சிவாஜி இன்றுவரை வீரத்தின் அடையாளமாக திகழ்கிறார் என்றால் அது மிகையில்லை.

English Overview:
Here we have Sathrapathy Sivaji biography in Tamil. Above we have Sathrapathi Sivaji history in Tamil. We can also say it as Sathrapathy Sivaji varalaru in Tamil or Sathrapathy Sivaji essay in Tamil or Sathrapathy Sivaji Katturai in Tamil.

சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -