பேஷியல் பண்ண இன்னுமா பார்லர் போயிட்டு இருக்கீங்க? இப்படி ஒரு முறை பேஷியல் பண்ணி பாருங்க பார்லர் போன கூட இவ்வளவு பளிச்சின்னு அக முடியாதுன்னு நீங்களே சொல்லுவீங்க.

- Advertisement -

முகத்தை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது பார்லர் தான். என்ன தான் பார்லர் சென்று அதிக செலவு செய்து முகத்தை அழகாக மாற்றிக் கொண்டாலும், அங்கு பயன்படுத்ததும் கெமிக்கல் கலந்த கிரீம்களால் முகத்தில் பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. இந்த முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பேசியல் செய்யும் போது முகம் அழகாவத்துடன், உங்கள் முகத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. அது எப்படி என்று இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்வோம்.

இந்த பேஷியில் செய்வதற்கு முதலில் முகத்தை சுத்தம் செய்த பிறகு, காய்ச்சாத பாலை எடுத்து முகம் முழுவதும் தேய்த்த பின் தண்ணீர் வைத்து முகத்தை நன்றாக துடைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்ததாக முகத்திற்கு ஒரு ஸ்க்ரப் தயார் செய்ய வேண்டும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு, 1டேபிள் ஸ்பூன் பால், இரண்டையும் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் தேய்த்து லேசாக ஸ்க்ரப் செய்த பின் முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு துடைத்த பிறகு, காட்டன் துணி வைத்து துடைத்து விட வேண்டும். முகத்தில் அதிகமாக முகப்பரு இருந்தால் இந்த ஸ்க்ரப்பிங் முறையை தவிர்த்து விடுங்கள்.

பேஷியல் பேக் போடுவதற்கு முன்பாக நல்ல கெட்டியான அதிகம் புளிக்காத தயிர் 1 ஸ்பூன்,  பீட்ரூட் ஜூஸ்1 ஸ்பூன், இவை இரண்டையும் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் தேய்த்து மைய்லடாக மசாஜ் செய்த பிறகு முகத்தை ஈர துணி வைத்து துடைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது பேஷியல் பேக்கை தயார் செய்து போட்டு விடலாம். அதற்கு 2 ஸ்பூன் கோதுமை மாவு, 1 டீஸ்பூன் பீட்ரூட் ஜூஸ், 1 டீஸ்பூன் பால், 1 சிட்டிகை மஞ்சள் சேர்த்து நன்றாக குழைத்த பிறகு உங்கள் முகத்தில் தேய்த்து 20 நிமிடம் வரை இதை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு உங்கள் முகத்தை துடைத்து கொள்ளுங்கள். இவையெல்லாம் செய்த பிறகு சோப்பு போட்டு முகத்தை அலம்ப கூடாது.

பார்லர் சென்று அதிக செலவழித்தது பேஷியல் செய்தால் கூட, உங்கள் முகம் மாறி இத்தனை பளபளப்பாக இருக்குமா என்பது சந்தேகம் தான். இந்த பேஷியல் நீங்கள் அடிக்கடி செய்தாலும் உங்கள் முகத்திற்கு எந்த பக்கம் விளைவும் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படாது.

இதையும் படிக்கலாமே: மருதாணி இலையை அரைத்து வைத்தால் அடர்த்தியாக செவக்கவில்லையா? சமையல்கட்டில் இந்த 3 பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க வச்சி எடுத்தாலே செக்க செவேல்ன்னு செவக்குமே!

இந்த முறைகளை மட்டும் ஒவ்வொன்றாக சரியாக செய்து கொள்ளுங்கள் போதும். உங்கள் முக அழகை பார்த்து நீங்களே அதிசயித்து போவீர்கள். இனியும் அதிக அழகிற்காக அதிக செலவழிக்காமல் இது போல வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே, நம்முடைய முக அழகை மேலும் அதிகரித்து கொள்ளலாம்.

- Advertisement -