மருதாணி இலையை அரைத்து வைத்தால் அடர்த்தியாக செவக்கவில்லையா? சமையல்கட்டில் இந்த 3 பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க வச்சி எடுத்தாலே செக்க செவேல்ன்னு செவக்குமே!

maruthani-henna-tamil
- Advertisement -

மருதாணியில் ஏராளமான நற்குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. பெண்கள் அடிக்கடி மருதாணி வைத்துக் கொண்டால் அவர்களுக்குள் இருக்கும் உஷ்ணம் குறைந்து சாந்தம் அடைவார்கள். இதனால் அடிக்கடி கோபப்பட மாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். பெண்கள் ரொம்பவே விரும்பி வைக்கும் இந்த மருதாணி இலையை பிரஷ்ஷாக அரைத்து வைத்தால் தான் அதன் பலன்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.

இப்பொழுது செயற்கையாக மருதாணி விற்பனை படு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இவற்றால் கைகளில் அலர்ஜி போன்ற பிரச்சனைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு, மேலும் பார்ப்பதற்கு அழகாக இருக்குமே தவிர எந்த பலனும் இல்லை. எனவே இயற்கையாக கிடைக்கக்கூடிய மருதாணி இலைகளைக் கொண்டே நீங்கள் மருதாணி வைத்துக் கொள்ளுங்கள். மருதாணி இலையை அரைத்து வைத்தாலும் சிலருக்கு அடர்த்தியாக டார்க் நிறத்தில் சிவப்பது கிடையாது. அவர்களுடைய கைகளில் அது ஆரஞ்சு நிறத்திலேயே தான் இருக்கும்.

- Advertisement -

எவ்வளவு நேரம் வைத்திருந்தாலும் சிவக்காத கைகளிலும் சமையல் கட்டில் இருக்கும் இந்த மூன்று பொருட்களை சேர்த்து மருதாணி இலையுடன் அரைத்து வைத்துக் கொண்டால் வெச்ச உடனேயே சிவக்க ஆரம்பித்து விடும். அந்த பொருட்கள் என்னென்ன? எப்படி மருதாணி அரைப்பது? என்று தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் இனி நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

மருதாணி இலைகளை பிரஷ் ஆக பறித்து எடுத்து வாருங்கள். இரண்டு கைப்பிடி அளவிற்கு மருதாணி இலைகளை நீங்கள் எடுத்து நன்கு அலசி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். முன்பெல்லாம் அம்மியில் தான் மருதாணி அரைப்பார்கள். ஆனால் இப்பொழுது அம்மிக்கு எங்கே போவது? அதனால் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மிக்ஸியில் இரண்டு கைப்பிடி மருதாணி இலைகளை சேர்த்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவிற்கு புளியை விதைகள், நார் எல்லாம் நீக்கிவிட்டு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தேயிலை தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். எந்த பிராண்ட் டீத்தூளாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் கடைசியாக ஒன்றரை ஸ்பூன் வெள்ளை சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள்.

மருதாணி இலையுடன் சர்க்கரை, டீ தூள் மற்றும் புளி ஆகியவற்றை சேர்த்து நைசாக இப்பொழுது அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். கெட்டியாக தண்ணீர் அதிகம் சேர்க்காமல் அரைக்க வேண்டும் என்பதையும் மறந்து விட வேண்டாம். இப்போது மருதாணி வைப்பதற்கு தேவையான கலவை தயார்! இதை அழகாக கைகளில் உங்கள் விருப்பம் போல நீங்கள் பல விதமான டிசைன்களில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

கைகளில் தொப்பி போல மருதாணி வைப்பதால் நக இடுக்குகளில் இருக்கக்கூடிய கிருமிகள் நீங்கும். மேலும் உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான உஷ்ணம் தனியும். குளிர்ச்சி உடம்பு உள்ளவர்கள் அடிக்கடி மருதாணி வைத்துக் கொள்ளக் கூடாது.

இதையும் படிக்கலாமே:
பாட்டியாகும் வயதில் கூட பியூட்டியாக இருக்க வேண்டும் என்றால், நிச்சயமாக இதை தான் பயன்படுத்த வேண்டும். முதுமை தோற்றத்தை வர விடாமல் தடுக்கும் சூப்பர் டிப்ஸ்.

உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வாரம் ஒரு முறையாவது மருதாணி வைத்துக் கொள்ளலாம். இந்த பொருட்கள் எல்லாம் சேர்த்து நீங்கள் மருதாணி அரைக்கும் போது கையில் எடுத்தாலே செக்க செவேலென சிவக்க ஆரம்பித்து விடும். அப்படி என்றால் நீண்ட நேரம் வைத்திருந்தால் எப்படி இருக்கும் பாருங்கள்! மருதாணி வைப்பதற்கு முன்பு கையில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை தடவி கொள்ளுங்கள். இதே மாதிரி நீங்களும் மருதாணி வச்சு பாருங்க சிவக்காத உங்கள் கைகளும், இனி செகப்பா சூப்பரா சிவக்கும்.

- Advertisement -