பார்லருக்கு போகாமலேயே ஃபேஷியல் செய்தது போன்ற பளிச்சென்ற முகம் பெற இந்த 3 பொருட்கள் போதுமே!

katrazhai-kadalai-maavu-facial
- Advertisement -

எல்லோருக்குமே தன் சரும அழகை பேணிப் பாதுகாப்பதில் கூடுதல் அக்கறை இருக்க தான் செய்கிறது. இதற்காக அதிகம் செலவு செய்து மெனக்கெட்டு பார்லருக்கு போய் தான் நம் சருமத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களைக் கொண்டே பார்லர் தரும் அந்த ஃபேஷியல் சருமத்தை எளிதாக எப்படி பெறுவது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

முகத்தில் இருக்கும் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், ஆங்காங்கே தென்படும் வெள்ளைத் திட்டுக்கள் ஆகியவற்றை சுத்தம் செய்வதற்கு மாதம் ஒருமுறை பார்லருக்கு சென்று ஃபேஷியல் செய்து கொள்வார்கள். அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப செயற்கையான முறையில் செய்து கொள்ளும் இந்த சரும பராமரிப்பை நாம் இயற்கையாக ரொம்ப ரொம்ப சுலபமாக நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே எப்படி செய்வது?

- Advertisement -

கடலைமாவு என்பது இயற்கையாக நம் சருமத்தை பராமரிக்க கூடிய ஒரு பொருளாகும். முகத்திலிருக்கும் தளர்வை நீக்கி முகத்தை இளமையாக வைத்துக் கொள்வதற்கு கடலைமாவு பெருமளவு உதவி செய்கிறது. அதே போல கற்றாழை ஜெல் முகத்தில் இருக்கும் இழந்த பொலிவை மீட்டுத் தரக் கூடிய அற்புத ஆற்றல் படைத்தது. சரும பராமரிப்புக்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் இந்த கற்றாழை ஜெல்லை இயற்கையாக எடுத்து நாம் பயன்படுத்துவது அதிக பலனைக் கொடுக்கும்.

பாதாம் எண்ணெயில் இருக்கும் சத்துக்கள் நம் சருமத்தில் இருக்கும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும் இந்த எண்ணெய் சருமத்தை வேரில் இருந்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவி புரிகிறது. எனவே இந்த மூன்று பொருட்களை வைத்து தான் நாம் இப்போது பேஷியல் செய்து கொள்வது போல செய்யப் போகிறோம்.

- Advertisement -

முதலில் பாதாம் எண்ணெய்யை உங்கள் தேவைக்கு ஏற்ப அடுப்பில் வைத்து சூடு ஏற்றிக் கொள்ளுங்கள். வெது வெதுப்பாக இருக்கும் இந்த பாதாம் எண்ணையை கை பொறுக்கும் சூட்டில் தொட்டு முகம் முழுவதும் தடவி முன்னும் பின்னுமாக மசாஜ் செய்ய வேண்டும். அதிக பட்சம் 15 நிமிடம் வரை இப்படி செய்வதால் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை தூண்டி விட செய்ய வேண்டும்.

15 நிமிடம் கழித்து ஒரு காட்டன் துணியால் முகத்தை துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். முகத்தை துடைக்கும் பொழுது எப்பொழுதும் அழுத்தம் கொடுத்து துடைக்கக் கூடாது. லேசாக அழுத்தம் இல்லாமல் துடைத்து எடுக்க வேண்டும். பிறகு 2 ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் போட்டுக் கொள்ளுங்கள். கடலை மாவு சுத்தமானதாக கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டும் எனவே நீங்கள் வீட்டிலேயே அரைத்து வைத்துள்ள கடலை மாவாக இருப்பது நல்ல பலன் தரும்.

அதனுடன் 2 ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை அலசி எடுத்துக் கொள்ளுங்கள். கற்றாழையில் இருக்கும் தோல் பகுதியை நீக்கியதும் உள்ளே இருக்கும் ஜெல்லை நன்கு ஆறு, ஏழு முறை தண்ணீரில் அலச வேண்டும். அப்போது தான் அதில் இருக்கும் கசப்பு தன்மை நீங்கும். பின்னர் கைகளால் கற்றாலை ஜெல்லும், கடலைமாவும் ஒன்றுடன் ஒன்று கலந்து வர பிசைந்து கொள்ளுங்கள்.

பின்னர் இந்த மாவை முகம் முழுவதும் தடவி உலரும் வரை அப்படியே விட்டு விடுங்கள். உலர்ந்து கெட்டியாக முகம் இருக்கும் பொழுது வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது குளிர்ந்த தண்ணீரால் முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இப்படி செய்த பின்பு முகத்தை கழுவ கூடாது. பவுடர் எதுவும் போடக்கூடாது. மறுநாள் நீங்கள் பார்க்கும் பொழுது ஃபேஷியல் செய்தது போன்ற பளிச்சென்ற பொலிவான முகம் உங்களை ஆச்சரியப்பட செய்யும்.

- Advertisement -