பூக்கள் உதிராமல் உங்கள் செடிகள் ஆரோக்கியமாக வளர இந்த 2 சைவ பொருளே போதும்.

- Advertisement -

நாம் அரும்பாடு பட்டு வளர்க்கும் பூச்செடிகளில் பூக்கள் உதிர்வதை, பூச்சி அரிப்பதை பார்க்கும் போது வேதனையாக தான் இருக்கும். செடிகளுக்கு வளர்ச்சி ஊக்கியாக சில பொருட்கள் விற்கப்படுகின்றன. உதாரணத்திற்கு மீன் அமிலம், உயிர் உரம், பஞ்ச கவ்யம், ஜீவாமிர்தம் இவற்றை கடைகளில் வாங்கி உபயோகிப்பதை விட தாமே வீட்டில் தயார் செய்வதை பெரும்பாலும் விரும்புகின்றனர். நாம் வீட்டிலேயே சைவ முறையில் வளர்ச்சி ஊக்கி தயாரிக்கலாம். இந்த 2 பொருள் சேர்த்து இதனை தயார் செய்தால் உங்கள் செடிகளில் பூக்கள், பிஞ்சுகள் போன்றவை உதிராமல் ஆரோக்கியமாக வளரும். ஊட்ட சத்து மிக்க இந்த கரைசலை எப்படி தயாரிப்பது என்று இப்பதிவில் காணலாம்.

banana

நன்கு பழுத்த அழுகிய வாழைப்பழம் ஒரு கிலோ எடுத்து கொள்ளுங்கள். அதனை தோலுடன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பப்பாளி இருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் பிரச்சனை இல்லை. அதனுடன் நாட்டு சர்க்கரை/வெல்லம் அல்லது கருப்பட்டி ஒரு கிலோ தேவைப்படும். கருப்பட்டி சாதாரணமாக கிடைக்கக் கூடியவர்கள் வீட்டில் பயன்படுத்தலாம். இல்லாதவர்கள் நாட்டு சர்க்கரை சேர்த்து கொள்ளலாம். வேறு எந்த சர்க்கரையும் சேர்த்து கொள்ளக் கூடாது.

- Advertisement -

காற்று புகாத டப்பாவில் இந்த 2 பொருட்களையும் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இருக மூடி விட வேண்டும். 4வாரங்களில் இந்த கரைசல் நன்றாக நொதித்து விடும். 2நாளுக்கு ஒருமுறை டப்பாவை நன்றாக குலுக்கி வைத்தால் போதுமானது. நொதித்த பின்பு கரைசல் தயாராகி விடும். அதன் பின்னர் இதில் அழுகிய வாடை வரக் கூடாது. பஞ்சாமிர்த வாசம் வந்தால் கரைசல் சரியாக இருக்கிறது என்று பொருள்.

rose-plant-spray

பின்னர் வேறு டப்பாவில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பழ கரைசலை 50மில்லி லிட்டர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்துக் கொள்ளுங்கள். இக்கலவை உங்கள் செடிகளுக்கு வாரம் ஒருமுறை ஸ்ப்ரே செய்தாலே போதும். எந்த வகையான செடிகளுக்கும் இதனை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

பூச்செடிகள், காய்கறிகள், சிறு சிறு மூலிகை செடிகள், பழ வகை தாவரங்கள் என்று அனைத்திற்கும் வளர்ச்சி ஊக்கியாக இருக்கும். செடிகள் செழித்து வளரும். பூக்கள் உதிராது. அசைவம் அல்லாமல் சைவம் கொண்டு இயற்கையான முறையில் உங்கள் செடிகளுக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கியாக இதனை பயன்படுத்தினால் பூக்கள் கொத்து கொத்தாக, பெரிதாக, ஆரோக்கியமாக, நிறைய பூக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் இருக்கும் செடிகளில் நிறைய பூக்கள் பூக்க, நிறைய காய்கறிகள் காய்க்க, தொட்டியில் இருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து விட்டு, இந்த பொருளை சேர்த்து பாருங்கள்!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Natural growth stimulants for plants. Chedigal valarpathu eppadi. Chedigal valarpu murai, Natural plant growth. Healthy plant for home.

- Advertisement -