பத்து வருடத்திற்கு முன்னால் சென்றால், ஒரு வர்த்தியை கொளுத்தி வைத்தாலே போதும், எல்லா கொசுக்களும் பயந்து ஓடிவிடும். ஆனால் இப்பொழுது இருக்கும் கொசுக்கள் எல்லாம் ரொம்பவும் ஸ்ட்ராங்க் ஆகிவிட்டது போல! என்ன செய்தாலும் கொசு மட்டும் போகவே மாட்டேன் என்று அடம் பிடித்து பல்லை காட்டுகிறது. இந்த பிடிவாதம் பிடித்த கொசுக்களை இயற்கையான முறையில் எப்படி விரட்டி அடிப்பது? என்னும் ரகசியத்தை தான் இந்த வீட்டுக்குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
ஊசி போல இருக்கும் தன் மூக்கை கொண்டு கொத்தி பிடுங்கி எடுக்கும் இந்த கொடூர கொசுக்களை விரட்டியடிக்க செயற்கையான பல வழிமுறைகள் உள்ளன. கடுமையான ரசாயன கலவை கொண்டுள்ள மருந்துகளை உபயோகித்தால் கூட கொசுக்கள் முழுமையாக நீங்குவது கிடையாது. இயற்கையான வழிமுறையை கையாண்டாலே மனிதர்களுக்கு ஆபத்து இல்லாமல் கொசுக்களை விரட்டியடிக்கலாம்.
முதலில் இதற்கு ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான மஞ்சள் தூளை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் அரை ஸ்பூன் அளவிற்கு காபி பவுடரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டையும் ஒன்றுடன் ஒன்றாக நன்கு கெட்டியான பேஸ்ட் போல கலந்து விட வேண்டும். இதற்கு தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். கெட்டியான பேஸ்ட் போல கலந்து வைத்ததும், அதை நான்கைந்து பிரிஞ்சி இலைகளில் தடவி விட வேண்டும். இந்த பிரியாணிக்கு பயன்படுத்தும் இலைகள் தான் கொசுவை விரட்டி அடிக்க போகிறது.
பிரியாணி இலையில் இரண்டு புறமும் இந்த கலவையை தடவி உலர வைக்க வேண்டும். காலையிலேயே இதை செய்து உலர வைத்து விடுங்கள். எத்தனை இடங்களில் வைக்க வேண்டுமோ, அத்தனை இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். நன்கு உலர்ந்த பின்பு ஒவ்வொரு இலைகளாக எடுத்து கொசு உங்கள் வீட்டிற்கு வரும் மாலை நேரத்தில் தேவையான இடங்களில் மட்டும் எரித்து புகையை காண்பியுங்கள்.
இலையை எரித்து ஒரு தட்டில் வைத்து விட்டால் புகை வீடு முழுவதும் பரவ ஆரம்பிக்கும். எந்தெந்த இடங்களில் வைக்க வேண்டுமோ, அந்தந்த இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் புகை வாசம் நமக்கு ஒன்றும் செய்யாது, ஆனால் கொசுக்களுக்கு சுத்தமாக பிடிக்காது போகும். இது ஒரு வகையான ஒவ்வாமையை ஏற்படுத்தும். இந்த புகையால் கொசுக்கள் நம் வீட்டை ஆக்கிரமிப்பதிலிருந்து பயந்து வெளியே ஓடிவிடும்.
இதையும் படிக்கலாமே:
23-11-2024 பைரவ அஷ்டமி குளிக்கும் முறை
உங்கள் வீட்டில் குறிப்பாக கொசுக்கள் நுழையக் கூடிய வாயில் பகுதியில் வையுங்கள். அதன் பின்பு சமையலறையில் ரெண்டு, மூன்று இலைகளை பற்ற வையுங்கள். பாத்திரம் கழுவும், தண்ணீர் தேங்கும் சிங்க் பகுதியின் அடிப்பாகத்தில் ஒன்றை வையுங்கள். கட்டிலுக்கு அடியில் ஒன்றை வையுங்கள். ஜன்னல் ஓரங்களில் வையுங்கள். இதன் புகையை சுவாசிக்க முடியாமல் கொசுக்கள் ஒன்று கூட தாங்காது. எல்லாமே வீட்டை விட்டு வெளியே ஓடிவிடும். இந்த மாதிரியான கொசுக்கள், பெரும்பாலும் ஈர துணிகளிலும், திரை சீலைகளிலும் நம் கண்ணுக்கு தெரியாமல் வந்து அமர்ந்து கொள்ளும். துணிகள், திரை சீலைகளை அசைத்தாலே அவ்வளவு கொசுக்கள் பறக்கும். இப்படி செய்து பாருங்கள், ஒரு கொசு கூட இனி உங்கள் வீட்டில் நிச்சயம் இருக்காது, இது நல்ல பலன் தரும்.