உங்க வீட்ல இருக்குற கொசுவை விரட்ட, 1 கப் தண்ணீர் போதுமே! இந்த 1 கப் தண்ணீர் இருக்கிற இடத்தில், 1 கொசு கூட உயிரோடு தப்பிக்கவே முடியாது.

mosquitoes
- Advertisement -

கொசுத்தொல்லை அதிகமாக இருந்தால், செயற்கையான கொசு விரட்டியை பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை முறையில் நாம் பல வழிகளை பின்பற்றி இருப்போம். இருப்பினும் பலனளிக்காத பட்சத்தில், இந்த குறிப்பை பயன்படுத்திப்பாருங்கள். இதற்காக மொத்தமாக ஆகும் செலவு என்று பார்த்தால் வெறும் 5 ரூபாய் கூட இருக்காது. உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே மிக சுலபமான முறையில் 1 கப் தண்ணீரில் கொசு விரட்டியை எப்படி தயாரிப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

apple-ceder-vinigar

முதலில் இந்த கொசு விரட்டி செய்ய தேவையான பொருட்களை பார்த்து விடலாம். வாசனை மிகுந்த ஷாம்பூ – 1 ஸ்பூன், கற்பூரம்(சூடம்) – 3, வேப்ப இலை – 1 கொத்து, ஆப்பிள் சீடர் வினிகர் – 1 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன், அவ்வளவுதாங்க! இத பக்குவமா எப்படி செய்யணும்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க!

- Advertisement -

ஒரு அகலமான சிறிய பிளாஸ்டிக் பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் டீ குடிக்கும் டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். முதலில் 1 ஸ்பூன் ஷாம்புவை தண்ணீரில் ஊற்றி நுரை வரும் அளவிற்கு அடித்து கலக்கிக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக வேப்ப இலைகளை கத்தரிக்கோலால் துண்டு துண்டாக கட் பண்ணி போட்டுக்கொள்ளுங்கள். கற்பூரத்தை எடுத்து உங்கள் கைகளாலேயே நொறுக்கிப் போட்டு கலந்து விடவேண்டும். அடுத்தபடியாக ஆப்பிள் சீடர் வினிகர் 1 ஸ்பூன் ஊற்றி தண்ணீரோடு நன்றாக கலந்துவிட வேண்டும்.

neem

இறுதியாக தேங்காய் எண்ணெய் ஊற்றி நிறைய கலக்கக்கூடாது அப்படியே விட்டு விடுங்கள். இதேபோல 2 அல்லது 3 கப்பில் கூட நீங்கள் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு அறையிலும்,  ஒவ்வொரு பவுல் வைத்துவிட்டால் போதும். குறிப்பாக சமையலறை சிங்குக்கு அடியில் ஒரு பவுல் வையுங்கள். கட்டிலுக்கு அடியில் ஒரு பவுல். மூன்றிலிருந்து நான்கு நாட்களுக்கு இந்த தண்ணீரிலிருந்து வரும் வாசத்திற்கு கொசு உங்கள் வீட்டு பக்கம் வருவதற்கு வாய்ப்பே கிடையாது.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் குப்பை கூடை வைக்கும் இடத்திற்கு பக்கத்தில் இந்த பவுலை வைத்துவிட்டால் போதும். குப்பைக்கு வரக்கூடிய சிறிய அளவில் பறக்கும் கொசு, குட்டி குட்டி ஈ, பூச்சிகளின் தொல்லை இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. கட்டாயம் இந்த பவுலில் ஆப்பிள் சீடர் வினிகர் கலைக்கப்பட வேண்டும்.

mosquito1

செயற்கையான கொசு விரட்டிகளை  அதிகப்படியான காசு கொடுத்து வாங்கி, உடலுக்கு கெடுதலை வர வைத்துக் கொள்வதை விட, இப்படிப்பட்ட இயற்கை நிறைந்த பொருட்களை பயன்படுத்தி நம்முடைய வீடுகளில் வைப்பது, நம்முடைய ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டு இட்லி பாத்திரம் அடியில், உப்பு கறைப்பிடித்து, வெள்ளைத் திட்டுக்கள் படிந்து இருக்குமா? பழைய இட்லி பாத்திரத்தை கூட ஒரு நொடிப்பொழுதில் புதுசாக மாற்ற இந்த டிப்ஸ் யூஸ் பண்ணி பாருங்க!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -