உங்க வீட்டு இட்லி பாத்திரம் அடியில், உப்பு கறைப்பிடித்து, வெள்ளைத் திட்டுக்கள் படிந்து இருக்குமா? பழைய இட்லி பாத்திரத்தை கூட ஒரு நொடிப்பொழுதில் புதுசாக மாற்ற இந்த டிப்ஸ் யூஸ் பண்ணி பாருங்க!

aluminium

நம்முடைய வீடுகளில் இருக்கும் இட்லி பாத்திரம் மட்டுமல்ல, அலுமினிய கடாய், அலுமினிய குக்கர், உள்ளே அடிப்பகுதியில் சில சமயங்களில், கருப்பு திட்டுகள், வெள்ளைத் திட்டுக்கள் கொண்ட கறை படிந்திருக்கும். எந்த அலுமினிய பாத்திரமாக இருந்தாலும், அதை சுலபமான முறையில் சுத்தம் செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே நம்முடைய வீடுகளில் இட்லியை ஊற்றி வைக்கும் இட்லி பானையின் அடியில், தண்ணீரை குறைவாக வைத்து விடுவோம் அல்லது உப்பு தண்ணீரை ஊற்றி, இட்லி வேக வைப்பதன் மூலம், இட்லி பானையின் உள்ளே இருக்கும் இடம் பார்ப்பதற்கு அழகாக தெரியாது. உங்க வீட்டு இட்லி பானையில் முதலில் இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.

aluminium1

இட்லி பானையை அடுப்பில் வைத்து இரண்டு டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி, நன்றாக கொதிக்க விடுங்கள். கொதிக்கும் தண்ணீரில் 2 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் பேக்கிங் சோடா, 1 எலுமிச்சைப்பழ அளவு சாறை பிழிந்து விட்டு எலுமிச்சை பழ தோலை துண்டு துண்டுகளாக வெட்டி, இந்த தண்ணீரிலேயே போட்டுவிடுங்கள். இறுதியாக துணி துவைக்கும் பவுடர் அல்லது லிக்விட் 2 ஸ்பூன் அளவு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

10 லிருந்து 20 நிமிடங்கள் அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு இந்த தண்ணீரை, மிதமான தீயிலேயே கொதிக்க விடுங்கள். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த இட்லி பானையை இறக்கி கீழே வைத்துவிட்டு, தண்ணீர் சூடாக இருக்கும் போதே இட்லி பானையில் இருக்கும் தண்ணீரை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விடுங்கள்.

aluminium2

இட்லி பானையை இடுக்கியில் பிடித்துக்கொண்டு, இப்படி ஒரு ஸ்டில் நாரை கையில் எடுத்துக்கொண்டு, இட்லி பானை சூடாக இருக்கும்போதே கறையை நன்றாக தேய்த்து கொடுக்க வேண்டும். ஒரு சிறிய கிண்ணத்தில் வினிகரை சூடுபடுத்தி உங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் சூடாக இருக்கும் வினிகரை இட்லி பானைக்குள் ஊற்றி தேய்த்து கொடுத்தால் போதும்.

- Advertisement -

அடியில் கறை படிந்திருக்கும் வெள்ளைத் திட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக நீங்க ஆரம்பிக்கும். மொத்தமாக 10 லிருந்து 15 நிமிடங்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் தேய்க்க வேண்டும். உங்களுடைய வீட்டில் கத்தி அல்லது ஸ்பூன் போன்ற கரண்டியை வைத்து சுரண்டினால் கூட வெள்ளைத் திட்டுக்கள் சுலபமாக வெளியேறிவிடும். நிச்சயமாக உங்களது இட்லி பாத்திரம் அடிப்பக்கம் புதுசு போல மாறிவிடும் ட்ரை பண்ணி பாருங்க.

aluminium3

இதேபோல் உங்களுடைய வீட்டில் இருக்கும் அலுமினிய கடாய், கறி பிடித்து, அடிப் பிடித்து, பிசி பிசிப்போடு, ரொம்பவும் அழகாக இருந்தால், அதைக் கூட நீங்கள் புதிதாக மாற்ற முடியும். பெரிய அகலமான பாத்திரமாக எடுத்து அடுப்பில் வைத்து, கொஞ்சம் நிறைய தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

aluminium4

மேலே குறிப்பிட்டுள்ளது போல், தேவைக்கு ஏற்ப துணி துவைக்கும் பவுடர், உப்பு, பேக்கிங் சோடா, எலுமிச்சை பழச்சாறு போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, அடுப்பில் கொதிக்கின்ற தண்ணீரில், பாத்திரத்தை மூழ்க வைத்து, ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து விட்டு, அதன்பின் ஸ்டீல் நாரைக் கொண்டு அழுத்தம் கொடுத்து தேய்த்து எடுத்தால், அலுமினிய கடாயின் அடியில் இருக்கும் பிசுபிசுப்பும் எண்ணெய் திட்டுக்களும் கூட சுலபமாக வெளியேறிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

இதையும் படிக்கலாமே
வேண்டும் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் காரசாரமான, கமகம வாசமுள்ள ‘திருநெல்வேலி இட்லி பொடி’ எப்படி செய்யறது? இப்பவே தெரிஞ்சுக்கலாமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.