கெமிக்கல் ஷாம்பூ வேண்டாமா? ஒரு முடி கூட இனி உங்க தலையில் இருந்து உதிராமல் இருக்க ஒரு கைப்பிடி இந்த தானியத்தை ஊற வச்சி பேக் போட்டு பாருங்க இனி ஷாம்பூவே எனக்கு வேண்டாம்னு சொல்லுவீங்க!

hair-pack-pachai-payaru
- Advertisement -

இப்போது வரக்கூடிய எல்லா ஷாம்பூ வகைகளும் விதவிதமா விளம்பரங்கள் செய்யப்பட்டாலும் 90% கெமிக்கல் கொண்டு செய்யப்படும் இந்த ஷாம்பூ எப்பொழுதும் நம் தலைமுடி பிரச்சனையை சரி செய்வது கிடையாது. தலைமுடி உதிர்வுக்கு மிக முக்கிய காரணமே நாம் பயன்படுத்தும் இந்த கெமிக்கல் நிறைந்துள்ள ஷாம்பூ தான்! அந்த காலத்திலெல்லாம் ஷாம்பூ கிடையாது, வெறும் மூலிகைப் பொருட்களை கொண்டு அரைக்கப்பட்ட சீயக்காயை மட்டுமே பயன்படுத்தி அடர்த்தியான முடியையும், பளபளப்பான நீண்ட கேசத்தையும் நம் தமிழ் பெண்கள் கொண்டிருந்தார்கள். ஷாம்பூவுக்கு பதிலாக ரொம்பவே சுலபமாக இயற்கையான முறையில் செய்யக்கூடிய இந்த பேக் எந்த அளவிற்கு பயன் தரக்கூடியது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இயற்கையாக நாம் எந்த ஒரு விஷயத்தை கடைபிடித்தாலும் அது 100 சதவீதம் பயனளிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. கண்ட கண்ட ஷாம்பூவை மாற்றி மாற்றிப் போட்டு நம் முடியை பாதி இழந்த பிறகு ஏதாவது இயற்கையாக கிடைக்குமா? என்று தேட துவங்குகிறோம். எந்த நிலையில் இருந்தாலும் நீங்கள் இனி ஷாம்புவை முற்றிலுமாக தவிர்த்து விட்டு இந்த ஒரு பேக்கை மட்டும் வாரம் ஒருமுறை தலைக்கு நன்கு தேய்த்து குளித்துப் பாருங்கள், ஒரு முடி கூட அதற்குப் பிறகு நிச்சயம் உதிரவே உதிராது.

- Advertisement -

ஒரு கைப்பிடி அளவிற்கு பச்சைப்பயறு எடுத்துக் கொள்ளுங்கள். பச்சை பயறுடன், ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் சேர்த்துக் கொள்ளுங்கள். தலைமுடிக்கு ஊட்டச் சத்து கொடுக்கக்கூடிய பச்சை பயறு மற்றும் ஈரப்பதம், குளிர்ச்சியை தரக்கூடிய வெந்தயம் இந்த இரண்டையும் இந்த அளவுகளில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் குளிர்ச்சியால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்க ஐந்து முதல் ஆறு மிளகுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் குளிர்ச்சி தணிந்து உஷ்ணம் சமநிலைப்படும்.

பச்சைப்பயறு, வெந்தயம் மற்றும் மிளகு ஆகியவற்றை ஊற வைத்து தண்ணீரை பயன்படுத்த கூடாது. தண்ணீருக்கு பதிலாக அரிசி களைந்த தண்ணீர் அல்லது அரிசி வடித்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும். அரிசி வடித்த தண்ணீர் உப்பு சேர்க்காமல் இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். சாதத்தில் உப்பு சேர்க்காமல் வடித்த கஞ்சி தண்ணீரை ஊற்றி ஊற வைக்க வேண்டும். இரவு ஊற வைத்தால் மறுநாள் காலையில் இதைப் பயன்படுத்தலாம்.

- Advertisement -

எட்டிலிருந்து, பத்து மணி நேரம் நன்கு ஊறிய பிறகு இதை மிக்ஸியில் போட்டு ரொம்பவும் நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஒரு பேஸ்ட் போல உங்களுக்கு இருக்கும். இதை அப்படியே தலையில் வேர்கால் முதல் நுனி வரை எல்லா இடங்களிலும் தடவி பேக் போல போட்டு தலைமுடியை நன்கு முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பத்து நிமிடம் அப்படியே ஊற விட்டு விட்டு பிறகு சாதாரண தண்ணீரை தலைக்கு ஊற்றி நன்கு தேய்த்து நுரை வர குளித்து விடுங்கள்.

கொஞ்சம் கூட கெமிக்கல் சேர்க்கப்படாத இந்த இயற்கையான ஷாம்பூ உங்களுடைய முடி உதிர்வை ஒரே வாரத்தில் கட்டுப்படுத்தி இளநரை, அடர்த்தியின்மை, முடி உதிர்தல், இரட்டைப் பிளவு மற்றும் பொடுகு தொல்லை ஆகிய எல்லா பிரச்சினைகளையும் நீக்கி பளபளன்னு கண்டிஷனர் போட்டது போல உங்களுடைய தலைமுடியை அலைபாய செய்யும். இயற்கையான வழியில் சென்று தலை முடியை பாதுகாப்போம்.

- Advertisement -