கால்களில் ஏற்படும் வறட்சி, வெடிப்பு அனைத்தும் மறைந்து, உங்களின் முகத்தை போலவே கால்களும் அழகாக பொலிவுடன் இருக்க பாதங்களை பராமரிக்கும் எளிமையான முறை பற்றி தெரிந்து கொள்வோமா?

pedi3
- Advertisement -

பெண்கள் எப்பொழுதும் தங்கள் அழகை பராமரிப்பதில் மிகவும் கவனத்துடன் இருப்பார்கள். அதிலும் அவர்கள் பெருமளவில் கவனம் செலுத்துவது தங்கள் முகத்திற்கு தான். ஏனென்றால் ஒருவர் நம்மை பார்த்த உடனே முதலில் தெரிவது முகம் மட்டும்தான். இந்த முகத்தை பராமரிப்பதற்காக பலவித க்ரீம்களை செலவு செய்து வாங்கி வைப்பார்கள். க்ரீம்கள் மட்டுமல்லாமல் மேக்கப் பொருட்களையும் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் முகத்தை அடுத்து மற்றவர்கள் நம்மிடம் கவனிப்பது நமது பாதங்களாகும். முகம் அழகாக இருந்தது நமது கால்கள் அழகாக இல்லையென்றால் அதுவும் சங்கடமாகத்தான் இருக்கும். பாதங்களை பராமரிப்பது மிகவும் அவசியமாகும். ஏனென்றால் பாதங்களில் வெடிப்பு, வறட்சி இருந்தால் இவற்றின் மூலம் தேவையில்லாத பாக்டீரியாக்கள் நமது உடலுக்குள் நுழைந்து உடல் உபாதைகள் ஏற்படும். எனவே வீட்டில் இருக்கும் இந்த எளிய பொருட்களை வைத்து உங்கள் பாதங்களை எப்போதும் சுத்தமாக, பளபளப்பாக வைத்திருப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
சோடா உப்பு – 5 ஸ்பூன், உப்பு – 3 ஸ்பூன், ஷாம்பூ – 3 ஸ்பூன், எலுமிச்சை பழம் – ஒன்று, கஸ்தூரி மஞ்சள் – ஒரு ஸ்பூன், பன்னீர் – இரண்டு ஸ்பூன், அலோ வேரா ஜெல் – 2 ஸ்பூன்.

- Advertisement -

பயன்படுத்தும் முறை:
முதலில் ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் முக்கால் பங்கு நிறைந்திருக்குமாறு சுடுதண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த தண்ணீரில் 3 ஸ்பூன் சோடா உப்பு, 3 ஸ்பூன் கல்லுப்பு இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.

பிறகு இதனுடன் 3 ஸ்பூன் ஷாம்பு மற்றும் பாதி அளவு எலுமிச்சை பழத்தை பிழிந்து சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு கால்களையும் இந்த தண்ணீரில் மூழ்குமாறு வைத்து 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். கால்களை ஊற வைத்த பிறகு எலுமிச்சை பழத் தோலை எடுத்து கொண்டு கால்களை நன்றாக தேய்த்துவிட வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் சோடா உப்பு மற்றும் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு சேர்த்து நன்றாக கலந்து கொண்டு, இந்த கலவையை கால்களில் தேய்த்து விட்டு எலுமிச்சை பழ தோல் அல்லது ஒரு பிரஷ்ஷை வைத்து நன்றாக தேய்த்துவிட வேண்டும். ஐந்திலிருந்து பத்து நிமிடம் இவ்வாறு சித்தமாக தேய்த்து விட்டு கால்களை சுடுதண்ணீரில் அலசிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள், இரண்டு ஸ்பூன் அலோவேறா ஜெல், இரண்டு ஸ்பூன் பன்னீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு கால்களை சுத்தமாக துடைத்துவிட்டு, இந்த கலவையை கால்கள் முழுவதுமாக பூசிவிட வேண்டும். பிறகு பத்திலிருந்து பதினைந்து நிமிடம் நன்றாக ஆற விட்டு, அதன் பின்னர் கால்களை சுத்தமாக கழுவித் துடைத்துவிட வேண்டும். பிறகு இறுதியாக சிறிதளவு ஆலவேரா ஜெல்லை உங்கள் பாதம் முழுவதிலும் பூசிவிட வேண்டும். இவ்வாறு வாரம் ஒருமுறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்து பாருங்கள். உங்கள் கால்கள் அழகாக மாறிவிடும்.

- Advertisement -