இயற்கையான ஷாம்புவை பயன்படுத்தினால் தலை முடி ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும்.

shampoo
- Advertisement -

ஒருவருடைய தலைமுடி எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்களுடைய உடல் நலனும் ஆரோக்கியமாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுகிறார்களோ அதே அளவுக்கு உடலின் ஆரோக்கியம் அவர்களின் தலைமுடியில் எளிதாக தெரிந்து விடும். இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் எப்படி இயற்கையான முறையில் ஷாம்புவை தயாரித்தால் தலைமுடி பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

தலைமுடி பராமரிப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமாக இந்த காலத்தில் இல்லை. ஆனால் நம்முடைய முன்னோர்கள் காலத்தில் அதை அவர்கள் ஒரு பெரிய விஷயமாகவே கருதவில்லை என்று தான் கூற வேண்டும். அதே சமயம் அவர்களுடைய தலைமுடி பிரச்சினைகளில் எந்தவித சீர்கேடும் இல்லாமல் நன்றாகவே இருந்தது என்றும் கூறலாம். இதற்கு ஒரு புறம் அவர்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டார்கள் என்றாலும் கூட தலை முடியை பராமரிப்பதற்கு அவர்கள் சாதாரணமாக ஆரோக்கியமான பொருட்களை தான் பயன்படுத்தினார்கள்.

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் விளம்பரங்களில் பார்க்கக்கூடிய ஷாம்புகள் அது எதுவாக இருந்தாலும் தலைமுடி உதிர்வை தடுத்துவிடும் என்று சொன்னதும் அதை வாங்கி உபயோகப்படுத்துகிறோம். அதே போல் பொடுகை தடுத்துவிடும் என்று சொன்னதும் வேற ஒன்றை வாங்குகிறோம். இப்படி நம்முடைய பிரச்சனைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு ஷாம்புவாக மாற்றி மாற்றி உபயோகப்படுத்துகிறோம். அந்த ஷாம்புக்களில் பெரும்பாலும் கெமிக்கல்களை இருக்கின்றன என்பதை அறிந்தாலும் ஏதாவது ஒரு ஷாம்புவால் நம்முடைய தலைமுடி பிரச்சனைகள் தீர்ந்து விடாதா என்ற ஏக்கமே இதற்கு காரணமாக விளங்குகிறது.

இந்த ஏக்கத்தை தீர்ப்பதற்கு நாம் வீட்டிலேயே இயற்கையான முறையில் ஷாம்பு தயாரிக்க முடியும். இரண்டு ஸ்பூன் பச்சைப்பயிரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை போட்டுக் கொள்ளுங்கள். பச்சை பயிறும் வெந்தயமும் தலை முடியின் ஆரோக்கியத்தை பராமரிக்கக் கூடிய மிக முக்கியமான பொறுப்பை வகிக்கிறது. அது மட்டும் இல்லாமல் அது இயற்கையான முறையில் நம்முடைய முடியை கண்டிஷன் செய்வதற்கும் உதவுகிறது என்று கூறலாம். இதனுடன் ஐந்து மிளகை சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மிளகு தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் சளி பிடிக்கும் பிரச்சனை இருப்பவர்கள் மிளகை சேர்ப்பதன் மூலம் அந்த பிரச்சனையும் வராது. இப்பொழுது இதை நன்றாக சுத்தம் செய்து கொண்டு இதில் சாதம் வடித்த கஞ்சியை ஊற்றி ஊற வைக்க வேண்டும். இந்த கஞ்சியில் உப்பு போட்டு இருக்கக் கூடாது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. காலையில் இதை நாம் ஊற வைத்து விட்டோம் என்றால் மறுநாள் காலையில் உபயோகப்படுத்த வேண்டும். அதாவது 24 மணி நேரம் அது நன்றாக ஊற வேண்டும்.

அப்பொழுதுதான் அந்த கஞ்சியில் இயற்கையாகவே நன்மை தரக்கூடிய பாக்டீரியாக்கள் உருவாக்கி இருக்கும். அது மட்டுமல்லாமல் வெந்தயத்திலும் பச்சை பயிரிலும் முளைகட்டக்கூடிய தன்மைகள் அதிகமாக ஏற்பட்டிருக்கும் என்பதால் அதனால் நமக்கு நல்ல பயனை தரும். இப்பொழுது இதை மறுநாள் காலையில் நன்றாக மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொண்டு தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டு பிறகு சாதாரணமாக தலையை அலசுவது போல் ஷாம்பு எதுவுமே உபயோகப்படுத்தாமல் நன்றாக தேய்த்து குளித்து விட்டாலே போதும்.

- Advertisement -

நம் தலையில் இருக்கக்கூடிய அழுக்குகளும் நீங்கிவிடும். எண்ணெய் பசையும் நீங்கிவிடும். அதே சமயம் வறட்சி ஏற்படாமல் உதிர்வு பிரச்சனையும் நேராமல் இருக்கும். பொடுகு பிரச்சனை ஏற்படாது.

இதையும் படிக்கலாமே: புழுவெட்டை நீக்க இந்த ஒரு காய் இருந்தால் போதும்.

கெமிக்கல்கள் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்தாமல் நம்முடைய முன்னோர்கள் உபயோகப்படுத்திய இயற்கையான ஷாம்புவை நாமும் பயன்படுத்தி நம் தலை முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

- Advertisement -