ஒரு முடி கூட சிக்கில்லாமல் அங்கும் இங்கும் உங்கள் முடி குதித்து விளையாட வேண்டுமா? ஒரே வாஷில் பார்லர் சென்று வந்தது போல ஷைனிங்காக உங்கள் முடியை மாற்ற ஆயுர்வேத ஹேர் பேக்!

- Advertisement -

திடீரென வெளியே கிளம்ப வேண்டும் அல்லது பார்ட்டி, விசேஷம் என்று தயாராக வேண்டும் என்றால் அந்த நேரத்தில் உங்களுடைய தலைமுடியை கவனித்துக் கொண்டிருக்க முடியாது. ரொம்ப சுலபமாக உங்களுடைய தலைமுடியை பார்லருக்கு சென்று வந்தது போல ஷைனிங்காக மாற்றக்கூடிய அற்புதமான வீட்டு எளிய குறிப்பு இதோ உங்களுக்காக! ஆயுர்வேத ஹேர் பேக் இப்படி போட்டு பார்த்தால் முடி குதித்து விளையாடும். இதை எப்படி தயாரிப்பது? என்பதை இந்த பதிவில் இனி பார்க்க இருக்கிறோம்.

நம்முடைய தலைமுடிக்கு மாய்ஸ்ரைசர் செய்தது போல மிருதுவான, மென்மையான அலைபாயும் கூந்தல் பெற சில இயற்கையான பொருட்களில் இருக்கும் நல்ல சத்துக்கள் தேவை. இதை செயற்கையான வழியில் பார்லருக்கு சென்று நீங்கள் செய்து கொள்வதால், அந்த நேரத்திற்கு நன்றாக இருந்தாலும், பின்னர் பக்க விளைவுகளை சந்திக்க நேரலாம் ஆனால் இப்படி நம் வீட்டிலேயே தலைமுடியை பராமரித்து வருவதன் மூலம் நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியமும் கெட்டுப் போகாமல், எல்லா வகையான ஹேர் ஸ்டைலையும் செய்து கொள்ளும் படியான அலைபாயும் கூந்தலையும் எளிதாக பெறலாம்.

- Advertisement -

முதலில் ஒரு கைப்பிடி அளவிற்கு தேங்காயை துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு ஊற வைத்த புழுங்கல் அரிசியை தண்ணீர் வடிகட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். வடிகட்டிய இந்த தண்ணீரையும் தனியாக பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதே அளவிற்கு கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள்.

கற்றாழை மடல் ஒன்றை எடுத்து உள்ளிருக்கும் ஜெல்லை நன்கு சுத்தம் செய்து கூழ் போல கரைத்துக் கொள்ள வேண்டும். இதையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு நைசாக தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் நீங்கள் அரிசி ஊற வைத்த தண்ணீரை சிறிது சேர்த்து பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்து எடுத்த இந்த பேஸ்டை தலை முழுவதும் வேர்க்கால்கள் முதல் நுனி வரை எல்லா இடங்களிலும் படும்படி தேய்த்து ஊற விட வேண்டும்.

- Advertisement -

ஒரு பத்து நிமிடம் ஊற வைத்துவிட்டு பின்னர் தலைக்கு குளித்து வந்து விடுங்கள். தலையில் தண்ணீர் ஊற்றுவதற்கு முன்பு நீங்கள் அரிசி ஊற வைத்த தண்ணீரை சிறிதளவு தலைக்கு ஊற்றி மசாஜ் செய்யுங்கள், பின் தலைக்கு தண்ணீர் ஊற்றி அலசுங்கள். பிறகு பாருங்கள் நம்முடைய தலைமுடியா இது? என்று உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். அந்த அளவிற்கு மாய்ஸ்ரைசிங் மற்றும் கண்டிஷனர் செய்தது போல முடி துள்ளி துள்ளி விளையாடும். ஒரு முடி கூட சிக்குகள் இல்லாமல் நன்கு அங்கும் இங்குமாய் அலைபாயும். ஈரமாக இருக்கும் பொழுது தலையை முடியை எப்பொழுதும் சீப்பு கொண்டு வார கூடாது எனவே நன்கு உலர விட்டு விடுங்கள்.

வெயிலில் 10 நிமிடம் நின்று விட்டு வந்தால் போதும் உங்களுடைய முடி நன்கு காய்ந்து விடும் அதன் பிறகு லேசாக சீப்பை கொண்டு வாரி விடுங்கள். அவ்வளவுதான், நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு உங்களுடைய தலைமுடி பார்ட்டிக்கு ரெடியாகி இருக்கும். எந்த வகையான ஹேர் ஸ்டைலையும் நீங்கள் இப்பொழுது செய்து கொண்டு புறப்படலாம். தேங்காய், அரிசி மற்றும் கற்றாழையில் இயற்கையாகவே தலைமுடிக்கு மாய்ஸ்ரைசிங் செய்யும் தன்மை உண்டு எனவே மூன்றையும் சேர்த்து ஹேர்பேக் போடும் பொழுது இப்படி ஒரு ஆச்சரியத்தை நாம் காணலாம்.

- Advertisement -