நவகிரக தோஷம் விலக விநாயகருக்கு இப்படி விளக்கு ஏற்ற தீராத வினை எல்லாம் தீரும் தெரியுமா?

vinayagar-navagraham
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கக் கூடிய ஒவ்வொரு விஷயத்திற்கும் பின்னாலும் நவக்கிரகங்களின் ஆதிக்கம் ஒளிந்து கொண்டு தான் இருக்கும் என்பது ஜோதிட ரகசியம். அவரவர் கிரக அமைப்புகளின் படி கர்மவினை பயன்களையும், பூர்வ புண்ணியங்களையும் அனுபவிக்க வேண்டியிருக்கும். இப்படி அனுபவித்து வரும் துயரங்கள் எல்லாம் குறைய விக்னங்களை தீர்க்கும் விக்னேஸ்வரனை வழிபடுவது சிறப்பு. அந்த வகையில் நவக்ரஹ தோஷங்களும் விலகி, தீராத வினை தீர விநாயகருக்கு ஏற்ற வேண்டிய விளக்குகள் எத்தனை? அதை எப்படி ஏற்ற வேண்டும்? என்கிற ரகசியத்தை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

navagraham

நவகிரக தோஷம் விலக விநாயகர் வழிபாடு மேற்கொள்ள நிச்சயம் துன்பமெல்லாம் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. முழுமுதற்கடவுளான விநாயகரை தொழுதால் நம் ஜாதகத்தில் இருக்கும் குறைகள் எல்லாம் தவிடுபொடியாகும். எத்தகைய தீவிரமான தோஷங்கள் கூட தீர்ந்து அதனால் வரும் பாதிப்புகளும் குறைந்துவிடும். வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று இந்த பூஜை முறையை துவங்க நல்ல நாளாக அமையும்.

- Advertisement -

இப்படியாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் விநாயகர் வழிபாடு செய்ய ஒன்பது வாரங்களில் உங்கள் துன்பங்கள் அத்தனையும் தொலையும் என்பது நம்பிக்கை. விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரை சுற்றிலும் ஒன்பது அகல் விளக்குகளை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எல்லா விளக்குகளிலும் நெய் ஊற்ற வேண்டும். சுத்தமான பசு நெய் அல்லது நல்லெண்ணெய் தவிர வேறு எந்த எண்ணையையும் உபயோகபடுத்த கூடாது.

agal-vilakku

பின்னர் அதில் ஒவ்வொன்றிலும் பஞ்சு திரியிட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு வகையான தானியம் போட வேண்டும். நவ தானியங்களும், நவகிரகங்களுக்கு உரியது ஆகும். அந்த அடிப்படையில் ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு வகையான கிரகத்திற்கு தோஷங்கள் நீங்க கோரி ஒவ்வொரு தானியத்தை கொஞ்சமாக கையில் எடுத்து அந்த அகல் விளக்கின் உள்ளே போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் கணபதியின் மூல மந்திரத்தை உச்சரித்து ஒவ்வொரு விளக்கையும் வரிசையாக ஏற்றி வாருங்கள்.

- Advertisement -

நீங்கள் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து இப்படி விளக்கு ஏற்றி கூட வழிபடலாம். அது உங்கள் விருப்பம் தான். பின்னர் அருகம்புல் கொண்டு விநாயகரை அர்ச்சனை செய்து மனதார உங்கள் துன்பங்கள் துயரங்கள் எல்லாம் தீர பிரார்த்தித்துக் கொண்டால் நிச்சயம் நவகிரக தோஷங்கள் விலகும். இதே போல நீங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் விநாயகருக்கு செய்து வர வேண்டும். இந்த பரிகாரத்தை முதன் முதலாக வரும் விநாயகர் சதுர்த்தியன்று துவங்குவது சிறப்பு. விநாயகர் சதுர்த்தி அன்று செய்ய முடியாவிட்டாலும் வெள்ளிக்கிழமைகளில் ஆரம்பிப்பது சிறப்பு என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

vinayagar-chathurthi1

ஒன்பது வெள்ளிக் கிழமைகளில் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயம் உங்களுடைய எல்லா வகையான பிரச்சனைகளும் தீர்ந்து மனதில் நிம்மதி பிறக்கும். எந்த ஒரு பரிகாரத்தையும் நம்பிக்கையுடன் செய்யும் பொழுது தான் அதன் முழுப் பலன்களையும் நமக்கு கொடுக்கிறது. அவ்வகையில் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து உங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களையும், துயரங்களையும் நீக்கிக் கொள்ளலாம். விளக்கு எரிந்து முடிந்த பின்பு விளக்கில் இருக்கும் தானியங்களையும், திரியையும் ஒரு பேப்பரில் மடித்து யாருடைய கால்களிலும் படாதபடி எதாவது ஒரு மரத்திற்கு அடியில் போட்டு விடுங்கள். குப்பையில் கண்டிப்பாக போடக்கூடாது.

- Advertisement -