ஒன்பது நவகிரகங்களும் ஒரே மந்திரம் – ஜபித்தால் நிச்சயம் பலன் உண்டு

navagrahas-nine-planets

நமது வாழ்வில் நிகழும் பல செயல்களுக்கு நவகிரகங்களின் முக்கிய பங்கு உண்டு. நவகிரகங்கள் நமது ஜாதகத்தில் சரியான இடத்தில் இருந்தால் நாம் நமது வாழ்வில் சரியான இடத்தில் இருப்போம். சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தோஷங்கள் ஜாதகத்தில் இருக்கும். அதனால் தேவையற்ற பல பிரச்சனைகளும் வரும். அந்த தோஷங்களை போக்கி வாழ்வை சிறப்பாக மாற்ற உதவும் நவகிரக மந்திரம் இதோ.

navagragam

நவகிரக மந்திரம்:

‘ஓம் ஹரீம் ஆதித்யாய ச சோமாய
மங்களாய புதாயச குரு
சுக்கிர சனிப்யச்ச
ராகவே கேதவே நமக.’

இந்த மந்திரத்தை தினமும் 9 முறை ஜபிப்பது நல்லது. இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நாம் ஒரு சேர ஒன்பது நவகிரகங்களின் அருளை பெற முடியும். இதை தொடந்து ஜபித்து வர இதன் பலனை நம்மால் உணர முடியும். காரியங்கள் கைகூடும், வறுமை நீங்கும், உடல் சோர்வு மற்றும் மன சோர்வு நீங்கும், செல்வம் நிலைத்திருக்கும், மனதில் உள்ள தீய எண்ணங்கள் அகலும். இப்படி இன்னும் பல பலன்களை இதன் மூலம் நாம் பெறலாம். அதோடு நவகிரங்களாம் ஏற்பட்ட தோஷங்கள் விலகும்.

இதையும் படிக்கலாமே:
பூர்வ ஜென்ம பாவம் போக்கும் அகத்தியர் மந்திரம்

நவகிரகங்களை பற்றிய சிறு குறிப்பு :
பொதுவாக நவகிரகங்கள் என்பது பலகோடி ஆண்டுகளுக்கு முன்பாக சூரியனில் வெடிப்பு ஏற்பட்டு அதிலிருந்து சிதறிய துண்டுகளே பல்லாயிரக் கோடியாண்டுகளுக்கு முன்பு நவகிரகங்களாக உருவாகியது என நமது சித்தர்களும் நவீன விஞ்ஞானிகளும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விஷயமாகும். இந்த நவகிரகத்திலிருந்தும் வெளிப்படும் கதிர்வீச்சுகள் அண்ட சராசரங்கள் எங்கும் பாய்கிறது. அந்த வகையில் உயிர்கள் வாழும் கிரகமான பூமியிலும் தனது கதிர்வீச்சை செலுத்துகிறது. அது இந்த பூமியில் இருக்கும் உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் மீதும் பாய்கிறது.

navagragha-mandhiram

இதனால் அவற்றில் ஒரு தாக்கத்தை அந்த நவகிரகங்கள் ஏற்படுத்துகிறது என்ற உண்மையை நவீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் தங்களின் ஞானசக்தியால் கண்டுபிடித்தனர். ஆக அந்த நவகிரகங்களின் கதிர்வீச்சுகளால் இப்புவியில் வாழும் மக்களுக்கு நன்மைகள் ஏற்படவும் தீயவைகள் விலகவும் சில நன்மையான அதிர்வுகளை உண்டாகும் மந்திர எழுத்துக்களைக்கொண்டு மந்திரங்கள் உருவாக்கி அதை ஜெபிக்கும் போது ஏற்படும் நேர்மறையான ஒலிஅதிர்வுகள் ஏற்படுமாறு செய்தனர். எனவே சித்தர்கள் மக்களின் நன்மைக்காக உருவாக்கிய நவகிரக மந்திரங்களை ஜெபிபிப்பதால் நாம் பல நன்மைகளை அடைவது உறுதி.

English Overview:
Here we have given Navagraha mantra in Tamil. If one chant this mantra just nine times daily then that day will be really peaceful to him. We all know that astrology is based on planet. This mantra will help us to grace from planet.