நவ கிரகங்களால் எந்த ஒரு தோஷமும் ஏற்படாமல் இருக்க தினமும் இப்படி குளித்தாலே போதும்.

navagraha

நம்முடைய வாழ்க்கையில் நல்லது கெட்டதை நிர்ணயிப்பது இந்த கிரகங்கள் தான். நவகிரகங்களில் எந்த கிரகத்தின் மூலம் உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், எந்த கிரகத்தில் தோஷம் உள்ளதோ, அந்த குறிப்பிட்ட கிரகம் கூட உங்களுக்கு துன்பத்தை கொடுக்காது. அதாவது நம்முடைய ஜாதக கட்டத்தில் கிரகங்கள் நிலையாக ஒரே இடத்தில் அமர்வது இல்லை. குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி என்று வரும்போது கிரகங்கள் மாறி மாறி அமர்ந்து நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான நல்லது கெட்டதை செய்துவரும். இப்படி கிரக பெயர்ச்சியின் போது உங்களுக்கு எந்த கிரகத்தின் மூலம் தோஷம் ஏற்படுகின்றதோ, எந்த கிரகத்தினால் பிரச்சனைகள் வருகிறதோ, அந்த கிரகத்திற்கு உரிய பொருளை வாங்கி வைத்துக்கொண்டு, குளிக்கின்ற தண்ணீரில் கலந்து, ஸ்நானம் செய்தாலே போதும். தோஷங்கள் நீங்கும் நவகிரகங்களுக்கு உரிய அந்த பொருட்கள் என்னென்ன தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

suriyan

சூரியன்: சிவப்பு நிற மலர்கள் அல்லது சிவப்பு நிற குங்குமத்தை குளிக்கின்ற தண்ணீரில் ஒரு சொட்டு கலந்து விட்டு அதன் பின்பு குளித்து வந்தோமே ஆனால் சூரிய பகவானால் ஏற்படும் தோஷங்கள் நம்மை விட்டு விலகும்.

சந்திரன்: குளிப்பதற்கு முன்பாக ஒரு ஸ்பூன் அளவு தயிரை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து போட்டுக்கொண்டு, அந்த தயிரை தொட்டு உங்களுடைய உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை லேசாக தேய்த்து அதன் பின்பு குளித்தால் சந்திர பகவானால் ஏற்படும் தோஷம் விலகும்.

vilvakai

செவ்வாய்: திருமண வாழ்க்கையை மிக மிக பாதிப்பது செவ்வாய் கிரகம். செவ்வாய் தோஷம் என்றாலே சிலபேர் பயப்படுவது உண்டு. ஆனால் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வில்வக் கொட்டை பொடியை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். குளிக்கும் தண்ணீரில் இரண்டு சிட்டிகை வில்வ கொட்டை பொடியை கலந்து விட்டு அந்தத் தண்ணீரில் ஸ்னானம் செய்தால், செவ்வாய் தோஷத்தின் மூலம் குடும்ப வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாது.

- Advertisement -

புதன்: புதன் கிரகத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்குவதற்கு ஒரு சொட்டு தேனை குளிக்கின்ற தண்ணீரில் நன்றாக கலந்து விட்டு, அதன் பின்பு குளித்தால், புதன் பகவானால் உண்டாகக்கூடிய தோஷங்கள் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

honey 3

குரு பகவான்: கருப்பு ஏலக்காய் என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த கருப்பு ஏலக்காய்களை அப்படியே தண்ணீரில் கலந்து குளிக்க முடியாது. கொஞ்சமாக தண்ணீரை அடுப்பில் வைத்து, இந்த கருப்பு ஏலக்காய் போட்டு நன்றாக கொதிக்கவிட்டு, இந்த தண்ணீரை குளிக்கும் தண்ணீருடன் கலந்து குளிக்கும் பட்சத்தில் குருபகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும்.

karuppu-elakkai

சுக்கிர பகவான்: வீட்டில் இருக்கும் சாதாரண பச்சை ஏளகாய்களை மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஏலக்காய் பொடியை குளிக்கின்ற தண்ணீரில் கொஞ்சமாக கலந்து அதன் பின்பு குளிக்கும் பட்சத்தில் சுக்கிர தோஷம் விலகும்.

sani-baghavan

சனி பகவான்: கொஞ்சமாக தண்ணீரை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எள்ளு போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். அதன் பின்பு இந்த தண்ணீரை வடிகட்டி குளிர்ந்த தண்ணீரோடு கலந்து குளிக்கும் பட்சத்தில் சனி பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் விலகும்.

mahishakshi

ராகு: மகிஷாக்க்ஷி என்ற பொருள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். கொஞ்சம் பழைய நாட்டு மருந்து கடைகளில் விசாரித்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த பொருளை கொதிக்கிற தண்ணீரில் போட்டு ஊற வைத்து, அதன் பின்பு அந்த தண்ணீரை வடிகட்டி குளிக்கின்ற தண்ணீரில் கலந்து குளித்து கொள்ள வேண்டும். இப்படி செய்தால் ராகு தோஷம் நீங்கும்.

bathing

கேது: கேது பகவானால் உண்டாகக்கூடிய தோஷங்கள் நீங்க அருகம்புல்லை தண்ணீரில் போட்டு குளித்து வந்தாலே போதும். தோஷங்கள் நீங்கும். இந்த தோஷங்கள் விலக பச்சைத் தண்ணீரில் தான் குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது வெதுவெதுப்பான வெந்நீரில் குளிக்கலாம். மேல் சொன்ன விஷயங்களை தினம்தோறும் உங்களால் செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. அந்தந்த கிரகங்களுக்குரிய கிழமைகளில் மட்டுமாவது இந்த ஸ்நானம் மேற்கொண்டு வந்தால் நிச்சயமாக வாழ்க்கையில் இருக்கும் கிரஹ தோஷத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். முயற்சி செய்து பாருங்கள்.