வியாபாரம் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இந்த 2 மந்திரத்தை உச்சரித்தால் பணவரவு அமோகமாக இருக்கும் தெரிந்து கொள்ளுங்கள்!

shop-lakshmi

தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் இடங்களில் மந்தமான சூழ்நிலை இருக்கும் பொழுது இந்த மந்திரத்தை உச்சரித்தால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து பண வரவு அமோகமாக இருக்கும். மகாலட்சுமியின் இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை உங்கள் கடை மற்றும் தொழில் ஸ்தாபனங்களில் உச்சரித்தால் வியாபாரம் மற்றும் தொழில் பன்மடங்கு விருத்தியாகும். அது போல் நீங்கள் வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால் பணவரவு அதிகரித்துக் கொண்டே வருமாம். அந்த 2 சக்தி வாய்ந்த மந்திரங்கள் என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

kamatchi-vilakku

தொழில் மற்றும் வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு கடன்கள் வாங்கும் சூழ்நிலையில் ஒரு சிலர் இருப்பார்கள். அவர்கள் அவர்களுடைய தொழில் செய்யும் இடத்தில் வெள்ளிக் கிழமை மற்றும் பவுர்ணமி தினத்தில் காலையில் கடையை திறந்ததும் மகாலக்ஷ்மி தேவிக்கு விளக்கு ஏற்றும் பொழுது, பாலில் பச்சை கற்பூரமும், ஏலக்காயும் கலந்து நிவேதனம் வைக்க வேண்டும். வெற்றிலை, பாக்கு தாம்பூலம் வைத்து, பாயாசம், கற்கண்டு, பழங்கள் முதலியவற்றை நிவேதனமாக வைத்து மகாலட்சுமி தேவியை வழிபட உங்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.

விளக்கேற்றும் பொழுது கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்கவும். நீங்கள் சாதாரணமாக வாடிக்கையாளர்கள் யாரும் வராத சமயத்தில் இந்த மந்திரத்தை தொடர்ந்து மனதிற்குள் உச்சரித்து வந்து கொண்டே இருந்தால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து தொழில் வளம், வியாபாரம் விருத்தி உண்டாகும்.

dhanalakshmi

இதோ உங்களுக்கான மகாலக்ஷ்மி மந்திரம்:
ஸ்ரீசுக்ல மகா சுக்லே நவாங்கே ஸ்ரீமஹாலக்ஷ்மி நமோ நமஹ!!

- Advertisement -

அது போல் கடையில் மகாலட்சுமி கடாட்சம் உண்டாக ஒரு பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து விளக்கேற்றும் பொழுது கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரித்தால் அந்த தண்ணீர் சக்தி வாய்ந்ததாக மாறிவிடும். இந்த சக்தி வாய்ந்த தண்ணீரை கடை முழுவதும் தெளித்து வர வேண்டும். இதை காலையில் 6.15 முதல் 6.45 மணிக்குள் செய்து விட வேண்டும். இந்த புனிதமான தீர்த்தத்தை கடை மற்றும் தொழிற்சாலை போன்ற இடங்களில் தெளித்து விட்டால் தொழில் மற்றும் வியாபார ரீதியான கஷ்ட, நஷ்டங்களை எதிர் கொள்பவர்களுக்கு நல்லதொரு மாற்றம் நிகழும்.

sembu-sombu

மந்திரம்:
ஓம் நமோ பகவதி பத்மா பத்மாவதி!
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் பூர்வாய தக்ஷிணாய!
பஸ்சிமாய உத்தராய ஆனுபூரக சர்வே!
ஜன வஸ்யம் குரு ஸ்வாஹா!!

money

உங்கள் தொழில் சம்பந்தப்பட்ட எந்த ஒரு புத்தகத்தை அல்லது ஆவணங்களை பயன்படுத்தும் பொழுது எச்சில் தொட்டு புரட்ட கூடாது. அது போல் பணத்தையும் எச்சில் தொட்டு எண்ணக் கூடாது. தெய்வீக புத்தகங்களையும், ஸ்லோகம் படிக்கும் நூல்களையும் எந்த காரணம் கொண்டும் தெரியாமல் கூட எச்சில் தொட்டு புரட்டிக் கொண்டே படிப்பது கூடாது. இது போன்ற செயல்கள் செய்தால் தரித்திரம் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே
உங்களுக்கு கிடைத்திருக்கும் செல்வமும், வெற்றியும் அழியாமல் நிலைத்து நிற்க, வழிபடவேண்டிய தெய்வமும், சொல்ல வேண்டிய மந்திரமும்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.