இன்று சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் நவமி திதி! தீராத மன கஷ்டங்கள் தீர, மன குழப்பத்தில் இருந்து வெளிவர, இன்று மாலை ஹனுமனை இப்படி வழிபாடு செய்தாலே போதும்.

hanuman
- Advertisement -

பொதுவாகவே அனுமனை வழிபாடு செய்து வருபவர்களுக்கு மனம் பலம் பெறும். அதேசமயம் தேவையற்ற பயம், அனுமன் பக்தர்களுடைய மனதை நெருங்காது. அனுமனை வழிபாடு செய்பவர்கள் தைரியசாலியாக தான் இருப்பார்கள். ஹனுமனை தொடர்ந்து வழிபாடு செய்து வருபவர்களுக்கு கிரகங்களின் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்தான். இப்படி அனுமன் பற்றிய அருமை பெருமைகளை நான் சொல்லிக்கொண்டே செல்லலாம். அந்த அனுமனுக்கு உரிய தினம் என்றால் அது சனிக்கிழமை. அனுமன் தன் உயிராக நினைத்து வணங்கக்கூடிய கடவுள் ராமபிரான். அந்த ராமபிரான் அவதரித்தது நவமிதிதி. இன்று இந்த இரண்டு நாளும் சேர்ந்து வந்திருக்கின்றது. இந்த அற்புதமான நாளை நாம் தவற விடலாமா.

hanuman-sivan

இன்றைய தினம் அனுமனையும் ராமபிரானும் நினைத்து நம்முடைய வீட்டில் சுலபமான முறையில் எப்படி வழிபாடு செய்தால், நம்முடைய மன கவலைகள் நீங்கி பிரச்சனைகள் நீங்கி நமக்கு உண்டான நல்லது நம்மை வந்து அடையும் என்பதை பற்றிதான் இன்று இந்த பதிவின் மூலம், நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இன்றைய தினம் மாலை நேரத்தில் உங்களுடைய வீட்டில் 6 மணியிலிருந்து 8 மணிக்குள் இந்த வழிபாட்டினை செய்ய வேண்டும். உங்கள் வீட்டு பூஜை அறையில் ஹனுமனின் திருவுருவப்படம் அல்லது ராமரின் திருவுருவப்படம் எது இருந்தாலும் அந்த படத்தை சுத்தம் செய்து மஞ்சள் குங்கும பொட்டு இட்டு, துளசி இலைகளால் பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

hanuman

அப்படி இதில் இரண்டு படமுமே உங்களுடைய வீட்டில் இல்லை என்றாலும் பரவாயில்லை. பெருமாளை ராமபிரான் ஆக நினைத்துக் கொள்ளலாம். உங்களுடைய வீட்டில் வழக்கம்போல தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். இந்த பூஜைக்கு 11 வெற்றிலை தேவை, 11 வெற்றிலைகளை மாலையாக கட்ட வேண்டும். பூஜை அறையில் அமர்ந்து உங்களுடைய வேண்டுதல்களை மனதார ஹனுமன் இடமும் ராமபிரானிடம் முன்வைத்து பதினோரு வெற்றிலைகளை மாலையாகத் தொடுத்து அனுமனின் திருவுருவப் படத்திற்கு சாத்த வேண்டும். வெற்றியைத் தரும் அனுமனுக்கு உரியது இந்த வெற்றிலை.

- Advertisement -

அனுமனின் திருவுருவப்படம் இல்லாதவர்கள் நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபத்தின் அருகிலேயே இந்த மாலையை அனுமனுக்கு சாதியத் ஆக நினைத்து அப்படியே வைத்து விடுங்கள். அதன் பின் பூஜை அறையில் அமர்ந்து கண்களை மூடி ஹனுமனுக்கு உரிய இந்த காயத்ரி மந்திரத்தை மனதார 108 முறை உச்சரிக்க வேண்டும்.

vetrilai

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்:
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தன்னோ ஹனுமன் ப்ரசோதயாத்

sri-ramar

மந்திரத்தை உச்சரித்த பின்பு உங்களுடைய கோரிக்கைகளை ஆஞ்சநேயரிடம் வையுங்கள். இறுதியாக பூஜை அறையில் தீப தூப ஆராதனை காண்பித்து உங்களுடைய பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். வெற்றிலை மாலையை முடிந்தால் அனுமன் கோவிலுக்கு சென்று, அனுமன் சிலைக்கு அணிவிக்கலாம். முடியவில்லை என்றால் அந்த வெற்றிலைகளை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் முதியவர்களுக்கு தானமாக கொடுத்துவிடலாம். வெற்றிலை பாக்கு போடுபவர்களாக இருக்கும்பட்சத்தில். எதுவுமே முடியாது என்றால் பசு மாட்டிற்கு அந்த வெற்றிலைகளை கொடுக்கலாம்.

ramar

வெற்றிலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அதை நினைத்து கவலைப்பட வேண்டாம். ஒரு சிறிய வெள்ளைக் காகிதத்தை எடுத்து 11 துண்டுகளாக கிழித்துக் கொள்ளுங்கள். அதில் ‘ஸ்ரீராம ஜெயம்’ என்ற மந்திரத்தை எழுதி நூலில் மாலையாக கட்டி வெற்றிலைமாலை போலவே அனுமனுக்கு அணிவிக்கலாம். இதில் உங்களால் எந்த வழிபாட்டு முறையை பின்பற்ற முடியுமோ அதை செய்து மனமுருகி அனுமனிடம் வேண்டுதலை வைத்தால் இன்றைய தினம் நீங்கள் வைக்கக்கூடிய வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறிவிடும். அந்த அளவுக்கு அற்புதமான சக்தி வாய்ந்த இந்த நன்னாளில் அனைவரும் பயனடைய வேண்டும் என்பதற்காகவே சொல்லப்பட்டுள்ள பதிவு இது.

- Advertisement -