தற்போது நவராத்திரியானது நடந்து கொண்டிருக்கிறது. நிறைய வீடுகளில், கோவில்களில் எல்லாம் கொலு பொம்மைகள் அலங்காரத்தோடு அடுக்கி வைத்து வழிபாடுகளும் நடந்து கொண்டிருக்க கூடிய நாட்கள் இது. இன்று 9ஆம் தேதி புதன்கிழமை. நவராத்திரியின் ஏழாவது நாள். இன்னும் நவராத்திரி முடிவதற்கு இரண்டு தினங்கள் இருக்கிறது.
உங்களுடைய வீட்டில் கொலு வைக்கவில்லை ஆனால் இந்த நவராத்திரி கொலுவில் உங்களுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று நினைத்து, உங்களுடைய மனதில் நினைத்த வேண்டுதல்கள் நடக்க வேண்டும், பிரார்த்தனைகள் நிறைவேற வேண்டும் என்றால், இந்த நவராத்திரி முடிவதற்குள் செய்ய வேண்டிய ஒரு எளிமையான தானத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். உங்களுடைய வீட்டில் கொலு வைக்கவில்லை என்றாலும் சரி, இந்த நவராத்திரி வழிபாட்டை நிறைவாக மேற்கொண்ட பலனை பெறக்கூடிய அளவுக்கு இந்த வழிபாட்டிற்கு சக்தி அதிகம் என்று சொல்லலாம்.
நவராத்திரியில் கொலு பொம்மை தானம்
உங்களுடைய வேண்டுதல் என்ன. முதலில் அதை முடிவு செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க வேண்டுமா? அல்லது உங்களுக்கே திருமணம் நடக்க வேண்டுமா. குழந்தைகள் நன்றாக படிப்பில் சிறந்து விளங்க வேண்டுமா. அல்லது உங்கள் கடன் சுமை தீர வேண்டுமா. குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுமா, அல்லது உங்களுக்கு தைரியம் வர வேண்டுமா, கோழைத்தனம் விலக வேண்டுமா, இப்படி உங்களுக்கு என்ன தேவையோ அந்த ஒரு விஷயத்தை மட்டும் துர்க்கை அம்பாளிடம் கேளுங்கள். அந்த வேண்டுதல் நிறைவேற பிரார்த்தனையும் செய்யுங்கள்.
உங்களுக்கு என்ன தேவை இருக்கிறதோ அது சம்பந்தப்பட்ட பொம்மையை வாங்கி கொண்டு போய் கொலு வைத்திருப்பவர்கள் வீட்டில் தானமாக கொடுக்க வேண்டும். நீங்கள் வாங்கிய கொலு பொம்மையை அந்த படிக்கட்டில் வைத்து மனம் குளிர பார்க்க வேண்டும். கோவிலில் கொலு வைத்திருந்தாலும் அந்த கோவிலுக்கு நீங்கள் பொம்மை வாங்கி தானம் கொடுக்கலாம். நீங்கள் என்ன நினைத்து எந்த பொம்மையை வாங்கிக் கொண்டு போய் அந்த கொலு படியில் வைக்கிறீர்களோ, அந்த வேண்டுதல் அடுத்த வருடத்திற்குள் நிச்சயம் நிறைவேறிவிடும் இதுதான் பரிகாரம்.
என்ன பொம்மையை வாங்கிக் கொண்டு போய் வைப்பது. திருமணம் நடக்க வேண்டும் என்றால் திருமணம் கோலத்தில் இருக்கும் பொம்மையை வாங்கிக் கொண்டு போய் வையுங்கள். ஆரோக்கியம் வேண்டும் என்றால் துர்க்கை அம்பாளை வாங்கி கொண்டு போய் வைக்கலாம்.
அல்லது மாரியம்மன் சிலையை வாங்கிக் கொண்டு போய் வைக்கலாம். நன்றாக படிக்க வேண்டும் என்றால் சரஸ்வதி தேவி பொம்மை, பணம் தேவையா குபேரர் பொம்மை, கடன் தீர வேண்டுமா குபேரர் பொம்மை, மன தைரியம் வேண்டுமா சக்தி தேவி, அனுமன், பிரத்தியங்கிரா தேவி, வாராஹி இப்படி உக்கிர தெய்வங்களை வாங்கி வைக்கலாம். இப்படி உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு பொம்மை வாங்கி கொண்டு போய் அந்த கொலு படியில், வேண்டுதலை நினைத்துக் கொண்டே வைக்கும் போது நிச்சயம் அந்த வேண்டுதல் பலிக்கும்.
இதையும் படிக்கலாமே: விரும்பிய வேலை கிடைக்க காளியம்மன் வழிபாடு
இந்த வருடம் இந்த பரிகாரத்தை முயற்சி செய்துதான் பாருங்களேன். ஒரே ஒரு கொலு பொம்மை வாங்குவதில் பெரிய செலவாகப் போவது கிடையாது. நம்பிக்கையோடு, நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். அடுத்த நவராத்திரிக்குள் உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் வலிக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.