நவராத்திரியின் நற்பலன்கள்! வீட்டில் தன தானியங்கள் நிறைந்திருக்க, இரண்டாம் நாள் வழிபாட்டை சுலபமாக எப்படி செய்வது?

rajajaeshwari
- Advertisement -

நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் துர்க்கை அம்மனுக்காக கொண்டாடப்படுகிறது. துர்க்கை அம்மனை, மகேஸ்வரி எனும் பெயரைக் கொண்டு, முதல் நாளில் வழிபட வேண்டும். அந்த வரிசையில் இரண்டாவது நாள், எந்த அம்மனின் பெயரைக் கொண்டு நவராத்திரி தினத்தைக் கொண்டாட வேண்டும், வீட்டில் தனம் தான்யம் நிறைவாக இருக்க, சுலபமான முறையில், அம்பாள் வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும், என்பதை பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாம் எல்லோரும், துர்கை அம்மன் என்ற பெயரில் வழிபட்டுக் கொண்டிருக்கும், இந்த அம்பிகைக்கு, அந்த காலத்திலிருந்தே கொற்றவை என்ற மற்றொரு பெயரும் உண்டு.

rajajaeshwari1

கொற்றவை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த துர்க்கை அம்மனை, மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன்பாக வழிபடுவார்கள் என்ற வரலாற்றுச் சுவடுகளும் இருக்கின்றது. அதாவது போருக்கு செல்வதற்கு முன்பு, கொற்றவையை, துர்க்கா தேவியை வணங்கி விட்டு சென்றால், போரில் வெற்றி அடைவார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களிடத்தில் இருந்தது. அதேசமயம் துர்க்கை அம்மனை காக்கும் கடவுளாக வழிபட்டு வந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

- Advertisement -

வெற்றியைத் தரக்கூடிய துர்க்கை அம்மனை நவராத்திரி தினத்தின் இரண்டாவது நாளில் ராஜராஜேஸ்வரி என்ற பெயரை கொண்டு வழிபட வேண்டும். இந்த ராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு கட்டங்களை வடிவமாக கொண்டிருக்கும் கோலங்களை உங்களுடைய வீட்டு வாசலில் போடலாம். வாசனை மிகுந்த முல்லைப் பூ ராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு உறியது.

kolam

வாசனை மிகுந்த மருவு இலை கிடைத்தால் ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு மிகவும் உகந்ததாக சொல்லப்பட்டுள்ளது. மஞ்சள் நிறத்தில் உண்டான பழங்களை நைவேத்தியமாக வைக்கலாம். மஞ்சள் நிற வாழைப்பழம், மாம்பழம் இப்படியான பழங்களையும் வைத்து அம்பாளை வழிபடலாம். நைவேத்தியமாக புளி சாதம் செய்ய வேண்டும்.

- Advertisement -

இன்றைய தினம் வீட்டில் இருக்கும் பெண்கள் மஞ்சள் நிற ஆடையை அணிந்துகொண்டு, வீட்டில் வரும் சுமங்கலிப் பெண்கள், கன்னிப் பெண்களுக்கு மஞ்சள் நிற வளையலை தானமாக கொடுத்து, வெற்றிலை, பாக்கு, பூ சேர்ந்த தாம்புலத்தோடு இரண்டு மஞ்சள் கிழங்குகளை தானம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முடிந்தால் மஞ்சள் நிற ரவிக்கை துணியை, தாம்புலத்தோடு சேர்த்து தானமாக கொடுக்கலாம். ஒரு ஏழை பெண்மணிக்கு மஞ்சள் நிற புடவை, ரவிக்கை துணியை கொடுப்பது நம்முடைய வீட்டில் இருக்கும் பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது.

maruvu-leafe

இரண்டாவது நாளான இன்று, ஏழைப் பெண்ணுக்கு செய்யக்கூடிய வஸ்திர தானம், உங்கள் வீட்டு பெண்களை கஷ்டமில்லாமல் வாழ வழி வைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் விரிவாக சொல்ல வேண்டும் என்றால், உங்களுடைய வீட்டில் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டுமென்றால், அந்தக் கன்னிப் பெண்ணின் கையால், சுமங்கலிப் பெண்களுக்கும் மஞ்சள் நிற வஸ்திர தானம் செய்வது மிகவும் நல்லது.

- Advertisement -

yellow-saree

உங்களுடைய வீட்டில் தன தானியத்திற்கு எந்த வகையிலும் எந்த சூழ்நிலையிலும் குறைபாடு வராமல் இருக்க, இரண்டாம்நாள் வழிபாட்டை இந்த முறைப்படி, உங்கள் அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களோடு சேர்ந்து, செய்வது உங்களுடைய குடும்பத்திற்கு நன்மையை தேடித்தரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நவராத்திரியின் நற்பலன்கள்! வீட்டில் வறுமை நீங்க, முதல் நாள் வழிபாட்டை சுலபமாக எப்படி செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -