நவராத்திரியின் நற்பலன்கள்! சுகபோகமான வாழ்க்கையை பெற, நவராத்திரியின் 7ஆம் நாள் வழிபாட்டை நம்முடைய வீட்டில் சுலபமாக எப்படி செய்வது?

saraswathi
- Advertisement -

மலைமகளது வழிபாட்டையும், அலைமகளது வழிபாட்டையும் முதல் 6 நாட்களில் நிறைவு செய்து விட்டோம். நவராத்திரியின் ஏழாவது நாள், கலைமகள் என்று சொல்லப்படும் சரஸ்வதி தேவியை வழிபட தொடங்க வேண்டிய நாள். இந்த ஏழாவது நாளில், எல்லா வகையான கலைகளுக்கும் முழுமுதல் அரசியாக விளங்கும் சரஸ்வதி தேவியை தான், மீதம் இருக்கக்கூடிய மூன்று நாட்களிலும் வழிபட போகின்றோம். சரஸ்வதி தேவியை வழிபட போகின்ற, நவராத்திரியின் ஏழாம் நாளை, நம் வீட்டில் சுலபமான முறையில் எப்படிக் கொண்டாடப் போகிறோம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sambavi

சரஸ்வதி தேவி என்றாலே கல்விக்கு உரியவள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். நம் வீட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் சரஸ்வதி தேவியை நினைத்து, இந்த  வழிபாட்டில் கலந்து கொண்டால், அவர்களது ஞாபக சக்தியானது அதிகரிக்கும். ஞானமும், அறிவாற்றலும், திறமையும், புத்திக்கூர்மையும் மேலும் மேன்மை அடையும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இன்றைய தினம் சரஸ்வதி தேவியை ‘சாம்பவி தேவி’ என்ற பெயர் கொண்டு வழிபட வேண்டும். குழந்தைகளை உங்களுடைய வீட்டு பூஜை அறையில் அமர செய்து, சாம்பவி தேவியை மனதார வேண்டிக்கொண்டு, வாசனை நிறைந்த பூக்களால், உங்கள் குழந்தைகளது கையாலேயே, உங்கள் வீட்டில் இருக்கும் சரஸ்வதி தேவியின் திருவுருவப் படத்திற்கு அர்ச்சனை செய்யவேண்டும். ‘ஓம் சாம்பவி தேவியே நமஹ’ என்ற மந்திரத்தை 11 முறை குழந்தைகள் வாயால் உச்சரிக்க செய்யுங்கள்.

saraswathi11

அடுத்தபடியாக உங்கள் வீட்டின் அக்கம்பக்கம் இருக்கும் குழந்தைகளை, உங்களுடைய வீட்டிற்கு அழைத்து, அவர்கள் படிப்பதற்கு தேவையான பேனாவோ, பென்சிலோ, நோட்டுப் புத்தகமோ ஏதாவது ஒன்றை அன்பளிப்பாக கொடுக்கலாம். உங்களால் முடிந்த வரை சிறிய அளவு பரிசாக இருந்தாலும், அது அவர்களுடைய கல்விக்கு பயன்படும் பரிசாகக் கொடுத்து, அவர்கள் சாப்பிடுவதற்கு ஏதேனும் பிரசாதம், வெறும் சுண்டல் செய்து கொடுத்தாலும் சரிதான்.  இன்று குழந்தைகளுக்காக செய்யக்கூடிய இந்த சிறிய தானமானது, உங்கள் சந்ததியில் வரக்கூடிய குழந்தைகளுக்கு அறிவாற்றலையும், திறமையும் ஞாபக சக்தியும் நிறைந்திருக்க உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -

சாம்பவி தேவிக்கு உரிய கோலம், சங்கு கோலம். தாழம்பு கிடைத்தால் சரஸ்வதி தேவிக்கு இன்றைய தினம் தாழம்பூவால் அலங்காரம் செய்யலாம். நவராத்திரியின் 7ஆம் நாள் அம்பாளுக்கு, பேரிச்சை பழம், எலுமிச்சை சாதம், இவைகளை நைவேத்தியமாக வைக்க வேண்டும். இன்றைக்கு அம்பாளுக்கு உகந்த நேரமாக இளஞ்சிவப்பு நிறம் சொல்லப்பட்டுள்ளது.

thazambu

இன்றைய தினம் வீட்டில் இருக்கும் பெண்களும் இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொள்ளலாம்.  உங்களுடைய வீட்டிற்கு வந்து, பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கும், இளஞ்சிவப்பு நிறத்தில் வளையல்களை தானமாக கொடுக்கலாம். இளஞ்சிவப்பு நிற ரவிக்கை துணி தானம் கொடுப்பது மிகவும் நல்லது.

- Advertisement -

அம்பாளை வேண்டி மனநிறைவோடு பூஜை செய்து, இந்த ஏழுவது நாள் வழிபாட்டை நிறைவு செய்தால், அவர்களுக்கு சுகபோகமான வாழ்க்கை கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. சுகபோகமான வாழ்க்கை என்றால், கோடிக்கணக்கில் பணம் கிடைக்குமா என்று சிந்திக்காதீர்கள். கவலைகள் இல்லாத நிம்மதியான, துயரம் இல்லாத, நோய்நொடி இல்லாத, அளவான செல்வத்தோடு வாழும் வாழ்க்கையும் சுகமான வாழ்க்கை தான் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நவராத்திரியின் நற்பலன்கள்! மனக்கவலை நீங்க நவராத்திரியின் 6ஆம் நாள் வழிபாட்டை நம்முடைய வீட்டில் சுலபமாக எப்படி செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -