குபேரனுக்கு நவதானியங்களை இப்படி செய்தால் செல்வத்திற்கு குறைவு என்பதே வராது தெரியுமா?

kuberan-navathaniyam
- Advertisement -

செல்வாதிபதி குபேரனுக்கு திடீர் அதிர்ஷ்டங்களையும், பண வரவையும் கொடுக்கும் ஆற்றல் உண்டு. குபேரனை வேண்டி வணங்குபவர்களுக்கு செல்வம் வளர்வதில் குறைவிருக்காது என்பது பக்தர்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. எத்தகைய செல்வங்களும் இவருடைய அருள் இல்லாமல் எவருக்கும் கிடைப்பதில்லை. அப்படியிருக்க செல்வம் குறைவில்லாமல் நிறைய நவதானியத்தை வைத்து என்ன செய்ய வேண்டும்? என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

kubera

குபேர சம்பத்து என்று கூறப்படும் சொத்துக்கள் பொதுவாக எப்பொழுதும் எவரிடமும் நிரந்தரமாக நிலைப்பது இல்லை. இவ்வுலகில் மூன்று வகையான செல்வங்கள் நமக்கு கிடைக்கப் பெறும். அதில் குபேர செல்வம் என்பது திடீரென வரும் செல்வம் ஆகும். இந்த செல்வம் எல்லோருக்கும் எளிதாக வாய்ப்பது இல்லை. அப்படியான செல்வத்தை நமக்கு எளிதாக கிடைக்க செய்யக்கூடிய பரிகாரம் தான் இது.

- Advertisement -

குபேரன் அருள் பெற வியாழன் கிழமைகளில் குபேர தீபமேற்றி வழிபட வேண்டும் என்பது நடைமுறை வழக்கம். அது போல சொர்ண அர்ச்சனை செய்தும் குபேரனை வழிபட்டால் சுவர்ணங்களுக்கு குறைவிருக்காது. 21, 48, 51 அல்லது 108 ஆகிய எண்ணிக்கையில் நாணயங்களை வைத்து குபேரனுக்கு ஒவ்வொரு நாணயங்களாக அர்ச்சனை செய்து வியாழன் கிழமையில் பூஜிப்பது நம்மிடம் தங்க நகைகளை நிலைக்கச் செய்யும்.

kuberan

கட்டி கட்டியாக தங்கம் இருந்தாலும் அது எத்தனை பேருக்கு வீட்டில் நிலைத்து இருக்கும்? பெரும்பாலான நகைகள் அடகு கடைகளுக்கு எளிதாக சென்று விட்டு வரும். குண்டுமணி அளவிற்கு தங்கம் இருந்தால் கூட அது நம்மிடம் தங்குவதற்கு ஒரு யோகம் வேண்டும். அந்த யோகத்தை பெறுவதற்கு சொர்ண பைரவரை வணங்குவது நல்ல பலன்களைக் கொடுக்கும். அது போல குபேர பகவானுக்கு சொர்ண அர்ச்சனை செய்வதும் சிறப்பான பலன்களை பெற்றுத்தரும்.

- Advertisement -

குபேர பகவானுக்கு நவதானியங்கள் படைத்து வழிபடுவது அடுத்த தலைமுறை வரை செல்வத்தை வளரச் செய்யுமாம். அப்படி நாம் என்ன செய்ய வேண்டும்? வியாழன் கிழமையில் குபேர பகவான் படத்தை வைத்து அல்லது சிலையை வைத்து இந்த பூஜையை துவங்க வேண்டும். வளர்பிறை வியாழன் கிழமையில் துவங்குவது நல்லது. இதே போல 21 வியாழன் கிழமைகள் செய்து வர செல்வமானது பெருகிக் கொண்டே செல்லும் என்பது நம்பிக்கை.

kalasam

ஒரு செம்பு அல்லது பித்தளை கலசம் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் போன்றவற்றை இட்டு அலங்கரித்துக் கொள்ள வேண்டும். வாசனை மிகுந்த மலரால் கலசத்தின் வாய் பகுதியை சுற்றி கொள்ள வேண்டும். பின்னர் அதில் நவதானியங்களை ஒன்றன் பின் ஒன்றாக நிரப்பிக் கொள்ள வேண்டும். நவதானியங்களில் ஒரு தானியம் கூட குறைவில்லாமல் ஒன்பது தானிய வகைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக சிறிது சிறிதாக போட வேண்டும்.

Navathaniyam

இது தான் முதலில் போட வேண்டும் என்கிற வரைமுறை எதுவும் கிடையாது. எப்படி வேண்டுமானாலும் நீங்கள் போட்டுக் கொள்ளலாம். பின்னர் குபேரனுக்குரிய ஸ்லோகங்களை வாசித்து நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். குபேர விளக்கு வைத்திருப்பவர்கள் அதில் தீபம் ஏற்றலாம். பரிகாரம் நிறைவுபெறும் வரை அந்த கலசத்தை அப்படியே வைத்திருந்து ஒவ்வொரு வியாழன் கிழமை அன்றும் இப்படி செய்து வர வேண்டும். 21வது வாரம் பூஜைகள் செய்து முடித்த பின் மாலை வேளையில் ஏரி, குளங்களில் நவதானியங்களை கரைத்து விட்டு வர வேண்டும். இப்படி செய்ய செல்வ சம்பத்துக்கள் குறைவில்லாமல் நிறையமாம்.

- Advertisement -