தொட்டதெல்லாம் வெற்றி அடைந்து, ‘அதிர்ஷ்டம்’, உங்கள் பின்னாலேயே வரும். இந்தச் செடி உங்க வீட்டு தொட்டியில் இருந்தா!

nayuruvu-(1)

நீங்கள் செய்யும் தொழில், அதிக லாபத்தைக் கொடுக்க வேண்டும் என்றாலும், பண வரவு அதிகரிக்க வேண்டும் என்றாலும், நீங்கள் எல்லோருக்கும் விருப்பமான மனிதராக மாற வேண்டும் என்றாலும், உங்கள் வீட்டுத் தொட்டியில் இந்த ஒரு செடியை வைக்கணும். அது எந்த செடி? அந்த, செடியோட வேரை எந்த முறைப்படி பயன்படுத்தினால், நீங்கள் அதிர்ஷ்டசாலிகளாக மாற முடியும், என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

nayuruvi

உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் அள்ளித்தர போகின்ற செடி வேறு எதுவும் இல்லைங்க! நாயுருவி செடி. இந்தச் செடியை வளர்ப்பதற்கு தேவையான விதைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி உங்கள் வீட்டுத் தொட்டியில் போட்டாலே போதும். நன்றாக வளர்ந்துவிடும்.

இந்த செடியின் வேரை நம்முடைய தேவைக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால், இதற்கு காப்புகட்டி மந்திரம் ஓதி, பல கட்டுப்பாடுகளோடு தான், இந்த நாயுருவிச் செடியில் இருந்து வேர் எடுக்க வேண்டும்., ஆனால் வியாழக்கிழமை அன்று காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் 3.30 மணியிலிருந்து 4.30 மணிக்குள் இந்த வேர் எடுப்பதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.

nayuruvi-1

உங்கள் வீட்டு தொட்டியிலேயே, இந்த செடி இருக்கும் பட்சத்தில், சுலபமாக அதிகாலை வேளையில் இந்த செடியின் வேரை, பறித்து எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். வியாழக்கிழமை அதிகாலை, பிரம்ம முகூர்த்த வேளையில் இந்த செடியின் வேரை, செடியோடு பிடுங்கி எடுக்க வேண்டும். நகம் படக்கூடாது. கத்தி வைத்து விடக்கூடாது. கையில் தான் பிடுங்கி எடுக்க வேண்டும்.

- Advertisement -

அந்த செடியில் வேர் பகுதியை நன்றாக தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, பிடுங்கிய உடன், வரும் பக்குவத்திற்கு வைத்துக்கொள்ளுங்கள். சுலபமாக எடுத்து விடலாம். (வேரை பிடுங்கி எடுக்கும் போது முழு வேரும் நமக்கு கிடைக்கவேண்டும். வேர் அறுபடக் கூடாது. எக்காரணத்தைக் கொண்டும்.) வேருடன் பிடுங்கி வைத்திருக்கும், அந்த செடியில் இருந்து வேர்ப்பகுதியை மட்டும் தனியாக உடைத்து எடுக்க வேண்டும். உங்களது விரல்களைக் கொண்டு, நகம் படாமல். அந்த வேரை, இரண்டு நாட்கள் நன்றாக வெயிலில் காய வைத்துக் கொள்ள வேண்டும்.

nayuruvi-vidai

அதன் பின்பு சிறிது மஞ்சள் தூளை தண்ணீரில் குழைத்து, அந்த வேரில் தடவி, ஒரு தாயத்தினுள் போட்டு, அந்த தாயத்தை மூடி, உங்கள் கைகளிலோ, உங்கள் கழுத்திலோ கட்டிக்கொள்ளலாம். கருப்பு கயிறு, சிவப்பு கயிறு இரண்டு கயிறும் பயன்படுத்தலாம். அப்படி செய்யும் பட்சத்தில், உங்களுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்படாது. பணவரவு அதிகரிக்கும். நீங்கள் எல்லோராலும் விரும்பத் தக்க மனிதராக மாறுவீர்கள். அதாவது முகவசீகரம் என்பது இருந்தால்கூட, நாம் தொடங்கும் செயல் பாடு கட்டாயம் வெற்றி அடையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்ல இருக்க, கண்ணுக்குத் தெரியாத எல்லா பிரச்சனைகளையும், இழுத்துக்கொண்டு வந்து, வெளியே போடும் சக்தி இந்த ஒரு பொருளுக்கு உண்டு.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have nayuruvi tamil. mooligai vasiyam tamil. nayuruvi uses. nayuruvi ver vasiyam