வறுமை இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டுமா? இந்த 1 பொருளை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டாலே போதும்.

perumal

மனிதர்கள் அனைவருமே வறுமை இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் கஷ்டங்கள் நம்மை பின்தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் ஒரு சிலரால் மட்டும் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்க முடிகிறதே! அது மட்டும் எப்படி? இந்த சந்தேகம் நம் எல்லோருடைய மனதிலும் இருக்கிறது. சிலர் வாழ்க்கையில் சந்தோஷத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கிறார்கள். சிலர் வாழ்க்கையில் மிகவும் துன்பப்பட்டு வருகிறார்கள். இவை அனைத்துமே நம்முடைய முன்ஜென்ம வினைகளால் தான் நிர்ணயிக்கப்படுகிறது.

nellaiyappar-temple

அதாவது போன ஜென்மத்தில் அடுத்தவர்களை ஏமாற்றி, துன்புறுத்தி, அடுத்தவரின் வயிற்றில் அடித்து, சொத்து சேர்த்தவர்கள், தவறான வழியில் சொத்து சேர்த்தவர்கள், கையில் நிறைய பணம் இருந்தும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யாதவர்கள், கோவில் சொத்தை கொள்ளை அடித்தவர்கள், என்று இப்படிப்பட்ட தவறுகளை செய்தவர்கள் தான், இந்த ஜென்மத்தில் வறுமை நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? அதுதான் உண்மை.

முதலில் இந்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக உங்களுக்கு வரக்கூடிய வருமானத்தில் சிறு தொகையை, உங்களை விட இயலாதவர்களுக்கு உதவி தொகையாக கொடுங்கள் ‘நாங்களே வறுமையில் இருக்கின்றோம். நாங்கள் ஒருவருக்கு உதவி செய்வதா?’ என்ற கேள்வியை கேட்காதீர்கள்.

மூன்று வேளை சாப்பாடு சாப்பிடும் அளவிற்கு வசதி இருப்பவர், ஒரு வேளை கூட சாப்பிட முடியாதவருக்கு உதவி செய்யலாம். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். நம் எல்லோருக்கும் சாப்பிட சாப்பாடு, இருக்க இடம், உடுக்க உடை இருக்கிறது. இதையும் தாண்டி சேமிப்பதுதான் கஷ்டம் வருகிறதே தவிர, அடிப்படைத் தேவைகளுக்கு முடிந்தவரை எந்த ஒரு குறைபாடும் இல்லாமல் தான் வாழ்ந்து வருகின்றோம். முதலில் இதற்கு அந்த இறைவனுக்கு நன்றியை சொல்லுவோம்.

- Advertisement -

சில குடும்பங்கள் நன்றாக வாழ்ந்து இருக்கும். அதாவது சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து இருக்கும். திடீரென்று வறுமையில் தள்ளப்பட்டு இருப்பார்கள். அதாவது ராஜ வாழ்க்கையை விட்டுவிட்டு, சாதாரண நடுத்தர நிலைமைக்கு வந்து இருப்பார்கள். ஒரு சிலருக்கு நடுத்தர வாழ்க்கை கூட இல்லாமல், மோசமான நிலைமைக்கு போய், வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள் முடிந்தவரை வாரம்தோறும் சனிக்கிழமை அன்று துளசி மாலை சாத்தி பெருமாளை வழிபட வேண்டும்.

Perumal

இரண்டாவதாக உங்களது வீட்டிலேயே வெள்ளை மொச்சை கொட்டையை 27 என்ற கணக்கில் எடுத்து, அதை வெள்ளை துணியில் வைத்து கட்டி, அந்த முடிச்சை, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, தினந்தோறும் தீப ஆராதனை காட்டி உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் நீங்க வேண்டும் என்றும், பூர்வஜென்மத்தில் செய்த பாவங்கள் நீங்க வேண்டும் என்றும், உங்களது குடும்பம் என்றும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட கூடாது என்றும், மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.

mochai

தினம்தோறும் இந்தப் பிரார்த்தனையை உங்கள் மனதார செய்து வந்தால், கஷ்டத்திற்கு கட்டாயம் விடிவு காலம் வரும். இந்த முடிச்சினை வாரம் ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும். உள்ளே இருக்கும் மொச்சைகளை எடுத்து காக்கை குருவிகளுக்கு உணவாக செலுத்திவிட்டு, துணியை துவைத்து, மீண்டும் புதிய மொச்சைகளை வைத்து முடிச்சாக கட்டி வழிபட வேண்டும். இந்த பரிகாரத்தை எந்த கிழமையில் வேண்டும் என்றாலும் செய்யலாம். வறுமையில் இருப்பவர்களுக்கு, வறுமை நீங்கும். செல்வந்தர்களாக இருப்பவர் மேலும் மேலும் செல்வ வளத்தை சேர்க்கலாம். இப்படியாக தொடர்ந்து 11 வாரம் செய்தால் நல்ல பலனை உணரலாம்.

இதையும் படிக்கலாமே
மனதில் நினைத்த வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ள, ராமநவமி அன்று இப்படித்தான் விரதம் இருக்க வேண்டும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Varumai neenga pariharam. Varumai in Tamil. Varumai neenga Tamil. Varumai neenga valipadu Tamil. Veetil varumai neenga.