கடனைத் திருப்பித்தர, பணத்தை சீக்கிரம் சேமிக்க வேண்டுமா? ரகசிய சேமிப்பு சூட்சமம்.

date-hundi

பணப் பிரச்சனை இல்லாதவர்கள் யாருமே இந்த உலகத்தில் இருக்க முடியாது. பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, கஷ்டப்படும் சமயத்தில், கடனை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம். நாம் வாங்கிய கடன் தொகையானது சின்ன அளவில் இருந்தால், சுலபமாக திருப்பிக் கொடுத்துவிடலாம். அதுவே லட்சக்கணக்கில் இருந்தால், கொஞ்சம் கஷ்டம் தான். கடன் கொடுத்தவர் பணத்தை மொத்தமாக தான் நமக்கு கடனாக தந்திருப்பார். அந்த பணத்தை நாம் சிறு சிறு பகுதிகளாக பிரித்து திருப்பித் தரவேண்டும் என்றால் சிலர் ஒத்துக் கொள்வார்கள். சிலர் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். “என்னிடமிருந்து எப்படி மொத்தமாக வாங்கினாயோ, அப்படியே மொத்தமாக திருப்பி தர வேண்டும்”. என்று கூறிவிடுவார்கள். கடன் கொடுத்தவர் பேசுவதில் எந்த தவறும் இல்லையே! கடன் வாங்கியவர் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். கடனை வாங்கிய பின்பும் வட்டியும் கட்ட முடியாமல் அசலையும் கட்டமுடியாமல் தவித்து வரும் பலபேருக்கு இந்த ஒரு சிறிய பரிகாரம்.

money

கையில் இருக்கும் பணம் செலவாகாமல் இருக்க வங்கியில் போட்டு வைக்கலாம். இது ஒரு வழி. ஆனால் அந்தப் பணத்தை ஒரு சிறப்பான முறையில் சேர்த்து வைக்கும் போது மேலும் மேலும் சீக்கிரமாக பணம் சேர்ந்து, கடனை முழுமையாக திருப்பி அடைத்து விட முடியும். அது என்ன வழி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். முதலில் செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை வரும் குளிகை நேரத்தில் உங்களது கடன் தொகையில் ஒரு பகுதியை திருப்பி கொடுத்து விடுங்கள். செவ்வாய்க்கிழமை பகல் 12.00-1.30 வரை குளிகை நேரம். சனிக்கிழமை காலை 6.00-7.30வரை குளிகை நேரம்.

நமக்கு வரும் வருமானத்தில் இருந்து  ஒரு தொகையை, கடனை திருப்பித் தருவதற்காக சேமித்து வைப்போம். அந்தத் தொகையை ஒரு சிவப்பு உண்டியலில் அல்லது சிவப்பு துணியிலோ, தினம் தோறும் வரும் குளிகை நேரத்தில் சேமித்து வைக்க வேண்டும். சிவப்பு உண்டியலாக இருந்தால் குளிகை நேரம் பார்த்து அதில் ஒரு தொகையை போட்டு வைத்துக் கொண்டே வாருங்கள். சிகப்பு துணியாக இருந்தால் குறுகிய நேரத்தில் அந்த பணத்தை அதில் வைத்து நன்றாக மடித்து வைத்துக் கொள்ளலாம்.

hundi

உண்டியலில் பணத்தை போடும் போதோ அல்லது சிவப்புத் துணியில் பணத்தை வைத்து மடிக்கும் போதோ நீங்கள் கடனாக பணம் பெற்று இருப்பீர்கள் அல்லவா, அவரது பெயரை உச்சரித்து சேமித்து வரவேண்டும். இந்த சேமிப்பது நிச்சயம் அதி வேகமாக உயரும். அதாவது கடனை திருப்பித் தரும் தொகையை நீங்கள் சுலபமாக, விரைவாக சேமித்து விட முடியும். உங்களுக்கு எப்போதெல்லாம் வருமானம் வருகிறதோ அதில் சிறு தொகையை இப்படி சேமித்து வைத்து தான் பாருங்களேன்! மூன்று மாதத்திலேயே நல்ல முன்னேற்றம் இருப்பதை உங்களால் உணர முடியும். ஒரு சிகப்பு துணி பணத்தை அதிவேகமாக சேர்த்து விடுமா? என்ற சந்தேகத்தோடு பரிகாரத்தை தயவுசெய்து செய்யாதீர்கள். முடியும் என்ற நம்பிக்கையோடு செய்து பாருங்கள். உங்கள் கடனை நிச்சயமாக சீக்கிரமே திருப்பி கொடுப்பீர்கள்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் இருப்பவர்களது பிரச்சினைகள் நீங்கி, ஐஸ்வர்யத்தோடு வாழ 2 கோதுமை போதும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Kadan adaika nalla neram Tamil. Kadan prachanai theera pariharam in Tamil. Kadan theera pariharam Tamil. Kadan thollai neenga