வாழ்க்கையில் நீங்கள் இழந்த எல்லாவற்றையும் சுலபமாக மீட்டெடுக்க இந்த 2 தீபங்களை, ஒருமுறை ஏற்றினால் மட்டுமே போதும்.

thulasi
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவோ இழுந்து இருப்போம். ஆனால் விடாமுயற்சியையும் தன்னம்பிக்கையை மட்டும் என்றுமே இழக்கக் கூடாது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும்போது இழந்தவற்றை எல்லாம் திரும்பவும் மீட்கும் காலம் என்று, நிச்சயம் நமக்காக ஒன்று வரும். இழந்ததை மீட்டெடுப்பதற்கு ஆன்மீக ரீதியாக சொல்லப்பட்டுள்ள சுலபமான பரிகாரங்களில் இதுவும் ஒன்று. நீங்கள் இழந்த சொத்தாக இருந்தாலும் சரி பணம் காசாக இருந்தாலும் சரி, அல்லது ஏதோ ஒரு காரணத்தினால் உங்களுடைய விடாமுயற்சியையும் தன்னம்பிக்கையையும் நீங்கள் இழந்தாலும் சரி, அதை திரும்பவும் மீட்பதற்கு இந்த இரண்டு தீபத்தை உங்களுடைய வீட்டில் ஒருமுறை ஏற்றி பாருங்கள்.

deepam

இந்த தீபத்தை ஒருமுறை ஏற்றிய பின்பு உங்களுடைய மனதில் திருப்தியும், தன்னம்பிக்கையும் அதிகரித்தால் இந்த வழிபாட்டை உங்களுடைய வீட்டில் தொடர்ந்து செய்து வரலாம். அதாவது செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினம், அமாவாசை தினம், இப்படி இந்த பூலோகத்திற்கு பிரபஞ்சத்தின் சக்தியை அதிகமாக ஈர்த்துக் கொடுக்கக்கூடிய விசேஷ தினங்களில் இந்த தீபத்தை ஏற்றுவது மிகவும் சிறப்பானது.

- Advertisement -

நம்மில் பல பேருக்கு தெரிந்த சில பேருக்கு தெரியாத, நெல்லிக்காய் தீபத்தை பற்றி தான் இன்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நிறைய பேருக்கு இந்த தீபத்தை பற்றி தெரிந்திருக்கலாம். இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

nelli-deepam

நெல்லிக்கனி வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டத்தை போக்கக் கூடியது. மகாலட்சுமி அம்சம் பொருந்தியது. இது நாம் எல்லோரும் அறிந்ததே! இந்த நெல்லிக்கனிகளில் இரண்டு பெரிய நெல்லிக்கனிகளை வாங்கி வைத்துக் கொண்டு, அதன் காம்பு பக்கத்தை மட்டும் நீக்கிவிட்டு, அந்த காம்பு பக்கத்தில் உள்ள நெல்லிக்காய்களையும் நீக்கிவிட்டு சிறிய துளை ஒன்றை போட்டுக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

கொஞ்சம் ஆழமாக இருந்தால் போதும். இந்த தீபம் சிறிது நேரம் தான் எரியும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. அந்த சிறிய குழிக்குள் நல்லெண்ணெயை விட, நெய் ஊற்றுங்கள். நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு, திரித்து தீபத்தை ஏற்றி உங்கள் வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமியின் திருஉருவப் படத்திற்கு முன்பாக ஏற்றலாம். அல்லது பெருமாளின் முன்பும் இந்த தீபத்தை ஏற்றுவது தவறு கிடையாது.

mahalashmi1

உங்களுடைய வீட்டில் துளசி செடி இருக்கும் பட்சத்தில், துளசி செடிக்கு இந்த நெல்லிக்கனி தீபத்தை ஏற்றி வைத்தால், வீட்டில் இருக்கும் கஷ்டம் 3 வாரங்களில் குறைவதை கண்கூடாக பார்க்கலாம். அதாவது வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமையில் மட்டும் துளசி செடிக்கு முன்னால் நெல்லி தீபம் போட்டு பாருங்கள்.

- Advertisement -

nellikai

இந்த தீபம் தாம்புல தட்டில் வைத்தாலும் படிய நிற்காது என்ற காரணத்தினால், மண் அகல் விளக்கின் மேல் இந்த நெல்லிக்காய்களை வைத்துவிட்டு, அதன் பின்பு தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. ஒரு வீட்டில் கட்டாயமாக இருக்க வேண்டிய பொருட்களின் இந்த நெல்லிகாய்களும் ஒன்று. இது அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகாது. அதாவது காய்ந்து போகுமே தவிர, அழகி போகாது.

thulasi chedi

நெல்லிக்காய்களையும் வீட்டில் நிரந்தரமாக, தீராமல் வைத்துக் கொண்டு இருந்தாலும் வீட்டில் கஷ்டம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. நம்பிக்கையோடு நெல்லிக்காய்களை கொண்டு இரண்டு தீபங்களை உங்களுடைய வீட்டில் ஏற்றி பாருங்கள். உங்களுடைய வீட்டின் அருகில் மகாலட்சுமி சன்னிதானம் கொண்ட கோவில் இருந்தால், அந்த கோவிலில் இந்த நெல்லிகாய் தீபங்களை ஏற்றினால் மேலும் நல்ல பலனைப் பெறமுடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
பெரியவங்க கையால ஆசீர்வாதம் பண்ணி கொடுக்கிற காசை நீங்க என்ன செய்வீங்க? அந்தக் காசை இப்படி மட்டும் செலவழிக்கக் கூடாது. வீட்டிற்கு தீராத கஷ்டத்தைக் கொடுத்து விடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -