இந்த ஃபேஸ் வாஷை பயன்படுத்தி முகம் கழுவி வந்தால், ஜென்ம ஜென்மத்திற்கும் முகப்பரு வரவே வராது. வந்த முகப்பருவும், வந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

face10
- Advertisement -

பெரும்பாலும் டீன் ஏஜ் வயதை தொடுபவர்களுக்கு இந்த முகப்பரு பிரச்சனை அதிகமாக இருக்கும். இது வயதினால் வரக்கூடிய பிரச்சனை. டீனேஜை கடக்கும் போது இந்த முகப்பரு பிரச்சனையையும் நாம் கடந்து செல்லலாம். அதை நினைத்து ரொம்பவும் கவலைப்படாதீங்க. முகப்பரு வந்தால் அதை கிள்ளி எடுத்து முகத்தை வீங்க வைத்து கஷ்டப்படாதீங்க. அது பாட்டுக்கு இருக்கட்டும். முகப்பரு வராமல் இருக்க இயற்கையான முறையில் நம் வீட்டிலேயே ஒரு ஃபேஸ் வாஷ் எப்படி தயாரிப்பது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்

முகப்பரு வந்தவர்கள் இந்த ஃபேஸ் வாஷை பயன்படுத்தினால் முகப்பரு சீக்கிரம் காணாமல் போய்விடும். முகப்பரு வந்த இடத்தில் தழும்பு கூட இருக்காது என்றால் பாருங்கள். முகப்பருவே முகத்தில் இல்லை என்றால் இந்த ஃபேஸ் வாஷை வைத்து முகம் கழுவி வந்தால் முகப்பரு வராமல் தடுக்கலாம். இந்த ஃபேஸ்வாஷ் தயார் செய்ய நாம் பயன்படுத்த போகும் பொருள் வேப்ப இலை. எல்லோருக்கும் இந்த வேப்ப இலை கிடைக்கும். வேப்ப இலை கிடைக்காத ஊர்களில் நீங்கள் இருந்தால் வேப்ப இலை பொடியை வாங்கி குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த குறிப்புக்கு இன்னொரு பொருளை நாம் பயன்படுத்த போகின்றோம். இது நுரை வருவதற்காக. பூந்திக்கொட்டை. நம் வீட்டின் அருகில் இருக்கும் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் இந்த பூந்திக்கொட்டை கிடைக்கும். வாங்க இந்த ஃபேஸ் வாஷை எப்படி தயாரிப்பது என்று இப்போது பார்த்துவிடலாம்.

முதலில் பூந்திக்கொட்டையை உடைத்து அதன் உள்ளே இருக்கும் கொட்டையை மட்டும் நீக்கி விடுங்கள். மேலே இருக்கக்கூடிய தோல் தான் நமக்கு தேவை. 3 லிருந்து 4 பூந்தி கொட்டைகளை உடைத்து தோலை மட்டும் எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு 1 பெரிய டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு கைப்பிடி அளவு வேப்ப இலைகளை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு, இந்த வேப்ப இலைகளை பூந்திக்கொட்டை தண்ணீரில் போட்டுக்கொள்ள வேண்டும். அதாவது 8 மணி நேரம் ஊறிய பின்பு பூந்துக்கொட்டை தண்ணீரோடு வேப்ப இலைகளை போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் இந்த தண்ணீரை கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்றாக நுரைத்து பொங்கி வரத் தொடங்கும். அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். 10 நிமிடங்கள் தண்ணீர் கொதிக்கட்டும் வேப்ப இலையில் இருக்கக்கூடிய சத்து அனைத்தும் இந்த தண்ணீரில் இறங்கி விடும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விட்டு ஒரு மூடி போட்டு இதை நன்றாக ஆற வையுங்கள்.

ஆறிய பின்பு இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்தால் 20 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இந்த தண்ணீரை நம்முடைய முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்ய பின்பு முகத்தை குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடுங்கள்.

உங்கள் முகத்தை உள்ளிருந்தே சுத்தம் செய்யக்கூடிய வேலையை இந்த ஃபேஸ் வாஷ் செய்யும். ஒரு நாளைக்கு காலை மாலை இரண்டு வேளை இந்த ஃபேஸ் வாஷில் முகம் கழுவி கொள்ளுங்கள். முற்றிலும் இயற்கையான இந்த ஃபேஸ் வாஷ் யாரும் மிஸ் பண்ணாதீங்க. முயற்சி செய்து பாருங்கள். சரும பிரச்சனை அனைத்திற்கும் நிரந்தரமாக நல்லதொரு தீர்வை கொடுக்கும்.

- Advertisement -