குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நீண்ட ஆயுள் பெறுவதற்கு வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய ஒரு பரிகாரம்! இது நோய் நீங்கி ஆயுள் கூடச் செய்யுமா?

perumal-thulasi-vegg
- Advertisement -

ஒரு மனிதன் சராசரியாக 120 ஆண்டுகள் வரை வாழ வேண்டும் என்பது இறைவன் தீர்மானித்த ஒரு விஷயமாகும். ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை! மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப நம்மை நாம் மாற்றிக் கொள்வதால் ஆயுளின் பாதியை கூட நாம் முழுமையாக அனுபவிக்க முடியாமல் போய் சேர்ந்து விடுகிறோம். ஒரு மனிதன் நீண்ட நாள் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும்? நோய் நொடிகள் எல்லாம் நீங்கி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு எளிதாக செய்யக்கூடிய பரிகாரம் என்ன? என்பதைத் தான் ஆன்மீக ரீதியாக இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்.

1896 இல் இந்தியாவின் வாரணாசியில் பிறந்து 125 ஆண்டு வரை ஆரோக்கியமாக வாழ்ந்த ஒருவர் சுவாமி சிவானந்தா. இவர் யோகா பயிற்சிக்காகவும், எளிய மக்களுக்காகவும் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தவர். ஒரு மனிதன் நீண்ட ஆயுள் பெறுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? எப்படி எல்லாம் இருக்க வேண்டும்? என்று தெரிந்து வைத்திருப்பது அவருடைய பலமாகும்.

- Advertisement -

நமக்கு எவ்வளவு பேர் எவ்வளவு சொன்னாலும் அதை இந்த காதால் கேட்டு விட்டு அந்த காதல் விட்டு விடுவது தான் வழக்கம். அதை உள்வாங்குவது என்பது செய்யும் பொழுது தான் நம்முடைய ஆரோக்கியம் நீடிக்கும். இருக்கும் ஒரு ஆயுளை மகிழ்ச்சியாகவும், மற்றவர்களுக்கு உபயோகம் உள்ளதாகவும் இருப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

வெறும் தரை அல்லது பாயில் படுத்து மரப்பலகையை தலையணையாக வைத்து உறங்குபவர் இவர். அதிகாலை 3 மணிக்கு எழும் வாடிக்கை உள்ளவர். அதன் பிறகு நாள் முழுவதும் ஏதாவது ஒரு வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பர். தினமும் யோகா செய்வது இவருடைய ஆயுள் நீட்டிப்புக்கு ஒரு முக்கிய காரணமாகும். ஒரு மனிதன் குறைந்தது ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது தியானம் மேற்கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

- Advertisement -

கொஞ்சம் கூட எண்ணெய் சேர்க்காமல் வெறும் வேக வைத்த உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும் இவருக்கு இன்று வயது 125. எண்ணெய், உப்பு, காரம், இனிப்பு ஆகியவற்றை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தி, வேக வைத்த காய்கறிகள், பழங்கள், தானியங்கள் ஆகியவற்றை உணவாகக் கொண்டு, பால், பால் சார்ந்த பொருட்களை தேவையான அளவுக்கு மட்டும் பயன்படுத்துவதால் ஒரு மனிதன் சராசரி ஆயுளைப் பெற முடியும். கண்டிப்பான ஒழுக்கமும், உடற்பயிற்சியும், சாதாரண உணவுகளும், நல்ல எண்ணங்களும் ஒரு மனிதனின் நீண்ட ஆயுளுக்கு காரணமாக அமைகிறது.

ஒரு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நீண்ட ஆயுள் பெறுவதற்கு பெருமாளுடைய துளசி வழிபாடு சிறந்த பரிகாரமாக இருக்கும். துளசி மாடம் வைத்திருப்பவர்கள் மரத்தை சுற்றிலும் மஞ்சள், குங்குமம் இட்டு நான்கு புறமும் தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும். மாடம் இல்லை என்றால் பன்னிரண்டு செங்கல்களை அடுக்கி அதில் மஞ்சள், குங்குமம் வைத்து, உள்ளே மணலைப் போட்டு துளசி செடியை வைக்க வேண்டும். பிறகு நான்கு புறமும் இதே போல விளக்கு வைத்து வழிபட வேண்டும்.

துளசி செடி மகாலட்சுமிக்கு இணையாக கூறப்படுகிறது. பெருமாளின் மனம் கவர்வதற்கு துளசி வழிபாடு நல்ல ஒரு பலனை தரும். பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பது, துளசி மந்திரங்களை உச்சரிப்பது நைவேத்தியமாக பெருமாளுக்கு பிடித்த உணவு பொருட்களை படைப்பது, தீப ஆராதனை காண்பிப்பது போன்றவற்றை செய்ய வேண்டும். இந்த பூஜையில் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். துளசி தீர்த்தம் வைத்து பூஜை நிறைவடைந்த பின் பிரசாதத்தை பகிர்ந்து உண்ண வேண்டும். இப்படி செய்வதால் எல்லோருடைய ஆயுளும் ஆரோக்கியத்துடன் நீளும் என்பது நம்பிக்கை.

- Advertisement -